(Reading time: 54 - 107 minutes)

குரல் நல்லா இருக்கேனு கேட்டால், கடைசியில் இவளும் சாதாரணமாக நன்கொடைக்காக போன் பண்ணி ஏமாற்றுகிறவளா? ஒரு நாளைக்கு எத்தனை பேர்தான் போன் பண்ணுவாங்க என்று சலித்துக்கொண்டே போனை கட் பண்ண விரைந்தான்.

“சார், சார் ப்லீஷ். நன்கொடைக்காக போன் பண்ணி ஏமாற்றுகிறவள்

என்று போனை கட் பண்ணிடாதீங்க.” என்று கெஞ்சியது அவள் குரல்.

அபிக்கு ஆச்சர்யமாக இருந்தது. தான் மனதில் நினைத்ததை அப்படியே   சொல்லுகிறாளே என்று இருந்தது

“இதில் என்ன இருக்கிறது. இதே மாதிரி எத்தனை பேரிடம் பேசியிருப்பாள். எல்லாரும் உடனே not interested என்று போனை கட் பண்ணியிருப்பாங்க. அதே அனுபவத்தால் சொல்றா. என்னவோ என் மனதை படித்து விட்டதாக நினைப்பு” என்று தன்னையே திட்டிகொண்டான்.

அதற்குள் அவளே தொடர்ந்தாள்.

சார். நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒரு தொண்டு நிறுவனத்தின் கால் சென்டரில் இருந்து பேசலை. நான் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் அஷிஷ்டென்ட் மேனேஜரா இருக்கேன். எனக்கு டைம் இருக்கிறப்போ இது மாதிரி கஷ்டப் படறவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி செய்கிறேன்.

இந்த குழந்தைக்கு போதிய பணம் இல்லாததால் ஆபரேஷன் டிலே ஆயிட்டிருக்கு. அதான் என்னால முடிஞ்ச பண்ட் ரெய்ஷ் பண்ணிட்டிருக்கேன்” என்று விளக்கினாள்

“உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லைனா, நீங்க அந்த குழந்தையோட பெற்றொரிடம் நேரடியாக பேசலாம். இல்லைனால் அந்த ஹாஷ்பிட்டல் நம்பர் தர்ரேன். நீங்களே விசாரிக்கலாம்” என்று எப்படியாவது தான் சொல்வதை இவன் நம்பவேண்டுமே என்று அவசரமாக விவரித்தாள்.

அவளின் குரலில் ஏதோ உண்மை இருப்பதாக தோன்றியது அபிக்கு. அதைவிட அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று இன்னும் தன்னை ஈர்ப்பதாக உணர்ந்தான்.

அந்த குரலுக்கு உரியவளின் முகத்தை காண வேண்டும் போல இருந்தது.

“OK Miss Bharathi. இன்று மாலை 6 மணிக்கு என் ஆபிஷ் க்கு வாங்க பார்க்கலாம்” என்றான்.

“Thank you so much sir. will meet you at 6 PM. Thanks once again “ என்று போனை அனைத்தவளின் குரலில் இருந்த உற்சாகம் இந்த பக்கம் இருந்த அபிக்கு நன்றாக புரிந்தது.

குரலே இவ்வளவு உற்சாகமாக இருக்கே. அவள் முகம் மகிழ்ச்சியில் எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஆழ்ந்தான்.

சில விநாடிகள் கற்பனையில் ஆழ்ந்தவன் திடுக்கிட்டான். என்ன இது, முன்பின் தெரியாத ஒரு பெண்ணை நினைத்துக்கொண்டு இருப்பதா என்று தன்னையே திட்டிகொண்டு வேலையை தொடர்ந்தான்.

என்னதான் வேலையில் கவனமாக இருந்தாலும், அவன் கண்கள் அடிக்கடி கடிகாரத்தைச் சென்று மீண்டு வந்தது. எப்ப 6 மணி ஆகும் என்று படபடப்பாக இருந்தது. அவளின் முகத்தை பார்க்கும் ஆவல் நேரம் ஆக ஆக விசுவரூபம் எடுத்தது

ஒரு கையெழுத்துக்காக அவன் அறைக்கு வந்த அவனுடைய உதவியாளர், “என்ன சார், எதுவும் இம்பார்டன்ட் மீட்டிங் ஆ. ரொம்ப டென்சன் ஆ இருக்கீங்க போல இருக்கு”  என்றார்.

அப்பதான் அபிக்கு உறைத்தது. தன் மனதில் இருப்பதை இப்படியா முகத்தில் காண்பிப்பது என்று திட்டி கொண்டே மெதுவாக புன்னகத்தான்.

நேரம் 6 ஐ  தொட்டதும், அவனை மேலும் காக்க வைக்காமல், பாரதி ரிஷப்னில் கேட்டுக் கொண்டு அவனுடைய அறையை அடைந்தாள்.

அறை கதவில் இருந்த கண்ணாடி வழியாக அவளுடைய கண்களை கண்டவனின் உள்ளே ஏதேதோ ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தது. அவள் கண்கள் அவனை மிகவும் ஈர்த்தது. ஏனோ  அந்த கண்கள்  அவனுக்கு மிகவும் பழக்கபட்டதாக இருந்தது

தன்னை மறந்து அமர்ந்திருந்தவனின் கவனத்தை பாரதியின் குரல் நினைவுலகத்துக்கு கொண்டு வந்தது.

“Excuse me sir. May I come in? “ என்றது அதே இனிமையான குரல்.

தன் ஆவலை மறைத்துக்கொண்டு,

“Yes, please get in” என்றான் அவளை பார்த்து.

வெள்ளை நிற சுடிதாரில், முகத்தில் எந்த ஒரு செயற்கையான மேக்கப்  இல்லாமல் முகம் பளிச்சென்று இருந்தது. நடந்து வரும்பொழுது அவள் நடைக்கு ஏற்ற மாதிரி அசைந்து ஆடிய நீண்ட சடை. காலையில் வைத்த  மல்லிகையை  இப்பொழுது அகற்றி இருக்க வேண்டும்.

அவள் நெருங்கி வரும்பொழுது மல்லிகையின் வாசமும், ஆங்காங்கே ஒன்றிரண்டு  மல்லிகை பூக்கள் அவள் கூந்தலில் இன்னும் இருந்தது. . சற்றுமுன் அவன் கண்ட அதே இரண்டு பெரிய கண்கள். ஏதோ ஒரு  தேவதை தன்னை நோக்கி வருவது போல தெரிந்தாள்.

தன்னை கண்டதும் அவளின் கண்களிலும் ஒரு மின்னல் தோண்றியதை போல இருந்தது. ஒரு வேலை தன் கற்பனையோ என்று யோசித்தான்.

அதற்குள் அவன் இருக்கையின் அருகில் நெருங்கியிருந்தாள்.

சட்டென்று  தன்னை சமாளித்துகொண்டு, தன் எதிரில் இருந்த இருக்கையை காட்டி அமர சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.