(Reading time: 19 - 37 minutes)

2017 போட்டி சிறுகதை 85 - 2.2 - சுபஸ்ரீ

This is entry #85 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவிற்கான கதை...

எழுத்தாளர் - சுபஸ்ரீ

 Eyes

மைதி … எங்கும் அமைதி . . . கொடுமையான கொடூரமான அமைதி. எமன் கையில் பாசக் கயிற்றை வைத்துக் கொண்டு எந்த நொடி எவர் மேல் வீசலாம் என அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த அமைதியான வீட்டில் வங்கியில் இருந்து பெரும் தொகையை கொள்ளை அடித்த கும்பல் பணத்தோடு பதுங்கியிருந்தது. பல கொள்ளை செயல்களில் ஈடுபட்டிருந்த அந்த கும்பல் வெகு நாட்களாக போலீசில் சிக்காமல் தப்பிக் கொண்டிருந்தது. அந்த கும்பலை பிடிக்க காவல்துறை தனிப்படையை அமைத்தது.  காவல்துறை தனிப்படை  கொள்ளையர்கள் பதுங்கியிருந்த வீட்டை முற்றிலுமாக ஆக்கிரமித்தது. பொதுமக்களை அவர்கள் நலன் கருதி வெளியேற்றியது. கொள்ளைகாரர்களிடம் சில துப்பாகிகள் இருப்பது மட்டும் தெரிய வந்தது. அப்படையின் முக்கிய அதிகாரியான ராகவன் மெல்ல அவ்வீட்டின் கதவருகே  சென்றான். அவனோடு அப்படையை சேர்ந்த சிலர் அவன் பின்னால்  இருந்தனர். சத்தமில்லாமல் கதவை திறக்க முயற்சித்தான் முடியவில்லை.

உள்ளே ஐந்து பேர் இருப்பதாக தகவல் . . அது நம்பதக்க தகவல் என்று சொல்ல முடியாது. அவனுக்கு உயர் அதிகாரி சமிக்ஞை மூலம் உத்தரவு பிறப்பிக்க . . . ராகவன் அடுத்த நொடி கதவை நோக்கி நான்கைந்து முறை சுட்டான். கதவு திறந்துக் கொண்டது. உடனே உள்ளே செல்லாமல் கதவின் அருகேயுள்ள சுவற்றில் மறைந்துக் கொண்டான். உள்ளே பதற்றமான காலடி ஓசைக் கேட்டது. நொடி பொழுதில் வீட்டின் உள்ளே பாய்ந்து  சென்று  தவழ்ந்தபடியே சரமாரியாக சுட்டுக் கொண்டே முன்னேறினான்.

கொள்ளை கும்பலை சார்ந்த ஒருவன் ராகவன் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி மடிந்தான். மற்றொரு கொள்ளைகாரன் கையில் குண்டு பாய்ந்தது. வலியை பொருட்படுத்தாமல் அடுத்த கைக்கு துப்பாக்கியை மாற்றி சுட யத்தனித்தான் ராகவன் எழுந்து  காலால் அதை எட்டி உதைக்க கையிலிருந்த துப்பாக்கி எகிறி எங்கோ சென்று விழுந்தது. பின் ராகவனின் முஷ்டியும் கையும் அவனை பதம் பார்த்தது. அவன் மயங்கி விழுந்தான்.

அதற்குள் காவலற்கள் வீட்டின் உள்ளே சென்று மற்றவர்களோடு முழுவீச்சில் சண்டையை ஆரம்பித்தனர். கொள்ளைகாரர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. அனைவரும் வீழ்த்தப்பட்டனர். அப்போது ராகவன் பின் மண்டையில் பலமான அடி விழுந்தது. வலி வேதனையைவிட பின்னாலிருந்து தாக்குகிறானே துரோகி கோழை என கோபமோடு திரும்பி பார்த்தான். ஒரு கையில் குண்டடிப்பட்டு ரத்தம் ஒழுக மற்றொரு கையில் துப்பாக்கியால் ராகவன் தலையில் அடித்திருக்கிறான் கொள்ளைகார கிராதகன். துப்பாக்கியில் குண்டு இல்லை போலும். ராகவன் மனம் அப்போதுகூட யோசித்தது. குண்டு இருந்திருந்தால் இந்நேரம்  பரலோகம் சேர்ந்திருப்பான். ராகவன் அவன் கழுத்தை குறிநோக்கி தன் துப்பாக்கி டிரிக்கரை அழுத்த அவன் கதை முடிந்தது.

ராகவன் வலி தாங்க முடியாமல் பின் தலையில் கை வைத்து அழுத்தினான். கை முழுவதும் கொச கொச வென்று ரத்தம் பிசுபிசுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து மயங்கி சரிந்தான்.

மீண்டும் நினைவு திரும்பியபோது மருத்துவமனைக்கே உரிய வாசம் நாசியை துளைத்தது. தன்னை அடித்த கொள்ளைகாரன் முகம் மணக்கண்ணில் தோன்றியது. கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ ஒன்று  கண்ணில் கட்டி இருப்பதுபோல இருந்தது. உடம்பில் சொல்லமுடியாத வேதனை. சில இடத்தில் பிளாஸ்திரி ஓட்டி இருப்பதை உணர முடிந்தது. யார் யாரோ மெல்ல பேசும் சத்தம் கேட்டது.

“டாக்டர்” என மெல்ல அழைத்தான். “ராகவா” அம்மாவின் குரல் கேட்டது மிகவும் பயத்திலும் துயரத்திலும் இருக்கிறாள் என்பதை குரல் சொல்லாமல் சொல்லியது. அவன் தலையை வருடிக் கொடுத்தாள். “அம்மா” அடுத்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து கஷ்டம் கொடுக்கிறோமே என வேதனையாக இருந்தது. ராகவன் ஒரே மகன். அவன் அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். தாய்க்கு மகன் மகனுக்கு தாய் இதுதான் அவர்கள் குடும்பம். கண் கலங்கினாள் அம்மா சரஸ்வதி.

“அம்மா கண்ணுக்கு கட்டு போட்டிருக்காங்களா?”

“ஆமாடா கண்ணா”

“ஏன்? . . எப்ப கட்ட பிரிப்பாங்களாம்?”

“தெரியல டாக்டர் சொல்லுவாங்கப்பா” அவளுக்கு எல்லாம் தெரியும் இப்போது சொல்ல திராணி இல்லை

மிகவும் சோர்வாக காணப்பட்டான். மருந்தின் தாக்கத்தினால் உறங்கிவிட்டான்.

டுத்த சில நாட்களில் கொஞ்சம் தேறினான். டாக்டர் அவனை பரிசோதித்தர். அவனை பார்க்க உயர் அதிகாரிகள் சக நண்பர்கள் வந்தனர். அவர்களிடம் கொள்ளைகாரர்கள் பற்றி கேட்டுக் கொண்டான். பின்பு தனிப் படையினர்களின் நலன் விசாரித்தான். மூவர் இறந்துவிட்டனர் என்ற செய்தி அவனுக்கு வேதனையாக இருந்தது.

“கண்ண கட்டிக்கிட்டு கஷ்டமா இருக்குமா . . . ” சலிப்பான தொனியில் பேசினான்

“கொஞ்சம் பொருத்துக்கோப்பா”

“இன்னும் எத்தன நாளைக்குமா இப்படி எதையுமே பாக்காம இருக்கிறது?”

“வாழ்க்கை முழுவதும்” என மனதில் நினைத்து கண்ணீர் விட்டாள். பதில் வராத்தால் “நீ என்னமா பண்ற?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.