(Reading time: 54 - 107 minutes)

Its OK. உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். நீங்க ப்ரீயா இருந்தா கொஞ்சம் வர முடியுமா? உங்க ஆபீஷ் பக்கம் இருக்கிற காபி ஷாப் ல தான் இருக்கேன்.”

“ஷ்யூர். இப்பவே வர்ரேன் “ என்று போனை அனைத்தான்.

அபிக்கு ஒரே ஆச்சர்யம். நாமதான் இந்த பொண்ண பார்க்கனும்னா அதுவே வந்திருக்கே, அதுவும் ஆபீஷ் வரைக்கும்.

ஒரு வேளை அம்மா சொன்னமாதிரி என் மேல்  எதுவும் ஆசைய வளர்த்திருச்சோ. அப்படினா எப்படி இந்த கல்யாணத்த நிறுத்த சொல்றது“  என்று யோசித்தவாறு வேகமாக அந்த காபி ஷாப் அடைந்து இந்துவை கண்டுபிடித்து அவள் எதிரில் அமர்ந்தான்.

அவளுக்கு பிடித்த காபியை கேட்டு ஆர்டர் கொடுத்து விட்டு அவள் முகத்தை நோக்கினான். அவள் முகம் இன்னும் குனிந்தே இருந்தது.

“ஹ்ம்ம் சொல்லுங்க. என்ன பேசனும். மேரேஜ் ஷேரி, ஜ்வெல்ஷ் எதுவும் பிடிக்கலையா என்று எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஏதோ  கேட்டான்.

“ம்ஹூம் “ என்று தலையை ஆட்டினாள்

“இந்த கல்யாணத்தை நிறுத்தனும்”

“What? “ என்று பலமாக அதிர்ந்தான் அபி. ஒரு வேளை என் காதுக்கு தான் சரியா விழலையா. எப்பவும் இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசிப்பதாலே எது பேசினாலும் அதே மாதிரி கேக்குதோ”   என்று சந்தேகமாக

“”என்ன சொன்னீங்க?” என்று மீண்டும் கேட்டான்.

“சாரிங்க. உங்களுக்கு கஷ்டமாதான் இருக்கும். ஆனால் எனக்கு வேற வழி தெரியலை. நீங்க தான் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த ஹெல்ப் பண்ணனும் “

“என்னது, கஷ்டமா? நானே எப்படி  இந்த கல்யாணத்தை நிறுத்த என்று மண்டைய பிச்சிட்டிருக்கேன். நல்ல வேலை இந்த பொண்ணே  நிறுத்த சொல்லிருச்சு. அம்மா சொன்ன பெண்பாவம் சென்டிமெண்ட் இல்லை. அப்பாடா ஒரு தொல்லை விட்டது என்று குத்தாட்டம் போட்டது அவன் மனம்”

ஆனாலும் இப்ப இருக்கிற பொண்ணுங்களுக்கு ரொம்பவும் தைரியம் தான். நான் எப்படி இதை சொல்றது என்று எவ்வளவு யோசித்தேன். இந்த பொண்ணு direct   ஆ சொல்லுது. 

சரி, இந்த கல்யாணம் இந்த பொண்ணு சொல்லியே நின்றதாகவே இருக்கட்டும் என்று நினைத்து கொண்டே தன் மகிழ்ச்சியை  வெளியில்  காட்டாமல்

“ஏன், என்னை பிடிக்கலையா? “

சிறிது தயங்கி

“பிடிச்சிருக்கு னு தெரியல, பிடிக்கலைனும் தெரியல. உங்கள பார்க்கறப்போ ஒரு பீலிங்ஷ், இவர்தான் எனக்கானவர் அப்படீனு ஒரு உணர்வு எதுவுமே தோணலை”

“ஆங்ங்ங் எது என்னோட டயலாக் ஆச்சே .அதையே இந்த பொண்ணு திருப்பி சொல்லுதே என்று முழித்தான் “

“சாரி. உங்களுக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னாதான் புரியும்.

Actual ஆ நான் ஒருத்தரை  2 வருடமா லவ்  பண்றேன். ஆனால் அவர் என் காதலை ஏத்துக்கலை. இந்த நிலையில்தான் எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அவர் இன்னும் என் காதலை ஏற்காத நிலையில் எங்க வீட்லயும் சொல்ல முடியல.

இரண்டு , மூனு பேர் வந்து பொண்ணு பார்த்தப்போ பிடிக்கலைனு சொல்லி சமாளிச்சிட்டேன். ஆனால் எங்க வீட்ல சந்தேகம் பட ஆரம்பிச்சிட்டாங்க. நான் வேணும்னே பிடிக்கலைனு சொல்றேன் என்று விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க

அதுக்கு மேல எனக்கு என்ன செய்யறதுனு தெரியல. அப்பதான் நீங்க வந்தீங்க என்னை பார்க்க.

உங்கள பார்க்கறப்போ ஒரு டீசன்ட்ஷி, ப்ரென்ட்லினெஷ் தெரிஞ்சுது. அப்பதான் எனக்கு ஒரு ஐடியா வந்தது. உங்களுக்கு சரினு சொல்லிட்டு எப்படியும் மேரேஜ்க்கு கொஞ்ச நாள் இருக்கும். அதுக்குள்ள அவர்கிட்ட என் காதலை எப்படியாவது ஏற்றுக்க வச்சிட்டு உங்ககிட்ட சொல்லி இந்த மேரேஜ் நிறுத்த சொல்லிடலாம்.

உங்கள பார்த்தா சொன்னா புரிஞ்சிக்கிற டைப் ஆ தெரிஞ்சுது.

Actual ஆ முதல்லயே இந்த ப்ளான் உங்ககிட்ட சொல்லிடணும்ணு நினைச்சிருந்தேன். பட் ஏனோ சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கல.”

இன்னும் அபியால் நம்ப முடியவில்லை இந்த பொண்ணு கூட காதலிக்குமா என்று. நான் பேசும் பொழுது ஒரு வார்த்தைக்கு மேல பேசலை. இதுவா இப்படி என்று அசந்து போனான்.

“மெல்ல புன்னகைத்து உங்கள் லவ்வர் யாருனு தெரிஞ்சுக்கலாமா? “

மெல்ல தயங்கி, அப்பாவோட PA Mr ராம். நீங்க கூட பார்த்திருப்பீங்களே,  Engagement அப்போ எல்லா அரேஞ்மென் ட்ஷ் பார்த்துகிட்டாரே  அவர்தான் என்றாள் சின்ன வெட்கத்துடன்.

“இந்த பொண்ணுக்கு கூட வெட்க பட தெரியுமா ? இப்பதான் அவன் நினைவுக்கு வந்தது. ஏதோ ஒன்று அவளிடம் மிஷ் ஆகுதே என்று அவன் அன்று உணர்ந்தது. Engagement அப்போ அடிக்கடி அந்த ராமிடம் அவள் கண்கள் சென்று வந்தது இப்போ காரணம் புரிந்தது.

தன்னையே பிடிக்காமல் அந்த ராமை பிடிக்கிறது என்றால் அந்த ராம் எப்படி இருப்பான் என்று நினைவு கூர்ந்தவன் அதிர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.