(Reading time: 54 - 107 minutes)

பாக்கியமும் அதற்குமேல் கோபத்தை கட்டு படுத்த முடியாமல் சிரித்தார்.

“திடீர்னு, ஏம்மா, என் நம்பர் அந்த பொண்ணுகிட்டயும்  இருக்கு இல்ல. ஏன் அவள்  போன் பண்ணி பேசி இருக்கலாம் இல்ல. நான்தான் வேலையில் மறந்துட்டேன். அந்த பொண்ணு வீட்ல சும்மா தான இருக்கு. ஏன் பண்ணல”

“ஏண்டா , ஆம்பள நீ போன் பண்ணாதப்போ அவள் மட்டும் எப்படி பேசுவா ? அவளுக்கும் தயக்கமாதான இருக்கும். நீ  முதலில் போன் பண்ணு. அதுக்கப்புறம் இந்துவும் தானா பேசுவா. இந்தா ப்ரேக்பாஷ்ட் சாப்டிட்டு சிக்கிரம் போய் போன் பண்ணு. இல்லைனா இன்னும் ஏதாவாது வேலை வந்திரும் உனக்கு என்று விரட்டினார்.. “

தன் உணவை முடித்து மேல வந்தவன் மறக்காமல்  அம்மா சொன்னது போல் மொபைலை எடுத்து இந்துவின் நம்பரை அழுத்தினான்.

சிறிது நேரம் அடித்ததும் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது

“ஹலோ, This is அபி. யாரு இந்துவா?

சிறிது நேரம் தயக்கத்திற்கு பிறகே பதில் வந்தது மறுமுனையிலிருந்து.

“நான் இந்துதான். சொல்லுங்க”

ஏனோ , அவள் குரலில் உற்சாகம் எதுவும் இல்லாமல் வேண்டா வெறுப்பாக பேசுவதை போல் இருந்தது.

“ஹாய், சாரி ஒன் வீக் கா ஆபிஷ்ல கொஞ்சம் வேலை அதிகம். அதான் போன் பண்ண முடியல”

“இட்ஷ் ஓகே “

“அம்மா தான் உங்கிட்ட பேச சொன்னாங்க. அப்பதான் உங்களை பத்தி தெரிஞ்சுக்க முடியும்னு “ என்று என்ன பேசுவதென்று தெரியாமல் ஏதோ உளறினான்.

“ஹ்ம்ம் சொல்லுங்க. என்ன தெரிஞ்சுக்கனும் னு “

“என்ன படிச்சிருக்கீங்க ? “

“B.Sc”

“என்ன மேஜர்”

“Maths”

“எந்த காலேஜ் “

“QMC”

“ரொம்ப முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது. அவனவன் கட்டிக்க போற பொண்ணுகிட்ட என்ன எல்லாம் ரொமாண்டிக்கா பேசறானுங்க. இவர் என்னடான்னா இன்டர்வ்யூ நடத்திகிட்டிருக்கார்”  என்று தலையில் அடித்து கொண்டது மனசாட்சி

இதே மாதிரி 2 நிமிடம் பேசிவிட்டு “நீங்க எதுவும் பேசனும்னா என் நம்பருக்கு கால் பண்ணுங்க” என்று போனை வைத்தான்.

போனை வைத்ததும் “யப்பா, இப்பவே கண்ண கட்டுதே. 2 நிமிடம் மேல இந்த பொண்ணுகிட்ட எதுவும் பேசரதுக்கு இல்லையே. ஏதோ , இன்டர்வ்யூ மாதிரி கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுது. வேற  இன்டெரெஷ்ட் ஆ அதுவும் பேச மாட்டேங்குது. இது கூட எப்படி லைப் புள்ளா ஓட்டறது.

காலம் முழுவதும் இது கூட  இன்டர்வ்யூ நடத்த நம்மலால  முடியாது. எப்படிதான் லவ்வர்ஷ் கிட்ட மணி கணக்கா பேசறாண்களோ? கோயில் கட்டி தான்  கும்பிடனும்.

ஒரு வேளை அம்மா சொன்ன மாதிரி எங்கிட்ட பேச அந்த பொண்ணுக்கு தயக்கமா? கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுமோ? பார்க்கலாம் என்று தன் வேலைய தொடர்ந்தான்.

அதற்கப்புறம் இரண்டு முறை போன் பண்ணப்பவும் அதே மாதிரியே உரையாடல் தொடர்ந்தது. அபிக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. என்ன இது, கஷ்டப்பட்டு இந்த பொண்ணு கூட பேச வேண்டி இருக்கு. இனிமேல் எதுனாலும் அவளே போன் பண்ணட்டும் என்று முடிவு செய்தான்.

இப்படியே ஒரு மாதம் கடந்து இருந்தது.

அன்று அலுவலகத்தில் அந்த வாரத்திற்கான ரிப்போர்டை ஆராய்ந்து கொண்டிருந்தான் அபி.

அவன் மொபைல் அழைத்தது. எடுத்தவுடன் புது நம்பராக இருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவாறே காலை அட்டென்ட் பண்ணினான்.

“குட் மார்னிங்க் சார். This is Bharathi. Can I have your 2 minutes please” என்றது ஒரு பெண்ணின் குரல்.

ஏனோ அந்த குரல் இனிமையாக இருந்தது. அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. அவன் அறியாமலே அவன் உதடுகன் அசைந்தது.

“Sure.  Please go ahead” என்றான் உற்சாகமாக

“Thank you very much Sir! “ என்று  தொடர்ந்தாள்.

“நான் ஒரு அவசர உதவி வேண்டி பேசறேன். 4 வயதான ஒரு குழந்தைக்கு இதயத்தில் ப்ராப்ளம். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யணும். அந்த குழந்தையின் அம்மா போதிய பணம் இல்லாததால் தடுமாறி வருகின்றார்.

நீங்க ஏதாவது கொஞ்சம் உதவி செய்தீங்கனா அந்த குழந்தையை காப்பத்திடலாம் “ என்று வேக வேகமாக சொல்லி முடித்தாள்.

அவள் கூறியதை கேட்டதும் அபியின் உற்சாகம் எல்லாம் வடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.