(Reading time: 54 - 107 minutes)

ட்டு வேஷ்டி, சட்டையில் கையை மடித்தவாறே இறங்கிய தன் மூத்த மகனை வைத்த கண் மாறாமல் பார்த்திருந்தார் பாக்கியம். எவ்வளவு கம்பீரமாக, ராஜாவாக இருக்கிறான். எல்லாரையும் வழி நடத்தி செல்றவன்  ஏந்தான் திருமணம் என்றால் ஓடறானோ? முருகா,  எப்படியாவது இந்த திருமணத்தை நல்ல படியாக நடத்தி வை “ என்று வேண்டிக்கொண்டார்.

“என்ன அண்ணா , கல்யாணமே வேண்டாம்ன, இப்ப என்னடானா, நிச்சயத்துக்கே மாப்பிள்ளை மாதிரி கிளம்பி  வந்திருக்க. என்ன அம்மா நிச்சயம்னு சொல்றதுக்கு பதிலா கல்யாணம்னு மாத்தி  சொல்லிட்டாங்களா ?“ என்று சிரித்தான் சின்ன மகன் அகிலேஷ்.

அவனை பார்த்து முறைத்தார் பாக்கியம்.

“டேய், நீ சும்மா இருடா. இப்பதான் நானே அவனை சம்மதிக்க வச்சு கூட்டிட்டு வர்ரேன். நீ பாட்டுக்கு எதையாவது சொல்லி அவன் திரும்பவும் முறுக்கிக்க போறான். “

“சரி சரி உன் செல்ல மகன எதாவது சொன்ன வந்திருமே. சரி வாங்க எல்லாம் கிளம்பலாம் என்று கிளம்பினர்”

இந்து வீட்டை அடைந்தனர். அவர்களின் வசதி வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிரதிபலித்தது. ஒரு வேலை அம்மா இந்த வசதிக்காக தான் பார்க்கிறாங்களோ? இல்லையே தங்களின் வசதியை ஒப்பிடும்பொழுது இது குறைவுதான். தன் நல்லதுக்காகதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டான்..

வழக்கமான வரவேற்பு, நல விசாரிப்புகள் முடிந்தது. ஏற்கனவே பொண்ணை பார்த்து விட்டதாலும், நல்ல நேரம் முடிய இருப்பதாலும் நேரடியாக நிச்சய புடவையை கொடுத்து மாற்றி வரசொன்னனர்.

இந்துவும் ரொம்பவும் தாமதப்படுத்தாமல் விரைவில் நிச்சய புடைவையில் வந்தாள்.

அனைவரும் அவளயே நோக்கினர். அபியும் அவளை நோக்கினான்.

இந்து , இந்துமதி பெயருக்கு ஏற்ற மாதிரி மிகவும் அழகாக இருந்தாள். பட்டுபுடவையில் தேவதையாக இருந்தாள்.

அபிக்கு தான் எதுவும் தோணலை. ஏன் இந்த படங்களில் காண்பிப்பது போல ஒரு படபடப்பு, ஒரு ஆவல் எதுவும் இல்லையே. அவளிடமும் அதே போல்தான் தோண்றியதொ? முகத்தில் முக்கியமாக அவள் கண்களில்  எந்த உணர்ச்சியும் இல்லை. ஆனால் உதட்டில் புன்னகை அனைவரிடமும். மறந்தும் இவன் பக்கம் திரும்பவில்லை அவள்.

“ஒரு வேளை என்னை பார்க்க வெட்க படறாளோ?” என்று நினைத்தான் அபி.

“என்ன அண்ணா, அண்ணிய இப்படி பப்ளிக்கா சைட் அடிக்கிற? நம்ம பெருசுங்க பார்த்துச்சு, மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருச்சு போல, பொண்ணையே வச்ச கண் வாங்காம பார்க்கறார் அப்படீனு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்த முடிச்சிருவாங்க. அப்புறம் பேசனும், பழகனும்னு நீ கேட்ட மூனு மாதம் அம்பேல். என்ன ஓகே வா  என்று காதை கடித்தான் அகிலேஷ்.

அப்போதுதான் தான் அவளையே பார்த்து கொண்டிருப்பது உறைத்தது. டக்குனு தன் பார்வையை திருப்பி கொண்டான்.

“என்ன டா ஒரு பேச்சுக்கு ஓட்டுனா, அப்படியே நம்பிடற. நீ எல்லாம் எப்படிதான் ஒரு பெரிய அலுவலகத்தை நடத்துறியொ. நீ நல்லா சைட் அடிச்சுக்கோ. அப்புறம் இந்த ஷான்ஷ் கிடைக்காது” என்று மீண்டும் கிண்டல் செய்தான். அவனை முறைத்தான் அபி.

அதன் பிறகு எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மோதிரம் மாற்றச் சொன்னனர்.

அபிக்கு திக் என்றது. மோதிரம் எதுவும் வாங்கி வரவில்லையே என்று யோசித்தான். அதற்குள் பாக்கியம் அவர் பேக்கில் இருந்து மோதிரத்தை அவனிடம் கொடுத்தார்.

“இந்தா அபி. இதை இந்துவுக்கு போடு”  என்று சிரித்தார்.

“என்ன கொடுமைடா சாமி. எனக்கு துனையாக வருபவளுக்கு பார்த்து பார்த்து நான் மோதிரம் வாங்கறதை விட்டு யாரோ தேர்வு செய்த மோதிரத்தை போட வேண்டியிருக்கே. எல்லாம் இந்த அம்மா வாதான் இருக்கும்.

ஒரு இன்டெரெஷ்ட் ம் இல்லையே. எல்லாம் இந்த  அம்மாவே பார்த்து பார்த்து செஞ்சுக்கறாங்க. விட்டா இவங்களெ தாலியும் கட்டி கூட்டி வந்துருவாங்க போல இருக்கே “ என்று புலம்பினான்.

இவன் மன ஓட்டத்தை அறிந்த அம்மா

“உனக்கு எப்படியும் நேரம் இருக்காது னு தெரியும் கண்ணா. அதான் நானே ஒரு டிசைன வாங்கிட்டேன். நீ அப்புறமா இந்துவுக்கு புடிச்சதா நல்லதா வாங்கி கொடு.  இப்ப இதையே போட்டுவிடு “ என்று மெல்ல கூறினார்.

எங்க இவன் கையை பிடிச்சுடுவானோ என்றோ இந்து இவனுக்கு முன்னால் கையை ஏற்கனவே நீட்டி இருந்தாள்.

அபியும் அவள் கையில் மோதிரத்தை அணிவித்தான். பதிலுக்கு இந்துவும் இவன் கையில் அணிவித்தாள்.

லேசாக இருவர் கைகளும் பட்ட போதும் அபிக்கும் எந்த உணர்வும் தோண்றவில்லை. ஏதோ பிசிநெஷ் மீட்டில் கைகுலுக்குவது போன்றே இருந்தது.

தன் எண்ணங்களை விட்டு மெதுவாக புன்னகைத்தான் அவளை பார்த்து. அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். அவ்வளவு அழகாக இருந்தது அவளின் புன்னகை.

ஒருவேளை அம்மா சொல்றமாதிரி , கல்யாணத்திற்கு பிறகு தானாக இன்டெரெஷ்ட் வந்துருமோ, நானும் அவளை விரும்ப ஆரம்பித்திடுவேனோ ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.