(Reading time: 54 - 107 minutes)

சிறு புன்னகையுடன் நன்றி உரைத்து அமர்ந்தாள்.

அவன் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கையிலேயெ பாரதி தன் ஹேன்ட் பேக்கில் இருந்து அவளுடைய விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தாள்.

அவள் வேலை செய்யும் நிறுவனம் அவனுடய நண்பனுடயது தான். இவள் எதுவும் பொய் சொல்லவில்லை என்று மனம் ஆறுதலடைந்தது.

அவள் மீண்டும் ஒரு பைலை எடுத்து, அதில் இருந்த குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பெற்றொரின் புகைப்படம் மற்றும் மெடிகல் ரிப்போர்ட்ஷ் மற்றும் டாக்டரின் ப்ரிஷ்க்ரிப்ஷன் அனைத்தையும் காண்பித்தாள்.

தான் சொல்வது உண்மை என்று நிரூபிக்கவே அவை அனைத்தும். சும்மா வாயில் சொல்லாமல் அதற்கான ஆதாரங்களையும் காண்பித்த அவளுடய புத்திசாலி தனத்தை பாராட்ட வேண்டும் போல இருந்தது.

“இந்த குழ்ந்தையின் தந்தை கடந்த மாதம் ஒரு ஆக்ஷிடென்ட் ல்  இறந்து விட்டார். இப்போ அம்மா மட்டும்தான். அவங்களுக்கும் அந்த அளவு வசதி இல்லை”

தொடர்ந்து ஏதேதோ பேசினாள். அவள் பேசும் பொழுது அவள் கண்களும் கூடவே பேசியது. கைகள் அபிநயம் பிடித்தன. அவளுடைய காதணிகள் அவள் பேசுவதற்கு ஏற்றார் போல நடனம் ஆடின. மொத்ததில் அவனுக்கு ஒரு கச்சேரி பார்பபது போல இருந்தது.

இதற்குள் அவள் பேச்சை முடித்து,

“Any questions or clarifications sir ? “  என்று இவனை பார்த்தாள் .

அபிக்கு திக் என்றது. அவள் பேசியதும் எதுவும் இவன் காதில் விழவில்லையே !

இருந்தாலும் சமாளித்து கொண்டு,

“ஏன் மிஷ் பாரதி. நீங்களெ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்றீங்களே. அங்கயே பண்ட் கலெக்ட் பண்ணி இருக்கலாம் இல்ல “ என்று ஏதோ  கேட்க வேண்டுமே என்று கேட்டான்.

அவளும் மெல்ல புன்னகைத்து கொண்டே,

“இது மாதிரி இன்னும் இரண்டு பேருக்கு ஏற்கனவே எங்க ஆபிஷில் கலெக்ட் பண்ணிட்டேன் சார். ஆபிஷ் இல்லாம ,எங்க வீடு, ப்ரெண்ட்ஷ் மற்றும் சொந்தகாரங்க கிட்டயும் முடிந்த அளவு கலெக்ட் பண்ணிட்டேன். இப்ப என்னை பார்த்தாலே எல்லாரும் ஓடறாங்க.  

நானும் என்னோட சேவிங்ஷ் எல்லாம் இந்த குழந்தைக்கு கொடுத்திட்டேன். அந்த ஹாஷ்பிட்டலில் பேசி பீஷ் கொஞ்சம் குறைத்து இருக்காங்க. அப்பவும் இன்னும் போதிய பணம் சேரலை.

அதான் உங்கள மாதிரி கொஞ்சம் பெரிய நிலையில் இருக்கறவங்க கிட்ட அப்ரோச் பண்ணிகிட்டிருக்கேன்.

இதுவரைக்கும் கான்டாக்ட் பண்ணின எல்லாரும் ஒரே பதில்தான்

“Either not intereseted or already given enough donation”. என்று கூறுகையில் அவள் முகம் லேசாக வாடியது. ஏனோ அவன் மனமும் வாடியது. ஒரு சில விநாடிகள் தான். அதற்குள் அவள் சமாளித்து கொண்டு மீண்டும் உற்சாகமாக,

“உங்களுடய ஒரு நாள் ஆபிஷ் பார்ட்டி செலவோ அல்லது உங்க பர்த் டே செலவோ மட்டும் கொடுத்தால் கூட போதும். அந்த குழந்தையோட உயிரை காப்பாற்றி விடலாம். நீங்க டொனேட் பண்ணினா உங்களுக்கு டாக்ஷ் பெனிபிட் கூட கிடைக்கும். “ என்று எப்படியாவது அவனை  சம்மதிக்க வைத்து விடவேண்டும் என்று அவளின் குரலில் ஒரு  ஆவல் இருந்தது.

அபிக்கோ அவள் குரலை கேட்டு கொண்டே, அவள் முகத்தை பார்த்துகொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

இனிமேல் எப்படி இவளை பார்ப்பது என்று அவன் மனம் வேகமாக கணக்கு போட்டது.

பிறகு அவளை பார்த்து,

“நீங்க இவ்வளவு தூரம் சொல்லும் பொழுது எனக்கும் ஏதாவது உதவி செய்யணும் போல இருக்கு. ஆனால் நான் நேரில் பார்த்த பிறகுதான் முடிவு செய்யனும்.

“நீங்க ப்ரீ யா  இருந்தா, நாளைக்கு இதே  டைம் இங்க வர்ரீங்களா. இரண்டு பேரும் போய் அந்த குழந்தையை பார்க்கலாம்” என்றான். அவனுக்கு பாரதியை பார்க்க இன்னொரு வாய்ப்பு என்பது அவனின் கணக்கு.

அவன் சரி என்றதுமே அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அவளை அப்படியே மகிழ்ச்சியாக எப்பொழுதும் வைத்து கொள்ளவேண்டும் போல இருந்தது அபிக்கு.

பாரதிக்கும் “ஒரு அழகான பெண் கேட்கிறாளே என்று உடனே வழியாமல் ஆராய்ந்து பார்த்து டிஷைட் பண்றாரே. சபாஷ்” என்று நினைத்துகொண்டாள் .

அவள் சிறிது யோசித்து, எனக்கு நாளைக்கு 6 மணிக்கு ஒரு இம்பார்டன்ட் மீட்டிங்க் இருக்கு சார். நான் வேனா அந்த ஹாஷ்பிட்டல் அட்ரஷ் தர்ரேன். நீங்க வேனா போய் பார்க்கறீங்களா? “  என்றாள்.

அதை கேட்டதும் அவன் உற்சாகம் குறைந்தது. அவளை பார்க்க தான் இவ்வளவு ப்ளான்.

“ஹ்ம்ம் அது சரியா வராது மிஷ் பாரதி. எனக்கு அவங்க யாருனே தெரியாது. அவங்களுக்கும் அப்படிதான். நான் எப்படி போய் தனியா மீட் பண்றது “

அவள் மீண்டும் யோசித்து, “அப்படீனா, நான் என் மீட்டிங் முடித்து நேரா ஹாஷ்பிட்டல் வந்திடறென். நீங்களும் அதே டைமுக்கு வாங்க. நான் அவங்கள அறிமுக படுத்தி வைக்கிறேன்” என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.