(Reading time: 54 - 107 minutes)

ரொம்ப Thanks பாரதி. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரு குழந்தையை காப்பாற்ற முடிகிறதே என்று. அதுவும் அந்த சிஷ்டரின் ரியாக்ஷன் ...  ஷான்ஷ்லெஷ் .

ஒவ்வொரு வருடமும் வரி சலுகைக்காக ஒரு தொகையை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு செக் கொடுப்பதோடு மறந்திடுவேன். அவர்கள் அதை சரியாக பயன்படுத்துவார்களானு கூட தெரியாது.

ஆனால் இன்று ஒரு குழந்தைக்காக டொனேட் பண்றப்போ, அவர்களுடைய சந்தோஷத்தை நேரில் பார்க்கும் பொழுது மனம் நிறைந்து இருக்கிறது“ என்று உணர்ச்சி வசப்பட்டான்.

பாரதி அவன் கையை மெதுவாக அழுத்தினாள். அவனுக்கும் அது  தேவையாக இருந்தது.

“இதுல என்ன சார் இருக்கு. உலகின் நம்பர் 1 பணக்காரரான பில்கேட்ஷ் ஏ அவ்வளவு பெரிய பதவியை விட்டு விட்டு  பொது சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அதுதான் பிடித்திருக்கிறது. நம்மலும் என்னதான் பணம் சம்பாதிக்கனும்னு ஓடினாலும் அப்பப்ப இந்த மாதிரி முடியாதவங்களுக்கு உதவி பண்றதலயும் ஒரு  ஆத்ம திருப்தி இருக்கும்.

நீங்க பர்த் டே பார்ட்டியோ, ந்யூ இயர் பார்ட்டியோ கொண்டாடற மாதிரி. இன்னும் ஆழமா யோசிச்சிங்கனா அதுல கிடைக்கிற சந்தோஷத்தை விட அடுத்தவங்களுக்கு உதவி செயது அதுல கிடைக்கிற ஒரு  சந்தோஷம், திருப்தி இன்னும் Super ஆ இருக்கும் “ என்று கண்கள் விரிய பேசினாள்.

“You are 100% correct Bharathi. I think I’m feeling that now “

பாரதியும் தன் நன்றியை தெரிவித்தாள்.

“நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். இப்படி முழு செலவையும் நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள்  என்று நினைக்க வில்லை. இதற்கு கைமாறாக நான் என்ன செய்யனும் சொல்லுங்க என்றாள்”

அதற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிய அபி “என்ன கேட்டாலும் செய்வியா?” என்று புருவத்தை உயர்த்தினான்.

ஏதொ அர்த்ததில் கேட்கிறான் என்று புரிந்து,

”என்னால் முடிந்ததை செய்வேன் சார்” என்றாள்.

பொண்ணு விவரமா தான் இருக்கு என்று சிரித்து கொண்டே

“இந்த சார் னு கூப்பிடறதை விடனும்”  என்றான்.

அதை கேட்டு அவள் சத்தமாக சிரித்தாள்.

“இதுக்கா இவ்வளவு பில்ட் அப். நான் கூட வேறு ஏதோ பெரிதா கேட்க போறீங்க. தெரியாமல் வாய விட்டிட்டேனே, எப்படிடா வாக்கை காப்பத்தறது என்று நினத்தேன் “

“பெரிதா தானே. கூடிய சீக்கிரம் கேட்கிறேன் “ என்று மனதில் சிரித்து கொண்டே

“பின்ன, என்னை நிமிடத்துக்கு ஒரு முறை சார், சார் னா எனக்கு என்னவோ ஷ்கூல் ல பசங்க வயசான டீச்சரை கூப்பிடற மாதிரி இருக்கு,. நான் என்ன அவ்வளவு வயதானவனா தெரியரேன் ?

எங்க ஆபிஷ் லயே என்னை எல்லாரும் பேர் சொல்லி தான் கூப்பிடிடுவாங்க. So இந்த சாரை விட்டு என்னை பேர் சொல்லியே கூப்பிடு”

“உங்களுக்கு என்ன சார், நீங்க I.T ல இருக்கீங்க. பேர் சொல்லி கூப்பிடறது பழக்கமா இருக்கலாம். இதே பழக்கத்துல அதையே எங்க ஆபிஷில் சொன்னா அவ்வளவுதான்.

உடனே மரியாதை இல்லாம பேசிட்டாங்கனு பஞ்சாயத்தை கூட்டிடுவாங்க. எதுக்கு அந்த வம்பு. சார் னே கூப்பிட்றேன்” என்று சிரித்தாள்.

அவள் சிரிப்பதையே ரசித்தவன். “எவ்வளவு அழகா இருக்கா சிரிக்கும் பொழுது” என்று நினைத்து கொண்டே

“உங்க ஆபிஷில் நீ எப்படியோ கூப்பிடு. என்னை தயவுசெய்து அபினே கூப்பிடு என்றான். “

“அப்படியே ஆகட்டும் சார் .. சாரி அபி “  என்றாள்.

அதற்கு பிறகு இருவரும் இளகுவாகினர். நேரம் போனதே தெரியவில்லை.

பாரதிதான் மணியை பார்த்து டைம் ஆச்சு. சரி கிளம்பலாமா என்றாள்.

அவனும் “ஓ இவ்வளவு நேரம் போனதே தெரியவில்லை. நான் வேனா ட்ராப் பண்ண வா” என்ரான்.

“இல்லை. நான் எப்பவுமே 9 மணிக்கு தான் வீட்டுக்கு போவேன். அம்மாவுக்கு தெரியும் இது மாத்ரி ஏதாவது வேலை இருக்கும் என்று. அதற்கு மேல் நேரம் ஆனால் போன் பண்ணி சொல்லிடுவேன்.  So என்னை தேட மாட்டாங்க “

 ஓகே சா ..  அபி, bye. see you soon , good night”

“பார்த்து பத்திரமா போ “

“ஷ்யூர் , நீங்களும் பத்திரமா போங்க “ என்று மறைந்தாள்.

வீட்டுக்கு திரும்புகையில் இரண்டு பேரின் மனமும் அன்றைய நிகழ்வுகளை அலசியது.

அப்போதுதான் உறைத்தது. தான் பாரதியை ஒருமையில் அழைத்ததும் அவளும் அதை ஏற்றுகொண்டதும். மேலும் தன்னால் ஒரு பெண்ணிடம் இவ்வளவு இயல்பாக பேச வரும் என்றே வியப்பாக இருந்தது.

வீட்டை அடைந்ததும் , காரை நிறுத்திவிட்டு கையில் சாவியை சுழற்றியவாறே விசில் அடித்துக்கொண்டே நுழைந்தவனை ஆச்சர்யமாக பார்த்தனர் பாக்கியமும் , அகிலேஷும்.

அவர்கள் அருகில் வந்து புன்ன்கயுடன் அமர்ந்தான் அபி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.