(Reading time: 54 - 107 minutes)

“என்ன அண்ணா, ஒரே சந்தோஷமா இருக்க. என்ன விஷயம். என்ன லவ்ஷ்ஆ “ என்றான்.

அபியின் முகத்தில் சிறியதாக வெக்கம் வந்தது. அதை கண்டுகொண்ட சின்னவன்,

“ஹே அப்ப உண்மையாலுமே லவ் தானா. கடைசில நீயும் நம்ம கட்சியில சேர்ந்திட்டியா ? “ என்று சீண்டினான்.

“சும்மா இருடா. உன்னை மாதிரியே என்னையும் நினைக்காத “ என்று தம்பியை முறைத்து மாடிக்கு நழுவினான்.

பாக்கியத்துக்கு சந்தோஷமாக இருந்தது. காலையிலேயே அவனை கவனித்தார். அவன் முகத்தில் என்றும் பார்த்திராத காதலும்,  வெக்கமும் கலந்து இருந்ததை கண்டார்.

அதையே இப்போ அவனின் செய்கையும் உணர்த்தியது. எப்படியோ அவன் சந்தோஷமாக திருமணத்தை ஏற்றுக்கொண்டால் போதும் என்று இருந்தது.

“பாக்கியத்தம்மா, நீங்க ஒரு ட்ராக் போட்டு கொடுத்தா, உங்க பையன் வேற ட்ராக் ல போறார். கொஞ்சம் கண்டிச்சு வைங்க. பாவம் அந்த இந்து பொண்ணு” என்று எச்சரித்தது அபியின் மனசாட்சி

அதற்கு பிறகு அபி குட்டியின் ஆபரேஷனுக்காக அடிக்கடி அபியும் பாரதியும் சந்திக்க வேண்டி இருந்தது. அவர்களுக்குள் ஒரு நெருக்கம் வளர்ந்தது. அவளின் ஒவ்வொரு செயலும் அவளிடம்  அவனை இன்னும் ஈர்த்தது. அவளுடன் சேர்ந்து அவனும் சில பொது சேவையில் ஈடுபட ஆரம்பித்தான்.

நாட்கள் மெல்ல  நகர, அபிக்கு எப்படி தன் காதலை அவளிடம் சொல்லுவது என்று இருந்தது. அவள் மனதில் தான் இருப்பது தெரியாமல் எப்படி சொல்வது என்று யோசித்தான்..

இந்த நிலையில் அபி குட்டியின் ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து அன்று டிஷ்சார்ஞ்

அபியும் பாரதியும் சென்று எல்லா பார்மலிடிஷ் ம் முடித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு இல்லாமல் அபி அந்த அம்மாவிற்கு தன் ஆபிஷ்லயெ ஒரு வேலையை ஏற்பாடு செய்திருந்தான்.

அந்த அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருவரையும் வாழ்த்தி சென்றார். அபி குட்டியும் தன்னை வந்து அடிக்கடி பார்க்குமாறு கேட்டு சென்றாள்.

வெளியே வருகையில் அங்கு வேலை செய்யும் ஆயா பாரதியை கூப்பிட்டார்.

பெற்ற பிள்ளைகளால்  கை விடப்பட்டு முதியோர் இல்லத்தில் இருந்தவர், அங்கு இருக்க பிடிக்காமல், தன் சுய சம்பாத்தியத்தில் வாழனும் என்று இருந்தவரை பாரதிதான் இங்கு ஒரு வேலைக்கு சேர்த்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தாள்.

“என்ன ஆயா எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா பார்க்கமுடியல “

“உன் புண்ணியத்தில நல்லா இருக்கேன் பாரதி பொண்ணு. நீ எப்படி இருக்க?“ என்று கூறியபடியே பக்கத்தில் ஒன்றாக நெருங்கி நின்று இருந்த அபியை பார்த்து

“இதுதான் நீ கட்டிக்க போற மாப்பிள்ளையா. தம்பி ராஜா மாதிரி கம்பீரமா இருக்கார். உனக்கு எல்லா விதத்துலயும் பொருத்தமா இருக்கும்.

தம்பி, எங்க பாரதி பொண்ணு தங்கமான பொண்ணு, அவள நல்லா பாத்துக்கோங்க, நான் வர்ரேன் பொண்ணு. கொஞ்சம் வேலை இருக்கு” என்று அவளின் பதிலை எதிர்பாராமல் நகர்ந்தார்.

அந்த ஆயாவின் பேச்சை கேட்டு பாரதியின் கன்னங்கள் சிவந்தது. அபியின் கண்கள் அதை கண்டு கொண்டது. சில விநாடிக்குள் பாரதி சமாளித்து கொண்டு “சாரி அபி. அந்த ஆயா ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டாங்க”

“அவங்க சரியாதான் சொல்லி இருக்காங்க “ என்று மெல்ல சொன்னான்

“என்ன சொன்னீங்க ? “

“ஒன்றுமில்லை..  Lets go “ என்று நழுவினான்.

அதன் பிறகு அபிக்கு எப்படி பாரதியின் மனதை தெரிந்து கொள்வது என்று குழப்பமாக இருந்தது.

சரி இரன்டு நாள் அவள் கிட்ட பேசாம இருக்கலாம். எப்படி ரியாக்ட் பண்றா என்று பார்க்கல்லம் என்று திட்டமிட்டு அதன் படி அவளுக்கு அழைக்கவில்லை. எந்த மெசேஜும் அனுப்பவில்லை.

பாரதி அவனுக்கு மெசேஜ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆச்சு அபிக்கு. எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு குட்நைட் மெசேஜ் ஆவது அனுப்பி விடுவானே”

இரண்டு நாள் கடந்து இருந்தது. அதுக்குள் அவளிடமிருந்து பல மெசேஜ் வந்திருந்தது. எல்லாமே அவன் உடல் நிலையை  கேட்டிருந்தது. அதை பார்க்கும்பொழுது உடனே அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.

இருந்தும் அவன் தன்னை கட்டுபடுத்திகொண்டு, அவளே கால் பண்ணட்டும் என்று இருந்தான்.

மூன்றாம் நாள் பாரதியே பொறுக்க முடியாமல் அவனுக்கு கால் பண்ணினாள். அவளின் அழைப்பை பார்த்ததும் அவன் மனம் குத்தாட்டம் போட்டது.

மெதுவாக அவள் அழைப்பை ஏற்றான்.

“ஹலோ பாரதி” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.