(Reading time: 54 - 107 minutes)

சாரி டா. ஒரு சர்ப்ரைஷ் கொடுக்கலாம்னு தான் சும்மா விளையாண்டேன்.  நீ இவ்ளொ இமோஷனல் ஆவனு நினைக்கல. இதுதான் நீ கடைசியா கண் கலங்கறதா இருக்கனும். இனிமேல் உன்னை கஷ்ட படுத்த மாட்டேன்..  ப்ராமிஷ்”

“சரி இதெல்லாம் என்ன இது? யாரை கேட்டு மோதிரம் போட்டீஙக “ என்று மீண்டும் கோபமானாள்.

மெதுவாக சிரித்துக் கொண்டே “உன் மனதை கேட்டுதான்.”

“என் மனசில எல்லாம் ஒண்ணும் இல்ல. நீங்க ரொம்ப பெரிய இடம் அபி. நான் உங்களுக்கு பொருத்தம் இல்லை. நமக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான். ப்லீஷ், வேற எதுவும் தப்பா கற்பனை பண்ணாதீங்க .”

“எங்க , என்னை நேரா பார்த்து சொல்லு உன் மனதில் நான் இல்லை என்று.”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை “ என்று மெல்ல முனகினாள்.

 “எதுவும் இல்லாமல் தான் நான் போன் பண்ணலைனு அன்று உன் கண்கள் அழுததா. இன்று உன் உயிரை கூட மறந்து எனக்காக ஓடி வந்ததும் ஒன்றும் இல்லாததுதான் “ என்று கோபமாக கத்தினான்.

அவன் கோபத்தை கட்டுபடுத்தி, அவளின் முகத்தை தன் கையில் ஏந்தி

“I love you so much Kannamma.  நீதான் என்னோட மீதி வாழ்க்கை. நீ இல்லைனா  என்னால தனியா இருக்க முடியாது. ப்லீஷ் புரிஞ்சுக்கோ”

அதன் பிறகு அவள் கூறிய அனைத்து காரணங்களையும் மறுத்து,  ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து தன் காதலை ஏற்க வைத்து அவளை வீட்டில் விட்டு உற்சாகமாக திரும்பினான்.

காரில் வரும்பொழுது ஏதோ உலகத்தையே வென்றுவிட்டது போல இருந்தது அபிக்கு.

தொழிலில் எத்தனையோ பெரிய டீல்களை முடித்த பொழுது கூட இவ்வளவாய் மகிழ்ச்சியாக இல்லை. ஒவ்வொரு முறையும் இன்னும் மேல போகனும் என்ற முயற்சி மட்டுமே இருந்தது.

ஆனால் இன்று பாரதி தன் காதலை ஏற்று கொண்டதும் உலகத்தையே வென்றுவிட்டது போல, எதையோ சாதித்து விட்டது போல இருந்தது.

“இதுதான் காதலின் சக்தியா. இவ்வளவு நாள் இல்லாமல் 30 வயதில் நானும் காதலிக்கிறேன். கடைசியில் கண்டுகொண்டேன் என்னவளை” என்று உற்சாகமாக தனக்கு பிடித்த பாடலை பாடினான்.

அதே உற்சாகத்துடன் மறுநாள் காலை எழுந்து விசில் அடித்து கொண்டே குளிக்க சென்றான்.  குளிக்கும் பொழுது அவன் கையில் இருந்து  நழுவி கீழே விழுந்தது அவனின் நிச்சயதார்த்த மோதிரம். அதை கண்டு

“ஓ மை காட். இதை எப்படி மறந்தேன் “ என்று அவசரமாக நாட்களை எண்ணினான்.

“ஓ காட். இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது திருமணத்திற்கு. இதை எப்படி மறந்தேன். பாரதி கிட்ட கூட எதுவும் சொல்லலையே”  .  “Noooo .எனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிருக்குனு தெரிஞ்சா அவ்வளவுதான். ஒரு பெண்ணோட லைப் வீணாக்க கூடாதுனு வீர வசனம் பேசிட்டு நான் இருக்கிற பக்கமே திரும்ப மாட்டா.

அவள இதுவரைக்கும் சம்மதிக்க வச்சதே பெருசு.  இப்படி ஒரு  கூத்து நடந்துச்சுனு தெரிஞ்சது அவ்வளவுதான்.”

“எப்படியாவது பாரதிக்கு தெரியும் முன்னே இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும். அப்புறம்  தான் அவள் கிட்ட மெதுவா எடுத்து சொல்லனும். இப்ப எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது”  என்று யோசித்தவாறெ வேகமாக குளித்து கீழே வந்தான்.

அவனின் யோசனயான முகத்தை கண்ட பாக்கியம் திடுக்கிட்டார்..

“நேற்று இரவு கூட பயங்கர சந்தோஷமாக வந்தானே? நான் கூட எல்லாம் சரியாயிருச்சுனு நினைத்தேன் இப்ப இவ்வளவு டல்லா வர்ரானே. என்ன குண்ட தூக்கி போட போறானோ “ என்று மனதினில் பயந்து கொண்டே

“வா டா அபி. ஏன் டல்லா இருக்க? உடம்பு எதும் சரியில்லையா என்று கை வைத்து பார்த்தார்.

“I’m fine ma”. இது வேற ஒரு பிரச்சனை. நீதான் ஹெல்ப் பண்ணனும்”

“சொல்லு கண்ணா. என்ன ஹெல்ப் பண்ணனும்”

“இந்த கல்யாணத்தை நிறுத்தனும்”

“நான் பயந்த மாதிரியே குண்ட போட்டானே “ என்று புலம்பி கொண்டே

“கண்ணா, கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு. இப்ப போய் கல்யாணத்த நிறுத்து அப்படினா எப்படி டா. இரண்டு பக்கமும்  கல்யாண வேலை அல்மோஷ்ட் முடிஞ்சது. நாளைக்கு இன்விடேஷன் வந்திரும்... 

ஏண்டா , உனக்கும் இந்துவுக்கும் ஏதாவது பிரச்சனையா? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி டக்குனு கல்யாணத்தை நிறுத்த சொல்லாத ”

“பிரச்சனையா? அந்த பொண்ணுகிட்ட நான் பேசியே ஒரு மாதத்திக்கு மேல ஆகுது மா”

“என்னது பேசவே இல்லையா. அப்ப ஒரு மாதமா அவன் முகத்தில் இருந்த சந்தோஷம்?” எங்கயோ தப்பான மாதிரி தோன்றியது

“அப்ப என்னடா பிரச்சனை. ஏன் திடீர்னு நிறுத்த சொல்ற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.