(Reading time: 54 - 107 minutes)

அபி.. நீங்க நல்லா இருக்கீங்க இல்ல “ என்றவளின் குரல் கரகரப்பாக இருந்தது.

“ஹே I’m fine மா .ஆபிஷ் ல கொஞ்சம் வேலை அதிகம் அதான் உங்கிட்ட பேச முடியல” . என்றான்.

அட்லீஷ்ட் ஒரு மெசேஜ் ரிப்ளை பண்ணி இருக்கலாம் இல்லை. உங்களுக்கு என்ன ஆச்சோனு ரொம்ப பயந்துட்டேன் “ என்றவளின் குரல்  தழுதழுத்தது

அவளின் கண்ணீர்  அவள் சொல்லாமலயே அபிக்கு தெரிந்தது.

“போதும். அவளின் இந்த கண்ணீரே சொல்லுகிறதே என் மேல் உள்ள அவளின் காதலை. இனிமேல் நான் தைரியமாக சொல்வேன் நீதான் என்னவள் என்று “ என்று உற்சாகமானான்.

“சாரி மா . நீ இவ்வளவு பீல் பண்ணுவேனு தெரிஞ்சிருந்தா நான் இன்பார்ம்  பண்ணியிருப்பேன். இனிமேல் கண்டிப்பா சொல்லிடறேன் .நீ கண்ணை துடைச்சுக்கோ”

அப்பதான் பாரதிக்கே புரிந்தது தான் அழுது கொண்டிருப்பது.

“சே , என்ன இது சின்ன புள்ளை மாதிரி அழுதுகிட்டு. எப்படி தெரிந்தது அவனுக்கு” என்று யோசித்தாள்.

“ஹே ரொம்ப யோசிக்காத. போய் தூங்கு குட் நைட்” என்று இணைப்பை துண்டிததவன் தனக்கு தெரிந்த குத்து டான்ஷ் ஐ ஆடினான் வெகு நேரமாக.

றுநாள் இரவு பாரதி நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். திடீரென்று அவள் மொபைல் அழறியது. தூக்க கலக்கத்தில் போனை எடுத்து காதில் வைத்தவள்,  அதில் வந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்து நின்றாள்.

பின் எப்ப்டியோ கிளம்பி அடுத்த 10 ஆவது நிமிடத்தில் அந்த ஹாஷ்பிட்டலில் இருந்தாள்.

தன் ஷ்கூட்டியை அப்படியே  போட்டுவிட்டு வேகமாக ஓடினாள். போனில் சொன்ன அந்த அறை எண்ணை  அடைந்து வேகமாக தள்ளி திறந்தாள்.

அதன் உள்ளே அபினேஷ் நின்று கொண்டிருந்தான். அவனை கண்டதும் அபீபீ  என்று கத்தி கொண்டே பாய்ந்து சென்று அவனை இருக்கி கட்டி கொண்டிருந்தாள்.

“ஹே பாரதி. கூல் டவ்ன். “

“உங்களுக்கு ஆக்ஷிடென்ட் போன் வந்ததே “ என்று அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியாமல் இன்னும் அவனை இருக்கிகொண்டாள்.

“இங்க பாரு டா. எனக்கு ஒன்ணும் இல்லை. I’m perfectly alright “

“அப்ப அந்த போன்?”

“அது வந்து ...  அது  சும்மா லுலுலாய் .உன்னை இங்க வரவைக்கிறதுக்காக ஒரு சின்ன டிராமா “

டிராமா என்றதும் டக்குனு அவனிடம் இருந்து விலகி அப்பொழுது தான் அந்த அறையை நோட்டமிட்டாள்.

அறை முழுவதும் வண்ண வண்ண பலூன்களும்  கலர் பேப்பராலும் அழங்கறிக்கப் பட்டிருந்தது.

அதன் நடுவில் அழகான கேக் இருந்தது.

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது மறுநாள்  அவளுக்கு பிறந்த நாள் என்று

“கமான் பாரதி. 12 ஓ க்ளாக் ஆகப்போகிறது. சீக்கிரம் வந்து  கேக் கட் பண்ணு என்று அவள் தோள்மீது கை வைத்து அவளை கேக்  பக்கமாக நகர்த்தி சென்றான்.

கேக்  இரண்டு இதயங்கள் ஒன்றோடொன்று இணைந்து, அதன் உள்ளே “ ரதி” ,”அபி “ என்றும் அதன் கீழே “With Love – Abi” என்றும் மிக அழகாக எழுதி இருந்தது.

பாரதி ஒன்றும் புரியாமல் முழித்தாள்.

“கமான் பாரதி. கேக் கட் பண்ணு” என்று அவனே அவள் கையை பிடித்து கேக் கட் பண்ணினான்

அவளுக்கு ஊட்டிவிட்டு, அவள் கையாளயே ஒரு துண்டு எடுத்து அவன்  வாயில் வைத்தான்.

“Many More Happy Returns of the day my Dear Kannammaa “ என்று அவள் முகம் பார்த்து சொன்னான் . பிறகு பாக்கெட்டில் இருந்த அந்த மோதிரத்தை எடுத்து அவள் முன் மண்டியிட்டு “I love you Bharathi Kannammaa. Will you marry me?“ என்று அவள் கையில் மோதிரத்தை அணிவித்தான்

சிலையாக நின்றிருந்தாள் பாரதி. ஏதோ கனவு போல் இருந்தது. ஒரு வேளை இது கனவுதானோ ? என்று தன்னையே கிள்ளி பார்த்துகொண்டாள்.

“ஹே இது கனவல்ல நிஜம். வேணும்னா நீ கொஞ்சம் நேரம் முன்னாடி கட்டி பிடிச்சியே, அதே மாதிரி இன்னொரு தரம் கட்டிக்கோ. You would feel it is real” என்று கண்ணடித்தான்.

பாரதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிந்தது. கூடவே அந்த போன் காலும் அதில் வந்த செய்தியும். அதில் அபிக்கு ஆக்ஷிடென்ட் என்றும் ரொம்ப சீரியஷாக இருப்பதாகவும் சொன்னது அந்த குரல். அதை நினைக்கையில் அவள் உடல் மீண்டும் நடுங்கியது.

அதை உணர்ந்தவனாக , “சாரி மா. சும்மா ஒரு விளையாட்டுக்கு நான் தான் குரல் மாத்தி பேசினேன்.

அவள் முகம் கோபத்தில் கனன்றது. “எதுல விளையாடரதுனு இல்லையா அபி? உங்கள பார்க்கற வரைக்குள் செத்துட்டேன்.” என்றவளின் குரல் கரைந்து கண்ணில் நீர் திரண்டிருந்தது.

அதற்குள் அவளை நெருங்கி மெதுவாக அணைத்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.