(Reading time: 54 - 107 minutes)

ப்படியோ,அவளை பார்க்க முடிகிறதே என்று சரி என்றான்.

“OK சார். அப்ப நான் கிளம்பறேன் “ என்று எழுந்தாள்.

“Once again thank you so much for your help. see you tomorrow” என்று விடை பெற கை நீட்டினாள்.

தன் கை கொடுத்து விடை கொடுத்தவன் அப்படியே மின்சாரம் தாக்கியதுபோல அமர்ந்து விட்டான்.

எப்படி , இவளின் கைகளுக்கு இப்படி ஒரு சக்தி. உடம்பெல்லாம் ஏதோ செய்கிறது.

அன்று அம்மா அப்படி எல்லாம் ஒன்று இல்லை என்றாரே. இன்று இவளின் கைகள் என்னை தாக்குகிறதே? இவளின் விழி பார்வை என்னை ஏன் ஏதோ செய்கிறது?. அவள் முகம் சிறிது வாடினாலும் என் மனம் வாடுகிறதே?.

இது போன்று எந்த உணர்வும் எனக்கு இந்துவிடம் ஏன் தோண்றவில்லை? ஏன் எந்த பெண்ணிடம் இதுவரைக்கும் தடுமாறியதில்லை. இவள் என்னை ஆட்டி வைக்கிறாளே.

இதுதான் காதல் என்பதா? அப்படி என்றால் இவள்தான் என்னவளா? ...

என்று தன் மனம் கேட்கும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தலையை பிடித்து அமர்ந்தான் அபினேஷ்.

று நாள் காலை மிக உற்சாகமாக எழுந்தான். காரணம் அவனுக்கு தெரிந்ததே. அவன் பாரதியை மீண்டும் பார்க்க போகிறான். என்னதான் அவனுக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள் இருந்த போதும் அவன் மனம் அவளை பார்க்க போர சந்தோஷத்தில் இருந்தது.

கண்ணாடி முன் பல நிமிடங்கள் நின்றான். வேற வேற ட்ரெஷ் ஐ மாற்றினான். வித வித மான ஹேர் ஷ்டைல் ட்ரை பண்ணினான்.

அவன் முன் முடியை அழகாக கோதியபோது அவனை அறியாமலே சிறு வெட்கம் குடிகொண்டது அவன் முகத்தில்.

அன்று என்னவோ ஒவ்வொன்றும் அழகாக தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும், தோட்டத்தில் மலர்ந்திருந்த அத்தனை பூக்களும், சுட்டெறிக்கும் சென்னை வெயிலும், பரபரத்துக் கொண்டிருந்த சென்னை ட்ராபிக் என்று அனைத்துமே அழகாக தெரிந்தது.

வைரமுத்து வின் “ காதலித்துப்பார் கவிதை ஞாபகம் வந்தது

காதலித்துப்பார்

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம் விளங்கும்

உனக்கும் கவிதை வரும்

கையெழுத்து அழகாகும்

தபால்காரன் தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்

:

:

 அவர் சொன்ன அனைத்தையும் இன்று அபி அப்படியே உணர்ந்தான்.

“காதலித்து பார்  இந்த உலகமே அழகாக தெரியும்” என்று இவனும் கவிதை எழுதினான்.

அதே உற்சாகத்தோடு ஆபிஷில் நுழைந்தவன் முகத்தில் புன்னகை அப்படியே இருந்தது.

எல்லாரும் வித்தியாசமாக பார்த்தனர். இன்று பாஷ் பயங்கர ஷ்மார்ட் ஆ இருக்காரு இல்ல என்று சைட் அடித்தனர் சில பெண்கள்.

சிலர், அவனின் நிச்சயம் விசயம் தெரிந்து இருந்ததால், பாஷ்க்கு மாப்பிள்ளை கலை வந்திருச்சு என்றனர்.

இது எதுவும் அபியின் காதுக்கு எட்டினாலும், கருத்துக்கு எட்டவில்லை. அவன் கண்கள் நேற்றை போலவே கடிகாரத்தையே சுற்றி வந்தது.

நேற்றை போலவே நேரத்தை கடத்துவது கஷ்டமாக இருந்தது.

ஒரு வழியாக மணி 6 ஆனதும் காரை எடுத்து கொண்டு பாரதி சொன்ன அந்த ஹாஷ்பிட்டலை அடைந்தான்.

காரை பார்க் பண்ணிட்டு பாரதிக்காக என்ட்ரன்ஷ் லயே வெய்ட் பண்ணினான்.

பாரதியும் தன் ஷ்கூட்டியில வேகமாக வந்து அவசரமாக பார்க் பண்ணிவிட்டு வேகமாக இவனை நோக்கி வந்தாள்.

அவளை பார்த்ததும் அவன் இதயம் வேகமாக அடித்தது. உடலில் அதே ரசாயன மாற்றம். தன்னை கட்டு படுத்தி கொண்டு அவளை பார்த்தான்.

அவள் முகம் இன்றும் பளிச்சென்று எளிமையாக இருந்தது. கண்களில் சிரிப்புடனும் முகத்தில் அதே உற்சாகத்துடன் வந்தாள். இவளால் மட்டும் எப்படி எப்பவும் உறசாகமாக இருக்க முடிகிறது. என்று நினைத்தான்.

அதற்குள் அவள் அவனை நெருங்கி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.