(Reading time: 54 - 107 minutes)

சாரி சார். மீட்டிங் கொஞ்சம் இழுத்திருச்சு. அதான் கொஞம் லேட் ஆயிருச்சு. “

“Its OK. நான் இப்பதான் வந்தேன் என்றான் புன்னகையுடன்.

“சரி வாங்க போலாம்”  என்று நடந்தாள். அவளுடன் சேர்ந்து நடக்கையில் அவ்வளவு உற்சாகமாக இருந்தது.

சிறிது தூரம் சென்றவள், நின்று அவள் பேக்கில் இருந்த டெய்ரி மில்க் சாக்லெட்ஐ எடுத்தாள்.

“குட்டிக்கு சாக்லெட் னா ரொம்ப பிடிக்கும். நீங்க இந்த சாக்லெட் கொடுத்தீங்கனா உங்க கிட்ட ரொம்ப ப்ரென்ட் ஆயிடுவாள் என்று அவன்  கையில்  சாக்லெட் ஐ கொடுத்தாள்.

அப்போது தான் உறைத்தது தான் அந்த குழந்தைக்கு எதுவும் வாங்கி வரவில்லை என்று

“சாரி, நான் எதுவும் வாங்கி வரவில்லை. இந்த மாதிரி பார்மாலிட்டிஷ் எல்லாம் தெரியாது “

“Its OK  சார்.” என்று ஒரு அறையில் நுழைந்தனர்.

அங்கு பெட்டில் 4 வயது சிறுமி மிகவும் மெலிந்து அமர்ந்து இருந்தாள். பாரதியை கண்டதும்,

“ஐ பாரதி அக்கா வந்திட்டாங்க” என்று கை தட்டி ஆர்பரித்தாள்.

அந்த குழந்தையின் தாயும் இவளை பார்த்து

“வா பாரதி. எங்க 2 நாளா காணோம். நீ எப்ப வருவனு இவ என்னை படுத்தி எடுத்துட்டா “

“சாரி கா. கொஞ்சம் வேலை இருந்தது. அதான் வர முடியலை “

அபிக்கு, இவள் இவர்களுக்காக தான் பண்ட் கலெக்ட் பண்ண அலையறானு சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும்னு எவ்வளவு அழகா மறைக்கிறாள் என்று தோண்றியது

“அபி இங்க பாரு உன்னை பார்க்க ஒரு அங்கிள் வந்திருக்கார் என்று அவள் பின்னே நின்ற அபியை காட்டினாள்.

“என்னை மாதிரியே இவளும் என் ஞாபகத்தில் இருந்தாளா. குழந்தையை  என் பேர் சொல்லி கூப்பிடறாளே என்று மனதுக்குள் சிரித்து கொண்டான்.

அதற்குள் அந்த குட்டி இவனை பார்த்து அழகாக சிரித்தது.

“சொல்ல மறந்திட்டேன் சார். இவள் பெயரும் அபிதான். அபிநயா “

“சே நல்லா பல்ப் வாங்கிட்டேன். என் பெயரைத்தான் சொல்றாளோ என்று சந்தோஷப்பட்டுட்டேன்” என்று தன்னையே திட்டி கொண்டான் .

“ஹாய் அங்கிள் “

“ஹாய் மா. How are you? “ என்று அவள் கையில் சாக்லெட் ஐ கொடுத்தான்.

“I’m fine” என்றவளின் கண்கள் சாக்லெட் ஐ பார்த்ததும் அழகாக மலர்ந்தது.

“ஐ பாரதி அக்கா மாதிரியே நீங்களும் எனக்கு சாக்லெட் வாங்கி வந்திருக்கீங்க. ரொம்ப Thanks அங்கிள். இனிமேல் அக்கா மாதிரியே  நீங்களும் எனக்கு பெஷ்ட் ப்ரெண்ட் என்று கை நீட்டியது.”

“ஷ்யூர் மை ப்ரெண்ட் “ என்று அவனும் அந்த பிஞ்சு கையை பற்றி குலுக்கினான்.

அதன் பிறகு கொஞ்ச நேரம் அந்த குழந்தையுடன் உரையாடினர். அவன் கண்கள் அவ்வபொழுது பாரதியை தொட்டு சென்றது.

இந்த குழந்தையுடன் அவளும் குழந்தையாக மாறி குழந்தையின் இயல்பிலேயே பேசிக் கொண்டிருந்தாள்.

அந்த குழந்தையின் அழகான சிரிப்பும் அவளின் பிஞ்சு மழலையும் அவனுக்கு புதிதாக இருந்தது.. இது மாதிரி எந்த குழந்தையையும் அருகில் பார்த்தது இல்லை. உறவினரில் இவன்தான் பெரியவன் என்றதால், யாருக்கும் இன்னும் குழந்தைகள் இல்லாததால் குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த குழந்தையின் சிரிப்பை பார்க்கையில், அவனுக்கே கஷ்டமாக இருந்தது. இந்த குழந்தைக்கா இப்படி ஒரு  நோய் வரவேண்டும். எப்படியாவது இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும். என்று முடிவெடுத்தான்.

அதற்கு பிறகு டாக்டரை பார்த்து, ட்ரீட்மெண்ட் பற்றி தெரிந்துகொண்டு, அதற்காகும் செலவை தானே ஏற்றுக் கொள்வதாக கூறி சீக்கிரம் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டினான்.

பாரதியால் இன்னும் நம்பவே முடியவில்லை. அபியை அவன் அலுவலகத்தில் பார்த்த பொழுதே இவன் கண்டிப்பாக ஏதாவது உதவி செய்வான் என்று தோண்றியிருந்தது. ஆனால் இப்படி முழு செலவையும் அவனே ஏற்றுக் கொள்வான் என்று நினைக்கவில்லை.

குழந்தையின் அம்மாவும் அவன் கையை பற்றி அழுதார்.

“ரொம்ப நன்றி சார். என் வாழ்க்கையே மீட்டு  கொடுத்திருக்கீங்க. என் கணவர் போன பிறகு அபிதான் எனக்கு எல்லாம். அவள் இல்லைனா நானும் இல்லை. எங்க இரண்டு பேரோட உயிரையும் காப்பற்றி இருக்கீங்க” என்று தழுதழுத்தார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை சிஷ்டர். என்னால முடிஞ்ச சின்ன ஹெல்ப் அவ்வளவுதான். சீக்கிரம் அபி நல்ல படியா ஆபரேஷன் முடிஞ்சு உங்களோட சந்தோஷமா இருப்பா. தைரியமா இருங்க “ என்று விடை பெற்றான்.

அபியும் , பாரதியும் அருகில் இருந்த காபி ஷாப் க்கு சென்றனர். இருவர் மனமும் ஒவ்வொரு நிலையில் இருந்தது. இருவரும் அமைதியாக இருந்தனர்.

பின் இருவரும் ஒரே சமயத்தில் “Thanks” என்றனர். இருவரும் சிரித்துகொண்டே பின் அபி தொடர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.