(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 100 - அவளும் நானல்லவா - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

This is entry #100 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

New life

சில்சீ தோழிகளுக்கு,

இந்தக் கதை கொஞ்சம் சோகமா இருந்தாலும், கதையின் முடிவு எனக்கு மனநிறைவைத் தந்தது. இந்தக் கதை மூலம் சமீபகாலமாக அதிகரித்து வரும் கருக்குழாய் புற்றுநோய் பற்றியும், குழந்தையின்மைக்கு மாற்றாக திகழும் பல பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்த ஐ.யூ.ஐ எனப்படும் மருத்துவ முறை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையில், ஒரு பசுமையான வனம் அந்த சித்தர்வனம். புள்ளினங்களும் காட்டுவிலங்குகளும் ஆர்பரிக்க, கொத்துக் கொத்தாய் மூலிகைச் செடிகள் படர்ந்து, அதன் நடுவே ஒரு ஆசிரமம் இருந்தது. அதன் உள்ளே இருந்த மேடையில் ஒரு சித்தர் தியானத்தில் இருந்தார். அவருக்கு எதிரே போடப்பட்டிருந்த பாயில் ஸ்ரீராம் அமர்ந்திருந்தான். அவன் தோளில் சாய்ந்து விழிகள் மூடி கிடந்தாள் மதுமிதா, தளர்வாய்க்கிடந்த அவளை அனைத்து அவள் முதுகை வருடிகொடுத்தான் ஸ்ரீராம்.  ஆழ்ந்த தியானத்திலிருந்து விழித்த அவர், ஸ்ரீராமை நோக்கி, “தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் இவள் உன் மனைவி. அவள்நோய் தீர்ந்து உன்னுடன் வாழ வேண்டுமென்று இவளை அழைத்துவந்திருக்கிறாய்” என்றார் வனசித்தர்.

“ஆம் ஐயா” என்றான் அவன் சோர்வாக.

“ஆனால் நீ காலம் கடந்து வந்திருக்கிறாய், என்னால் முடிந்ததைசெய்கிறேன், அவளுடைய நோயின் வீரியத்தைக் குறைத்து இன்னும்கொஞ்ச நாள், அவள் ஆயுளை நீடிக்க மட்டுமே என்னால் முடியும்…”

ஸ்ரீராம் மனம்சோர்ந்து மதுமிதாவைப் பார்த்தான்.

குறுகுறுவென்ற பார்வையுடன் தன்னைச்சுற்றி வந்தவள், தளர்ந்துக்கிடந்தாள். குடிலின் உள்ளே இருந்து வந்த இரண்டு பெண்கள் அவளைத்தூக்கி சென்றனர். ஸ்ரீராமை நோக்கி வனசித்தர், “நீ மறுபடியும் பௌர்ணமி அன்று வா. வரும்போது உன் மகளையும் அழைத்து வா. உன் வாழ்வில் தீர வேண்டியசிக்கல்கள் யாவும் தீரும்” என்று கூறி மறுபடியும் தியான நிலைக்குசென்றார் அவர்.

மதுமிதா – ஸ்ரீராம், இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டர். அத்தகைய காதலில் இருவரும் கட்டுண்டு இருந்தனர். திருமணமாகி இரண்டு வருடம் குழந்தையில்லாமற் போகவே, மருத்துவமனையை நாடி பல சிகிச்சைக்கு பிறகு வரமாக பிறந்தாள் அஞ்சனா. ஆனந்தம் இழையோடிய அவர்கள் இல்லறத்தில் காலனின் கண்கள் விழுந்தது போலும். ஸ்ரீராம் தன் தந்தையின் தொழிலை விரிவுபடுத்த, அஞ்சனா பிறந்தவுடன் வெளிநாடு சென்றான். மது சிறந்த இல்லத்தரசியாக இருந்தாள். கணவனையும் தன் மகளையும் தவிர அவளுக்கு வேறு உலகம் கிடையாது. அந்த சிறிய உலகத்தின் இன்பத்தில் திழைத்திருந்த அவளை மெதுவாக தின்ற கருப்பைவாய் புற்றுநோய் பற்றி அறியாது விட்டாள். ‘செர்விக்கல் கேன்சர்’ எனப்படும் கருக்குழாய் புற்றுநோய் அவளது கருக்குழாயில் பரவத்தொடங்கியது, லேசான இடுப்பு வலியில் தொடங்கி அதிகப்படியான உதிரப்போக்கு வர, தன்னை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொண்டவள், மூன்றாம் கட்ட புற்றுநோய் என்றதும் அதிர்ந்துபோனாள் மது.

