(Reading time: 54 - 107 minutes)

2017 போட்டி சிறுகதை 101 -  கண்டுகொண்டேன் என்னவளை - பத்மினி

This is entry #101 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - பத்மினி

Love

ந்தி சாயும் நேரத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த தனியார் நிறுவனம். 7 வருடங்களுக்கு முன்னால் தனி ஒருவனால் ஆரம்பிக்கப்பட்டு கிடுகிடுவென வளர்ந்து இன்று 10000 பேருக்கு மேலாக வேலை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளாது.

நேரம் 7 ஐ கடந்ததும் அதன் பரபரப்பு மெதுவாக அடங்குகிறது. ஒவ்வொருவரும் கையில் லேப்டாப் பேக்கை  மாட்டி கொண்டு வெளியேறினர்.

ஆனால் அந்த நிறுவனத்துக்கு உரிமையாளனோ வீட்டுக்கு கிளம்பும் எண்ணமே இல்லாமல் தன் அறையில் குருக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். இதே மாதிரிதான் கடந்த 4 மணி நேரமாக நடந்து கொண்டிருக்கிறான் அவன் பிரச்சனைக்கு விடையை தேடி. கால்கள் தான் வலி எடுத்ததே தவிர, விடை ஒன்றும் கிடைக்கவில்லை.

அவன் முன்னே மேசையில் அந்த நிறுவனத்தின் கால் ஆண்டு முடிவுகள் வெளிவந்திருந்தது. வழக்கத்தையும் விட, இந்த முறை அதிகம் லாபம் வந்திருந்தது. கம்பெனி ஊழியர்களுக்கெல்லாம் பயங்கர சந்தோஷம். ஆனால் அவனுக்கோ அதை கொண்டாடும் மனநிலையில் இல்லை. அவன் எண்ணம் எல்லாம் எப்படி இந்த பிரச்சனைய தீர்ப்பது என்றே சுற்றி வந்தது.

தனி ஆளாக ஆரம்பித்து ஒரு கம்பெனிய இவ்வளவு தூரம் கொண்டு வந்தவன், தொழிலில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு கண்டவன், தன் சொந்த வாழ்வில் ஒரு  பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் குழம்புகிறான்.

“சே, எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. இவ்வளவு நாள் காத்திருந்தவங்க இன்னும் ஒரு மாதம் காத்திருந்திருக்க கூடாதா?

இல்லை, நான்தான் பாரதியை ஒரு மாதம் முன்பே கண்டிருக்க கூடாதா. இந்த பிரச்சனையே இல்லாமல் ஜாலியாக இருந்திருக்கலாம். இப்ப பாரு என்ன செய்வதென்றெ தெரியாமல் திணற வேண்டியதா இருக்கு.” என்று மனதினில் புலம்பினான்.

 பாரதி என்றதும் அவன் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது. தானாக அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

ன்று ஞாயிற்றுக் கிழமை.

நன்றாக அசந்து தூங்கி கொண்டிருந்தான் அபினேஷ். வேகமாக அவன் அறையின் உள்ளே வந்தார் அவன் அம்மா பாக்கியம்.

“அபி, டேய் அபி  சிக்கிரம் எழுந்திருடா “

“என்ன மா சண்டே ஒரு நாளாவது நிம்மதியா தூங்க விடறியா. எதுனாலும் இன்னும் 2 மணி நேரம் என்னை எழுப்பாத “ என்று புரண்டு படுத்து மீண்டும் தூங்க ஆரம்பித்தான் அபி.

“ என்னது , இன்னும் 2 மணி நேரமா? அதுக்குள்ள முகூர்த்த நேரம் முடிஞ்சிடும் டா. “

“ஏமா, உன்னை கல்யாணத்துக்கு கூட்டிட்டு போக நான் மட்டும் தான் கிடைச்சனா. உன் அருமை இரண்டாவது பையன் எங்க போனான். அவனும் இல்லைனா ட்ரைவர் யாரையாவது கூட்டிட்டு போ. என்னால இப்ப எழுந்திருக்க முடியாது. ப்லீஷ் தொந்தரவு பண்ணாம போ மா “

“ஆமாண்டா , உன் நிச்சயத்துக்கு ட்ரைவர் அ கூட்டிட்டு போய் அவர் கையாலேயே மோதிரம் போட்டிட்டு வர்ரோம். நீ நிம்மதியா தூங்கு “

நிச்சயம் என்றதும் வாரி சுருட்டி எழுந்தான்.

“என்ன மா உழற? யாருக்கு நிச்சயம்? “

“டேய், என்ன டென்ஷன் பண்ணாத. நேற்றுதான அவ்வளவு தூரம் சொன்னென். நாளைக்கு உனக்கும் இந்துவுக்கும் நிச்சயம். காலைலே சீக்கிரம் ரெடியாகு டானு. அப்போ தலய தலய  ஆட்டிட்டு இப்ப யாருக்கு நிச்சயம் னு கேட்கற “

கீழ எல்லாம் ரெடியாகி உனக்காக வெய்ட் பண்றாங்க. சீக்கிரம் கிளம்பு “

“அம்மா, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”

“எப்ப பாரு கம்யூட்டர் கம்யூட்டருனு கட்டிகிட்டு அழற இல்ல. அதான் உனக்கு ஏதோ அயிருச்சு. ஏண்டா , இந்து வ பிடிக்கலயா?

“பிடிச்சிருக்கு னு தெரியல, பிடிக்கலைனும் தெரியல மா. அந்த பொண்ண பார்க்கறப்போ ஒரு பீலிங்ஷ், இவதான் எனக்கானவள் அப்படீனு ஒரு உணர்வு எதுவுமே தோணலையே. “

“பரவாயில்லயே, நீ கம்யூட்டர் கூட தான் சுத்திகிட்டு இருக்கேனு நினச்சேன். அப்ப அப்ப தமிழ் படமும் பார்க்கற போல “

“சினிமால தான் ஒரு பொண்ண பார்த்த உடனே மணி அடிக்கிறது, பல்ப் எரியறது, அப்புறம் கைய தொட்டா சாக் அடிக்கிறதெல்லாம். நிஜ வாழ்க்கையில் அப்படி எல்லாம் கிடையாது கண்ணா.”

ஒரு பொண்ண பார்த்த உடனே எதுவும் தோணாது. அந்த பொண்ணு  கூட பழக பழக தான் அந்த பொண்ணோட மனசு புரியும். அப்புறம் இருவருக்கும் அன்பும் வரும். “

“அப்படீனா , நான் இன்னும் அந்த இந்து கூட இன்னும் பேசவே இல்லையே. அதுக்குள்ள ஏன் நிச்சயம் வரைக்கும் போகனும். “

“டேய், எங்கிட்ட நல்லா அடி வாங்க போற. பொண்ணு பார்க்க போனப்பவே அந்த பொண்ணு கிட்ட பேசுடானேன். நீ, அப்புறம் தனியா பேசறென. சரி போன்லயாவது பேசுடானு நம்பர் வாங்கி கொடுத்தேனே,  என்ன பண்ணுன?

பொண்ணு பாத்திட்டு வந்து 2 வாரம் ஆச்சு. 2 வாரமா என்ன பண்ணுன?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.