(Reading time: 9 - 18 minutes)

தாட்சா தன் பக்கத்தில் அமரவைத்துவிட்டு மதுவிடம் பேசினாள் நீலா. “மது, ஏனோ, உங்களைப் பார்த்தால் என் சகோதரி போல் தோனுது”.

“தேங்க்ஸ் நீலா, நானும் உங்களை என் உயிர்தோழியா, நல்ல துணையா நினைக்கிறேன்”, என்றாள் மது.

“என் பெயர் நீலா, இவ என் மகள் தாட்சா, எங்க உலகத்தில் நாங்க இரண்டு பேரும் மட்டும் தாங்க” , என்று கூறி அமைதியானாள் நீலா.

“உங்க கணவர்? “

“இந்தக் கேள்விக்கு பதறிய நீலா, அவர் இராணுவத்தில் இருக்கிறார்”, என்றாள்.

“பொய்!” என்ற மதுவை, அதிர்ந்து பார்த்த நீலாவின் கண்ணளில் கண்ணீர்த்துளிகள்.

“என்னை உங்க சகோதரியா நினைச்சா உங்க மனதில் இறுக்கிறதை எங்கிட்ட நீங்க சொல்லாம், நீலா உங்களுக்கு தெரியுமா நான் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும் ஒரு நோயாளி.. எனத் தொடங்கி மது தன் நிலைமைக் கூறியதும் கரைந்து போனாள் நீலா..”

“மது உங்களுக்கு ஒரு குறைவும் வராது, நீங்க உங்களைப் பற்றி சொல்லாட்டியும் நான் நிச்சயம் என்னைப் பற்றி என்மனதில் வைத்து நான் தவித்துக் கொண்டிருக்கும் விசயங்களை உங்களிடம் சொல்லியிருப்பேன், மது என் அண்ணனுடைய ஃப்ரண்டு மிஸ்டர் ஸ்ரீராம், அவரை சின்ன வயசிலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த அன்பு, என்னுடைய கல்லூரி காலத்தில காதலா மாறிடுச்சு, ஆனா என் மனதை அவர்கிட்ட சொல்லும் போது அதை அவர் முழுமையா மறுத்துட்டாரு, அப்படி எந்தவித எண்ணமும் தனக்கு இல்லை மேலும் அவர் தன் நண்பனோட தங்கையான என்னை அந்த எண்ணத்தில் பார்க்கலன்னு சொல்லிட்டு,  இனிமே எங்கிட்ட இந்த விசயமா பார்க்க வராதேன்னு சொல்லிட்டாரு”.

“என் அண்ணனுக்கு இது தெரியாது. தெரிய வரும் போது ஸ்ரீராமுக்கு கல்யாணமாயிடுச்சு. என்னால என் மனசை மாத்திக்க முடியல, இதே கோயில அவர நினைச்சு எனக்கு நானே தாலியக் கட்டிகிட்டேன். அவர் கண்ணில படாம அவரை மனசில மட்டும் சுமந்துக்கிட்டு வாழ்றேன் மது”

மது கேள்வியாய் தாட்சாவைப் பார்க்க, அதை உணர்ந்ததுபோல் நீலா,”மது என் வாழ்கையை நிலைப்படுத்திக்க எந்தப் பெண்ணும் செய்ய தயங்கும் ஒரு காரியத்தை செஞ்சுட்டேன் மது.  என்னுடைய அண்ணி ஒரு கைனிக் டாக்டர், அவங்ககிட்ட குழந்தையில்லைன்னு ஸ்ரீராமும் அவர் மனைவியும் வந்தாங்களாம், அது என் அண்ணனுக்கு தெரியும் அவர் விந்தை பரிசோதனைக்காக எடுத்தபோது, என் அண்ணி .யூ. எனப்படும் மருத்துவ டெக்னிக் படி, சுத்தம் செய்யப்பட்ட அவரோட விந்தை என் கருப்பையில் செலுத்தி கருத்தரிக்க வச்சிட்டாங்க. அவரையே கணவரா நினைச்சு வாழ்ற என் வாழ்கைக்கு ஒரு அர்த்தமிருக்கட்டும்னு அவங்க செஞ்சதை வரமா நினைச்சு இந்தக் கிராமத்திலேயே இருந்திட்டேன்”. பேசி முடித்து மௌனமாக அமர்ந்திருந்தவளை மது ஆழ்ந்து நோக்கினாள். கனிவான முகம், மென்மையான பேச்சு, மனதிற்கு மதிப்புக்கொடுத்து வாழும் உத்தமமான பெண், அவள் கூறியது தன் கணவனை பற்றி என்பதை அவள் தாட்சாவைப் பார்த்தவுடனேயே உணர்ந்துக்கொண்டாள். மதுவின் மனதை தின்றுக்கொண்டிருந்த பிரச்சனைக்கு மருந்து அவள் எதிரேலேயே தேவதையாக அமர்ந்திருந்தது. மதுவுக்கு அவள் மேல் எந்தக் கோபமும் வரவில்லை மாறாக தன் உயிருக்கு சமமான இருவரையும் இவள் கையில் ஒப்படைக்கும் வரை தான் உயிரோடிருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டாள்.

