இரவில் மனைவியிடம் உரையாடிக்கொண்டிருந்தார் பரந்தாமன்.
மருமக்கமார் ரெண்டு பேரும் ஒரு கிண்ணி மிச்சம் வைக்காம கொண்டு போயிட்டாங்க காயத்ரி….இப்போ நாம தான் புது தம்பதிகள் போல இருக்கு….நமக்குதான் புது பாத்திரம் வாங்கணும்” எனச் சிரிக்க..
அதுக்கென்ன வாங்கிட்டா போச்சு” என மகிழ்ச்சியாகவே சிரித்தவர். அது என் பிள்ளைங்க தானே அவங்களுக்கு இல்லாம வேற யாருக்குங்க….”
அதுவும் சரிதான்.ஆனால் சின்னவன் அவ்வளவு சொல்லியும் நீ கேட்காம தனிக்குடித்தனம் வச்சது தான் ஆச்சரியமா இருக்கு.
அவன் சொல்லுவான், அவனுக்கு என்னங்க தெரியும். நாம தான நல்லது கெட்டது பார்த்து செய்யணும்.
ஏன் உனக்கு திடீர்னு இப்படி தோணுச்சு, இவ்வளவுக்கு சின்னவன் பையன் இப்போதான் ஆறு மாச கைக் குழந்தை. மருமகளுக்கு அவ்வளவு சமார்த்தியம் பத்தாது வேற.
அதுக்கென்னங்க நாம என்ன தூரமாவா இருக்க போறோம், கிட்டதான நாள் முழுக்கன்னாலும் நம்ம பேரனைப் பார்த்துக்க நமக்கு கசக்குமா? வேணும்னா அவளுக்கு முடியாதப்ப நான் சமைச்சு குடுத்திட்டு போறேன்….
ஆச்சரியமாக தன்னை நோக்கிய கனவரிடம்.......
எனக்கென்ன நம்ம பிள்ளைங்களை தூரமா வைக்கணும்ன் ஆசையாங்க, அப்படியெல்லாம் இல்ல ஆனால் ஏன் அவங்களை தனியா வைக்க நினைச்சேன்னா ………..முதலில இருந்தே வீட்டு வேலைங்களை நானும் மூத்தவளும் தான் பார்த்துப்போம். அப்ப எல்லாம் யாருக்கும் ஒன்னும் பெரிசா தெரியலை.
சின்ன மருமக வந்ததும் அவளும் எங்களை மாதிரியே எல்லா வேலைகளையும் செய்யணும்னு எதிர்பார்ப்பு இருக்குமில்ல. அவளுக்கு அவ்வளவா பொறுப்பு காணாது, செல்லமா வளர்ந்திருக்கு வேற கொஞ்ச நாள் ஆனா அவளும் எல்லாம் பழகிடுவா. இதை நான் புரிஞ்சுக்குவேன் எல்லாரும் புரிஞ்சுக்குவங்களா?
………………… இப்போ யார் புரிஞ்சுக்கலியாம்…..
உங்க மூத்த மகன் தாங்க, அவனுக்கு தன்னோட மனைவியே எல்லா வேலையும் செய்யிறது பார்த்து ஒருவகையான மனக் கஷ்டம் போலிருக்கு. கொஞ்ச நாளா முகத்தில சிரிப்பே இல்லை. இப்படியே போயிட்டிருந்துன்னு வச்சுக்கோங்க அவன் நிம்மதியும் போகும், வீணா இதால அண்ணன் தம்பி உறவும் கெடும்.
அதான் எதுக்கு அந்த நிலைமை வர வரைக்கும் வைக்கணும். தனியா இருந்து அவங்களும் பழகட்டுமே. வரவு செலவு அவங்களுக்கும் புரிய வரும். சின்ன மருகளுக்கும் கொஞ்சம் நேரத்தோட எழும்பி எல்லா வேலையும் செய்யணும்னு பொறுப்பு வரும், இப்ப இல்லாட்டும் நம்ம காலத்துக்கு பிறகு அவங்களுக்கு வர வேண்டிய பொறுப்புணர்ச்சி தானேங்க. இப்பவே அவங்க தனியா இருந்தா ஏதாவது பிரச்சினைனா உதவி செய்யிறதுக்கு நாம தான் இருக்கோமே அதான் தனிக்குடித்தனம் வச்சேன். ஏங்க இதில உங்களுக்கு ஏதாவது வருத்தமா?
இல்லைமா என் மனைவி ஒரு மந்திரி அவ எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு எப்பவுமே நினைச்சுப்பேன். இன்னொரு முறை அதை நீ உண்மைன்னு நிரூபிச்சுட்ட என மனைவியின் கை பிடித்து தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும் விதமாக அழுத்தினார்.
அதிலும் கல்யானத்துக்கு அப்புறம் நம்ம பிள்ளைங்க பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்த பிரைவசி நமக்கு மறுபடியும் கிடைச்சிருக்கு நான் எதுக்கு வருத்தப் பட போறேன் எனச் சொல்லி முடிக்க கதவை இடி இடியென இடித்தனர் அவர்கள் பேரக் குழந்தைகள்.
தாத்தா, பாட்டி கதவை திறங்க நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு உங்க கூட தான் தூங்க போறோம் எனக் கத்த கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து மலர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
This is entry #125 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி
எழுத்தாளர் - ஜான்சி
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.