(Reading time: 54 - 107 minutes)

து எப்படியோ, நடக்கறது நடக்கட்டும். என்னால் இந்த  பாக்கியத்தை இனிமேல் சமாளிக்க முடியாது. Lets wait and see “ என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

இதனை பார்த்த பாக்கியத்தின் மனம் நிறைந்திருந்தது. எங்கே இவனுக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வைக்கறமோ என்று உறுத்தியது இப்போ மறைந்தது. சீக்கிரம் சரி ஆகிடுவான்.

“முருகா, நீதான் அவன்  மனதை மாற்றி இந்த கல்யாணத்தை ஏற்றுக்க வைக்கணும்”  என்று வேண்டிக் கொண்டார்.

இதைக் கேட்ட வேலனும் ரகசியமாக சிரித்துக்கொண்டே அடுத்த பக்தரின் கோரிக்கைய கவனித்தார்.

பாக்கியத்துக்கு தெரியாது இது  காதலின் மகிமையை உணர்த்த அந்த வேலன் ஆடும் விளையாட்டு என்று. அவனும் வள்ளியை காதல் கொண்டு பல சோதனைகளுக்கு பிறகு மணந்தவன் அல்லவா. அதுதான் தன் ஆட்டத்தை என்றோ தொடங்கிவிட்டான்.

அதன் பிறகு விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பினர்.

“இந்து கிட்ட சொல்லிட்டு வாடா “ என்று காதை கடித்தார் அம்மா.

இவனும் விடை பெறும் விதமாக அவளை நோக்கினான். அவளும் இவனை பார்த்திருந்தாள். முகம் இவனை பார்த்து இருந்தாலும் கண்கள் வேறெங்கோ பார்த்து இருந்ததை போல இருந்தது.

“எல்லாரையும் ஆராய்ச்சி கண்ணோட பார்த்து பார்த்து அதே பழக்கமா ஆயிருச்சு போல. ஒரு சின்ன விசயமும் பெருசா தெரியுது“ என்று தன்னையே திட்டிக் கொண்டு மெதுவாக தலை அசைத்து விடைபெற்றான்.

காரில் வரும்பொழுது பாக்கியம் அவனருகில் பின்னால் அமர்ந்து இருந்தார். அகிலேஷ்  காரை ஓட்டி கொண்டிருந்தான்.

“கண்ணா , இந்தா இந்துவோட  நம்பர். போன தடவை மாதிரி தொலைச்சிட்டு நிக்காத. இல்ல அது சரி வராது. உன் போன கொடு. நானே ஷேவ் பண்ணி வச்சுடறேன். மறக்காம பேசுடா.

இந்து கிட்டயும் உன் நம்பர் கொடுத்திருக்கிறேன். அவள் எதுவும் போன் பண்ணினா யாரோ என்று முழிக்காத. நல்லா பேசு “ என்று சிரித்தார். இதை கேட்டு காரில் இருந்த அனைவரும் சிரித்தனர்

“ஹ்ம் எல்லாருக்கும் என்னை பார்த்தா சிரிப்பா இருக்கு “ என்று புலம்பி கொண்டே “சரி மா “ என்றான்.

ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று ஞாயிறு காலை 10 மணிக்கு மேல் மெதுவாக எழுந்து, காலை கடன்களை முடித்து மெதுவாக கீழ இறங்கி வந்தான் அபி.

பாக்கியம் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.

“குட் மார்னிங்க் மா . எங்க யாரையும் காணோம். வீடு ரொம்ப அமைதியாக இருக்கு“

“வா டா. இப்பதான் அம்மா ஞாபகம் வந்ததா. ஒரு வாரமா எப்ப வர்ர எப்ப போற னு ஒண்ணுமே தெரியல. போன் பண்ணாலும் ஆப் ல இருக்கு. நானும் இரண்டு நாள் நைட் காத்திருந்தேன். நீ ஆளவே காணோம்”

“சாரி மா. இந்த  வாரம் முழுவதும் புது ப்ராஜெக்ட் க்காக பயங்கர பிசியாக இருந்தேன். பாதி நாள் ஆபிஷ் லயே தங்கிட்டேன்.

“ஏண்டா, இப்படி அலயற? “

“மா, என்னை நம்பி 10000 பேர் இருக்காங்க. கம்பெனிக்கு  தொடர்ந்து ப்ராஜெக்ட்ஷ்  வந்தாதான் இவங்களுக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணமுடியும். அதுக்குதான் இவ்வளவு கஷ்டபடறேன். அது  இல்லாம இன்னும் பெரிய லெவல் அ கொண்டு வரனும். அப்பதான் நிறய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்.

நம்ம இளைஞர்கள் பல பேர் படித்து முடித்ததும் வேலை இல்லாம இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யனும் மா “

“நமக்கு இருக்கிற வசதிக்கு இப்படி அலயணுமா ?  பேசாம உன் அப்பா தொழிலையே பார்த்துக்க வேண்டியதுதான “

எனக்கு அந்த பீல்ட் ல இன்டெரெஷ்ட் இல்ல. எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. மனசுக்கு பிடிச்சத செய்யறது ல தான் திருப்தி இருக்குமா “

“எப்படியோ போ. உன்னை மாத்த முடியுமா? சரி, என்ன சொல்றா இந்து , எப்படி இருக்கா? “

“எந்த இந்து? “

“டேய், நிஜமாகவே அடி வாங்க போற. போன வாரம் தாண்ட நிச்சயம் பண்ணிட்டு வந்தோம். அதுக்குள்ள  எந்த இந்துனு கேட்கற? இந்துகிட்ட போன் பண்ணி பேசினியா இல்லயா? “

“ஹி ஹி  நீ டக்குனு இந்துனு கேட்கவும் ஆபிஷ் ஷ்டாப் தான் யாரையோ  கேட்கறேனு நினைச்சேன். நான் பயங்கர பிசிமா.  போன் பண்ண டைம் இல்ல.”

“ஏண்டா, யாருனே தெரியாத 10000 பேருக்காக பார்க்க முடியுது. உனக்காக, உன்னை நம்பி, உன் வாழ்க்கை முழுவதும் துணையாக வரப்போற ஒருத்தி உனக்கு தெரியலை “ என்று கோபமாக முறைத்தார்.

“சாரி மா. டோன்ட் பி டென்ஷன். இன்று நான் ப்ரீ தான். கண்டிப்பா நான் போன் பண்றேன். கொஞ்சம் சிரிக்கிறியா. கோபத்துல உன் முகம் பார்க்க முடியல. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.