(Reading time: 19 - 37 minutes)

ச்சரியமா இருக்கு”

“ஆச்சரியமா .  .புரியல”

“இல்ல யார கேட்டாலும் பி.ஈனு கேட்டே பழக்கப்பட்டு போச்சா அதான் நீங்க தமிழ் லிட்ரேச்சர்னு சொன்னதும் ஆச்சரியமா இருக்கு”

“உண்மைதான்”

அப்பொழுதுதான் அவன் அறையில் அதிகம் தோனியின் படங்கள் ஓட்டபட்டிருந்ததை கவனித்தாள். ஒன்றில் தோனி புன்னகைத்தபடி, தோனி நடராஜர் போல ஓற்றை காலில் நின்று திரிசூலத்துக்கு பதில் பேட்டை பிடித்தபடி ஷாட் அடிப்பது போன்று, தோனி பேட்டை தூக்கி பிடித்து காட்டுவது, போன்று என விதவிதமாக இருந்தது.

“தமிழ் ரொம்ப பிடிக்குமோ?” எதாவது பேசவேண்டுமே என கேட்டான்

“ஆமா ரொம்ம்ம்மப பிடிக்கும் . . . உங்களுக்கு?” புன்னகைத்தாள்

“எனக்கு அம்மா, கிரிக்கெட், தோனி பிடிக்கும்” என யோசிக்காமல் சட்டென பதில் வந்தது.

“அதான் இத்தன தோனியா?” சிரித்துவிட்டாள் அவனும் சேர்ந்து சிரித்தான் ஆனால் உடனே

“முன்னாடி கிரிக்கெட் பாத்துக்கிட்டு இருந்தேன் இனிமே கமென்டிரி மட்டும்தான்” குரல் சோகமானது

“இப்பதானே ஒரு இருபது இருபத்தஞ்சி வருஷமா டிவில பாக்குறோம்  . . அதுக்கு முன்னாடி ரேடியோ கமென்டிரிதானே விடுங்க இதுல என்னயிருக்கு ..” அவனை தேற்ற முயற்ச்சிதாள். அவளால் அவன் வேதனையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிறிது நேரம் பேசிவிட்டு அம்மா கையினால் சுடசுட காப்பி குடித்துவிட்டு கிளம்பினாள். அடிக்கடி பள்ளியில் சந்தித்தாள். நாட்டு நடப்பை பற்றி பேசினாள். அவள் பேச்சில் அதிகம் கிரிக்கெட்டும் தோனியும் இடம்பிடித்திருந்தது.

ரு நாள் பள்ளியில் “மழை வருதா?” கேட்டான்

“ஆமா . .” என சொல்லிவிட்டு டக்கென அவன் கையை மழையில் நீட்டினாள் மழை சாரலில் கை நனைந்த சிலிர்போடு முதல் முறையாக அவளின் ஸ்பரிசம் அவனை என்னவோ செய்தது

“நல்லா இருக்கா?”                                           

“ரொம்ப நல்லா இருக்கு”

“இன்னிக்கு வீட்டுக்கு லேட்தான் . . . எனக்காக காத்துகிட்டு இருப்பார்”

“யார்?” என கேட்க தோன்றியது ஆனால் கேட்கவில்லை . . .   “அப்பாவா இல்ல  . . . படிச்சிட்டுதானே இருக்கா . . .” மனம் குழம்பியது. இன்னும் அவள் கையினுள் அவன் கை சிறைப்பட்டிருந்தது.

“சரி நான் கிளம்புறேன் மழை கொஞ்சம் விட்டுடுச்சு” என கிளம்பினாள்

“நாளைக்கு வருவீங்கதானே?” தினமும் அவளை பார்க்காமல் இல்லை இல்லை குரல் கேட்காமல் இப்பொழுதெல்லாம் இருக்க முடிவதில்லை.

“கண்டிப்பா வருவேன் .. பை”

“உங்க ஹஸ்பெண்டயும் நாளைக்கு கூட்டிட்டு வாங்களேன்” அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என தெரிந்து கொள்ள

“கண்டிப்பா கூடிட்டு வரேன் ஆனா நாளைக்கு முடியாது”

“ஏன்?” சுரத்தே இல்லாமல் கேட்டான்

“அதுக்கு முதல்ல கல்யாணம் ஆகனுமே” என்றாள் சிரித்துக் கொண்டே

“அப்பாடா” நிம்மதியாக இருந்தது. சந்தோஷத்தில் பதில் சொல்லமுடியாமல் புன்னகைத்தான். “நான் கிளம்புறேன்” சொன்னவளின் காலடி சத்தம்  கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்தது

ராகவனுக்கு மனதார ரம்யாவை பிடித்திருந்தது. அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்பது  நிம்மதியாக இருந்தது.

“ டேய் ராகவா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல . . உனக்கு கண்ணு தெரியாது . . யதார்த்தமா யோசி . . அவளுக்கு உன்ன பிடிக்குமா? அவளுக்கு உன் மேல இருக்கிறது கருணைதான் காதல் இல்ல. . சினிமால மட்டும்தான் கதாநாயகன் எப்படி இருந்தாலும் கதாநாயகிக்கு பிடிக்கும் . . உன்னோட பரிட்சை வரைக்கும்தான் ரம்யா வருவா” என அவன் மனசாட்சி அவன் காதலுக்கு அப்போதே 144 தடைஉத்தரவு பிறப்பித்தது.

இந்த எண்ணம் ராகவனின் உற்சாகத்தை குறைத்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்

மற்றொரு நாள் “நீங்க ஏன் திரும்ப கிரிக்கெட் ஆட கூடாது ராகவ்” ரம்யா ஆரம்பித்தாள். ராகவனை செல்லமாக ராகவ் என அழைத்தாள்.

“நானா இனிமேயா கிண்டல் பண்ணாதீங்க ரம்யா?”

“ஏன் ஆடினா என்ன . . சொல்லுங்க?”

“பிலைன்ட் கிரிக்கெட் கேள்வி பட்டிருக்கேன் ஆனா ” என இழுத்தவனை “கொஞ்சம் இருங்க வரேன்” என சென்றுவிட்டாள்.

அரைமணி நேரத்திற்கு பிறகு காலடி ஓசை கேட்டது “ராகவ் இவர்தான் வெங்கட் இப்போ “இமை”ல புதுச கிரிக்கெட் டீம் ஆரம்பிச்சி கோச்சிங் கொடுக்க போறாங்க” என சொன்னதும்

“ஹலோ மிஸ்டர் ராகவன்” என அவன் கையை பற்றி குலுக்கினார் வெங்கட்

“ஹலோ சார்” என எழ முயன்றவனை அமர செய்து அருகிலேயே அவரும் அமர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.