இயல்பிலேயே தைரியமான அவள், மரணத்தை எதிர்கொள்ள தயாரானாள். உடைந்து போன ஸ்ரீராமிற்கு அஞ்சனாவை பற்றிய பொறுப்புகளை எடுத்துக்கூறி அவனை தைரியப்படுத்தினாள். நோய் ஆரம்பகாலமெனின் அறுவை சிகிச்சைப் போதும், மதுவின் நிலைக்கு கதிரியக்க சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியபோது அவள் மறுத்துவிட்டாள். வாழும் கொஞ்ச நாள் மன அமைதியோடு வாழ்ந்து தன் உயிர் பிரிய வேண்டுமென, ஸ்ரீராமிடம் மன்றாடி அவன் தாத்தாவின் அறிவுறைப்படி இந்த சித்தர்வனத்திற்கு வந்தனர்.

வனசித்தரின் மருத்துவத்தாளல் கண் திறந்த அவளிடம் வனசித்தர் மென்மையாக, “தாயே, உன்னோட மனதை ஏதோ ஒன்று உறுத்துகிறது, அதை சொல், அப்போதுதான் உன் தேகம் ஆரோக்கியம் பெரும், வருவதை உன்னால் எதிர்கொள்ள முடியும்”, என்றார்.

“மது வனசித்தரைப்பார்த்தாள், அவர் கண்களிலிருந்தக் கணிவு அவளுக்கு தைரியத்தைக் கொடுத்தது. “ஐயா, மனதாலும் உடலாலும் ஸ்ரீராமனாக வாழும் என் கணவர் என் மறைவிற்கு முன்னே மறுமணம் செய்து கொள்ளனும், என் நம்பிக்கைக்கு உரியவளிடம் அவரையும் என் குழந்தையையும் ஒப்படைத்த பின்னரே என் உயிர் பிரியனும்” , என்றாள் மது. சித்தர் அவள் தலையை தடவியவாரே, “அவ்வாறே நடக்குமம்மா!” , என்றார். சில நாட்களில் மதுவின் உடல் தேறியது, அவள் அருகிலுள்ள ஆலயங்களுக்கு சென்றாள்.

ந்த சிவாலயம் மின் விளக்குகள் அதிகமில்லாது, தீப ஒளியில் மின்னியது. இறைவன் சன்னதியில் கண்மூடி நின்றிருந்தவளின் சேலையை யாரோ இழுக்க திரும்பிப்பார்த்தவளுக்கு அதிர்ச்சி, அங்கே ஒரு இரண்டு வயது குழந்தை தன் மகள் அஞ்சனாவைப் போன்று உருவ ஒற்றுமையுடன்  நின்றாள், ஒரு கணம் தன் மகளோ என திழைத்த அவள் அந்தக் குழந்தையை அள்ளிக்கொண்டாள். தன் பெண்னைப் போன்ற தோற்றம் ஆயினும் அவள் வலக்கையிலிருந்த ஆறு விரல்கள் அவள் அஞ்சனா இல்லை எனக் காட்டியது, மாறாக ஸ்ரீராமின் வலக்கையிலிருந்த ஆறாவது விரலை நினைவுறுத்தியது. ஒரு சில நிமிடங்களில், “தாட்சா”, என்ற அழைப்புடன் ஒரு பெண் வந்தாள், அவளைக் கண்டதும் மதுவிடமிருந்து இறங்கி தாவி தன் அன்னையை நோக்கி “மம்மீ” என்றவாரே தாவினாள் அவள். “சாரிங்க, கொஞ்சம் அங்க இங்க திரும்பறதுக்குள்ள வெளியே ஓடி வந்துவிட்டா, உங்கள டிஸ்டர்ப் பன்னிட்டாளா?” என்றவாரே தன் மகளை வாங்கிக் கொண்ட அந்தப் பெண்ணின் கழுத்தில் தடித்த மஞ்சள் கயிறும், காலில் மெட்டியும் இருந்ததை மது கவனித்துக்கொண்டாள். இருவரும் பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு கோயில் பிராகரத்தில் வந்து அமர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.