(Reading time: 54 - 107 minutes)

ஹி ஹி 2 வாரமா ஒரே பிசிமா. ஒரு U.S ப்ராஜெக்ட்க்காக அலைஞ்சிட்டு இருந்தேன். நேற்றுதான் எல்லாம் பார்மாலிட்டீஷ் முடிஞ்சுது. இந்த பிசில நீ கொடுத்த நம்பரே ஞாபகம் இல்லை. அத எங்க வச்சேனு கூட தெரியல “

“அதெல்லாம் எனக்கு தெரியாது. உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு. உன்கிட்டயும் கேட்டுட்டுதான் நிச்சயம் ஏற்பாடு பண்ணினது. இப்ப ஏண்டா திடீர்னு வேணாங்கிற. இந்து ரொம்ப நல்ல பொண்ணு டா. எவ்வளவு வசதி இருந்தாலும் இந்த காலத்து பொண்ணுங்க மாதிரி மாடர்னா அலையாம எவ்வளவு அடக்க மா இருக்கா.

அவள இரண்டு, மூனு பங்ஷன் ல பார்த்தப்பவே ரொம்ப பிடிச்சிடுச்சு. உனக்கு எல்லா விதத்திலயும் பொருத்தமா இருப்பா. “

“அதெல்லாம் சரிதான் மா. இருந்தாலும் ..

“யாரையாவது லவ் பண்றியா ? இல்ல வேற எந்த பொண்ணையாவது பிடிச்சிருக்கா? அப்படி எதாவது இருந்தா சொல்லு கண்ணா. அந்த பொண்ணையே பண்ணி வச்சுடறோம். “

“அம்மா, பாக்கியத்தம்மா!  லவ் பண்ற மாதிரியா உங்க பையன வளர்த்தி வச்சிருக்கீங்க? இவன் இருக்கிற அழகுக்கு ஷ்கூல் டைம் லயெ பொண்ணுங்க இவன சுத்தி சுத்தி வந்தாங்க. எத்தனை பொண்ணுங்க அப்பவே லவ் லெட்டெர் கொடுத்தாங்க தெரியுமா. இவன் இருக்கானே , என்னை அத படிக்க கூட விடலை. அப்படியே கிளிச்சி போட்டுட்டார்.

சரி காலேஜ்  டைம்லயாவது கண்ணுக்கு குளிர்ச்சியா பொண்ணுங்க இருக்குமே அங்க போய் சைட் அடிக்கலாம்னா, ஒரு பொண்ணகூட ஐயா திரும்பி பார்க்கல. எப்ப பாரு கையில ஒரு புக்ஐ தூக்கிட்டு எப்படி பிஷினஷ் ஆரம்பிக்கறது, அத எப்படி வளர்க்கறது னே சுத்திக்கிட்டு இருந்தான்.

காலேஜ் குயின் ரூபினி. எல்லாரும் அவள் கண் பார்வை கிடைக்காதானு ஏங்குவானுங்க. அது என்னடானா இவனையே சுத்தி சுத்தி வந்தது. நீ இல்லைனா செத்துருவேனு அழுதது.

நம்ம ஐயா கொடுத்த லெக்ஷர் ல இப்போ கல்யாணம் ஆகி ஊ.ஸ் செட்டிலாயிடுச்சு. சரி மாடர்ன் பொண்ணுதான் பிடிக்களை னு குடும்ப குத்து விளக்கா இருந்த பொண்ணுங்களயும் காமிச்சேன். எங்க திரும்பி பார்த்தா தான ஆகும்.

அப்பதான் பிஷினஷ் டெவெலப் ஆகனும்னு பிசியா இருந்தார். இப்ப என்ன? எத்தனை மீட்டிங் போரார். எத்தனை பிசினஷ் பார்ட்டியில பொண்ணுங்க அவ்வளவு அழகு அழகா வர்ராங்க. யாராவது பிசினஷ் தவிர வேற பேசினா அப்படியே நழுவிடறார்.

பாவம் அந்த பொண்ணுங்களும். என்னென்னமோ செய்யுதுங்க. ஒரு பலனும் இல்லை. நான் எந்த பிறவியில் செய்த பாவமோ இவனுக்கு மனசாட்சியா வந்து மாட்டினேன் எதயும் அனுபவிக்க முடியாமல் “ என்று புலம்பியது அவன் மனசாட்சி

“நீ இப்படியே இரு. சின்னவன பாரு. 25 வயசு தான் ஆகுது. யாரோ ஒரு பொண்ண லவ்  பண்றானான். உனக்கு கல்யாணம் வேண்டாம் னா அவனுக்கு பண்ணி வைக்க சொல்லி நிற்கிறான்.

“உங்க பெரிய பையன் எப்ப பார் புக் இல்ல லேப்டாப் கூடவே சுத்தி கிட்டிருந்தார். சின்னவனோ பொண்ணுங்க பின்னாடியே சுத்தினார். அவங்கவங்க உழைப்புக் கேற்ற பலனை அடையறாங்க.

அப்பவே உங்க பெரிய பையனையும் புக் க பிடுங்கி வச்சுட்டு நாலு பொண்ணுங்க இருக்கற இடமா கூட்டிட்டு போயிருந்தீங்கனா, உங்களுக்கு இந்த கஷ்டம் வந்திருக்காது. நானும் என்ஜாய் பண்ணியிருப்பேன்.

அட்லீஷ்ட் இப்பவாது இந்த பாக்கியத்தோட பாக்கியத்தால அந்த இந்து வ கண்ணுல காட்டியிருக்காங்க. அதயும் பார்த்து ரசிக்க விடாம இவன் தகறாரு பண்றானே, எங்க போய் அழ ? “

பாக்கியம் “இப்பவும் ஒண்ணும் கெட்டுபோகல. நிச்சயத்துக்கு பிறகு தினமும் போன் பண்ணி பேசு. இல்ல நேர்லயே மீட் பண்ணி பழகிக்கோடா.

மறுபடியும் கோட்டை விட்டுட்டு கல்யாணத்தன்று “நான் பொண்ணு கூட பேசல,  பழகல னு எதாவது காரணத்தை சொல்லி தகறாரு பண்ணின அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

சீக்கிரம் கிளம்பி கீழ வா. இப்பவே உங்கப்பா கத்திகிட்டிருக்கார். மறக்காம வேஷ்டி ய கட்டிட்டு வாடா” என்று விரைந்தார்.

“பேசாம இந்த மனசாட்சி சொல்ற மாதிரி யாரையாவது முன்னாடியே லவ் பண்ணியிருக்கனுமோ?

எங்க இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் பார்க்கற மாதிரியா இருக்கு. எல்லாம் செயற்கையான மேக்கப்  ல தான் சுத்துதுங்க. சிரிக்கிறது கூட எல்லாம் ரெடிமேட் சிரிப்பா தான் இருக்கு. இதுல போய் யாரு நல்லவங்கனு எப்ப கண்டுபிடிச்சு லவ் பண்றது. அந்த டைம் உருப்படியா செலவிட்டா இன்னும் பிஷினெஷ் டெவெலப் பண்ணலாம்.

நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது. பேசாம பாக்கியம் பார்த்து வச்சிருக்கிற இந்த பாக்கியத்தோடயெ லைப் ஐ ஓட்ட வேண்டியதுதான்.”  என்று புலம்பி கொண்டே ரெடியாக கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.