பௌர்ணமி அன்று ஸ்ரீராம் மதுவை அஞ்சனாவுடன் வந்து அழைத்துச்சென்றான். நாட்கள் ஓடியது, ஒரு நாள் மதுவின் உடல்நிலை மோசமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டவள் தன் கடைசி ஆசையாக நீலாவைப் பார்க்க வேண்டுமென்று கூற,  வருமாறு நீலாவிற்கு அழைப்பு வந்தது. அவள் தாட்சாவுடன் ஓடி வந்தாள். நீலாவைக்கண்டதும் மதுவின் கண்கள் மின்னியது. அதே அறையில் உடலும் மனமும் நடுங்க மதுவைப் பார்த்துக்கொண்டிருந்தவன், நீலாவையும் அஞ்சனாவையே உரித்து வைத்திருக்கும் அவள் குழந்தையையும் பார்த்து மனம் குழம்பிப்போனான். அவனைக் கண்ட அதிர்ச்சியில் நீலா உறைந்துப் போனாள். மது கையசைக்க ஸ்ரீராமும் நீலாவும் அவள் அருகே வந்தனர். மது மெதுவாக ஸ்ரீராமின் கையையும் நீலாவின் கையையும் சேர்த்து மெல்லியக் குரலில், “இறைவன் அருளால் உலகத்து இன்பங்களை நான் அனுபவிச்சிட்டேன்,  ராம் என்னுடைய காலத்திற்கு பிறகு நீலா உங்களுடைய துணைவியா உங்க இரண்டு மழலைகளுக்கும் அம்மாவா இருப்பா..இதை நீங்க மனசால ஏத்துக்கனும்… நீலா, உன்னுடைய காதலுக்கு சொந்தமானவரை உங்கிடேயே சேர்த்துட்டேன், இனி அவரையும் நம் குழந்தைகளும் உன் பொறுப்பு,  ஸ்ரீராம் உங்க மனைவியா நம் குடும்பத்தின் மந்திரியா ஒரு நல்ல தலைவியா நான் இந்த முடிவை எடுக்கிறேன்,  இதை நீங்க இரண்டு பேரும் மீறக் கூடாது இது என் மேல் ஆணை, என்று கூறி ஸ்ரீராமின் முகத்தைப்பார்த்துக் கொண்டிருந்தவளின் உயிர் பிரிந்தது,  அது வேறு எங்கும் போகாது அவன் உள்ளத்திலேயே ஜோதியாக கலந்தது..

மூன்று வருடங்களுக்கு பிறகு…

அந்த வீட்டின் பெரியவர்கள் அனைவரும் தளர்ந்து நிற்க, தாட்சாவும் அஞ்சனாவும் துறத்த அவர்கள் கைகளுக்கு சிக்காது ஓடிக் கொண்டிருந்தாள் குட்டி மது.. நான் சிக்க மாட்டேனே என்பதுபோல் ஓடிக் கொண்டிருந்தவளை அள்ளி அனைத்து தூக்கினான் ஸ்ரீராம் அவனிடமிருந்து திமிரிய அவள் இதழ்களுக்குள் உணவை தினித்தாள் நீலா…

 

This is entry #100 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை – மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.