(Reading time: 54 - 107 minutes)

திடீர்னு எல்லாம் இல்லை. நாந்தான் ஆரம்பத்துல இருந்தே அந்த பொண்ணு மேல  எனக்கு எந்த இன்ட்ரெஷ்ட் ம்  இல்லை னு சொன்னேன். நீங்கதான்  எண்ணை கட்டாய படுத்தினீங்க “.

“அதனால் என்னடா. நீ தான் இந்து கிட்ட பல முறை பேசினியே ?

“பல முறை எல்லாம் இல்லை. ஏதோ இரண்டு, மூன்று முறை கால் பண்ணேன். அதுக்கே அந்த பொண்ணு இன்டர்வ்யூல பதில் சொல்ற மாதிரி சொல்லுச்சு. அதுக்கு மேல எனக்கும் பேசற இன்ட்ரெஷ்ட் இல்லை.

எல்லாம் உங்களால் வந்தது. நீங்க மட்டும் கட்டாய படுத்தாம இருந்திருந்தா, நான் பாரதிய கண்டிருப்பேன். இப்ப இந்த பிரச்சனையும் வந்திருக்காது.

ப்லீஷ் மா எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்து.”

பாரதி என்று புது பெயரை கேட்டதும் திக் என்றது பாக்கியத்திற்கு.

“யாருடா அது பாரதினு புதுசா? “

தன்னை மறந்து உளரியதை திட்டிகொண்டே

“அது வந்து...  நான் பாரதி ய தான் லவ் பண்றேன் மா. அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்”  என்றான் சின்ன வெட்கத்துடன்..

“டேய். கண்ணா  என்னடா இது, நிச்சயம் பண்ணினதுக்கப்புறம்ம்  லவ்  பண்றேனு சொல்ற. இதுவே கல்யாணத்துக்கப்புறம் ஒரு பொண்ணை புடிச்சா அவளை லவ் பண்ணுவியா? “

“ அதனால தான் கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா யோசிச்சு முடிவு எடுக்கணும். அப்படி புடிச்ச பொண்ணா  இருந்தா நான் ஏன்மா இன்னொரு பொண்ணை பார்க்க போறென். நீ எங்க என்ன முடிவு எடுக்க விட்ட.”

“சரிடா. இதுவே நிச்சயம் முடிஞ்ச அடுத்த வாரமே கல்யாணம் ஆகி இருந்தா ?”

“ஒரு வேளை கல்யாணத்துக்கு பின் அந்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கலாம். அப்படியும் லவ் இல்லைனா நமக்கு கிடைச்சது அவ்வளவுதான்  என்று அட்ஜஷ்ட் லைப் ஆ காதல் இல்லாமல் வாழ்ந்திருப்பேன்.”

“ஆனால் பாரதிய பார்த்த பிறகு அவள் தான் என்னவள் னு தோணிருச்சு மா. இனிமேல்  அவளை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது.”

“கண்ணா, இந்துவும் உன்னை மாதிரி, இந்த இரண்டு மாதத்தில் உன்னையே நினைச்சிருந்தா? அவள் மட்டும் உன்னை விட்டு எப்படி இன்னொருவனை கல்யாணம் பண்ணிப்பா.”

“அதுவும் இல்லாம ஒரு  பொண்ணோட கல்யாணம் நிச்சயம் வரைக்கும் வந்து நின்னு போச்சுனா, அது அந்த பொண்ணுக்குதான் கஷ்டம். அதுக்கப்புறம் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கூடி வராது. எல்லாம் பொண்ணு கிட்ட தான் குறை இருக்குனு சொல்லுவாங்க.

வீணா அவள கஷ்டபடுத்தாத. அந்த பொண்ணு கண்ணீர் விட்டா நம்ம குடும்பத்துக்கு ஆகாதுடா. ஒரு பொண்ணு கண்ணீர்  ல உன் வாழ்க்கைய ஆரம்பிச்சா அது நல்ல வராதுடா கண்ணா. கொஞ்சம் பொறுமையா இரு. எல்லாம் சரியாயிடும்”

“மா நீ எவ்வளவு தான் சொன்னாலும் என்னால பாரதிய தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது”

“அப்ப, நீயே முடிவு பண்ணிட்ட இல்லை. எங்க 30 வயது ஆகியும் இன்னும் தனியா நிற்கிறானே, உனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு இவ்வளவு கஷ்டபட்டேன். அதை புரிஞ்சுக்கல நீ . நீயே போய் இந்த கல்யாணத்தை நிறுத்திக்கோ. தயவு செய்து என் மூஞ்சியிலே முழிக்காத” என்று கோபமாக கத்திவிட்டு நகர்ந்தார் பாக்கியம்.

“சே, என்ன,  இந்த அம்மா கைய விரிச்சுட்டாங்களே. அப்பா கிட்டயும் சொல்ல முடியாது. அவர் இதைவிட எகிருவார். இப்ப  எப்படி இந்த கல்யாணத்தை நி’றுத்துவது என்று யோசித்தவாறே அலுவலகத்தை அடைந்தான்.

சிறிது நேரம் வேலை பார்த்தாலும் மனம் மீண்டும் மீண்டும் அதே சிந்தனையில் இருந்தது. மதியத்துக்கு மேல்  ஒன்றும் கவனம் செலுத்த முடியாமல் பைலை மூடி வைத்து விட்டு யோசித்து நடக்க  ஆரம்பித்தான். இன்னும் நடந்து கொண்டிருக்கிறான். ஆனால் இன்னும் ஒரு முடிவும் கிடைக்க வில்லை. 

“இந்த அம்மா வேற பெண்பாவம் அது இதுனு சென்டிமெண்டா குழப்பறாங்களே. அப்படி பார்த்தால் பாரதியும் பெண் தான். அவளுக்கு குடுத்த வாக்கை காப்பற்றலைனா அவளும் பாவம் தான். அதை விட அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. இந்த பெண்பாவம் சென்டிமெண்ட் எல்லாம் நமக்கு ஒத்து வராது.

பேசாம அந்த பொண்ணுகிட்டயே நேரடியா சொல்லிட வேண்டியதுதான். பார்த்தால் சொன்னா புரிஞ்சுக்கற மாதிரி தான் இருக்கு. அது கிட்டயே பேசிட வேண்டியதுதான் என்று போனை எடுத்து வேகமாக இந்து நம்பரை தேடி அழுத்தும் பொழுது அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.

இந்து தான் அழைத்தாள்.

என்ன இந்த பொண்ணு இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப போய் போன் பண்ணியிருக்கு என்று யோசித்தவாறே அழைப்பை ஏற்றான்.

“ஹலோ “ என்றான்.

கொஞ்ச நேரம் தயங்கியபின் “நான் இந்து பேசறேன் “ என்றாள்.

“ஹ்ம்ம் சொல்லுங்க. சாரி. கொஞ்சம் பிசி. அதான் போன் பண்ண முடியலை.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.