(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - இப்படிக்கு நான்... - ரேவதிசிவாWoman

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்-படிப்பதற்கு முன்,இக்கதையைப் படிப்பவர் யாராயினும் நடுநிலையில் இருந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.பெரும்பகுதியை வைத்துதான் கூறியுள்ளேன் தவிர,முழுமையாக வைத்து அல்ல...

மர்ந்திருந்தேன் எதைஎதையோ எண்ணிக் கொண்டு!திடீரென்று அருகில் ஏதோ ஓசைக் கேட்க,திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.அவன்தான்!அவ்வளவு கோபித்தும் பயன் இல்லாது,மறுபடியும் வந்து இருக்கிறான்.இப்பொழுது என்ன செய்யப்போகிறான்? என்று யோசனையில் அமைதியாகப் பார்த்தேன்.முகத்தில் புன்னகையை தவழ விட்டப்படி,எப்பொழுதும் எனக்கு பிடிக்கும் பாடலை இலயித்தப்படி பாட ஆரம்பித்தான்.எனக்குத்தான் அதில் இலயிக்க முடியவில்லை.

மனதைப் பித்துக்கொள்ள செய்யும் பாடல் அது.ஆனால், இன்று மனதில் அமிலத்தை ஊற்றெடுக்கச் செய்தது!மனதிற்கு மிகவும் நெருங்கியவன் அன்று,இன்றோ!நான் அழிக்க நினைக்கும் என் முதல் எதிரி.

எந்த உணர்வும் காட்டாமல் அமர்ந்திருந்த என்னை நெருங்க முற்பட,எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ!சீதை போன்று நானும் பூமியில் புதைந்து போகக் கூடாதா!பூமிதாய்தான்  கை விட்டுவிட்டால்,ஆனால் வான்தந்தை  நிறைவேற்றினார் என்வேண்டுதலை.சூறாவளியில்,அனைவரும் சிறிது தடுமாற,விழுந்தேன் பெருகிய வெள்ளத்தில் அவன் கையில் சிக்காமல்!ஆம் வெள்ளந்தான்.ஆடுத்தவர்களுக்கு புதைகுழி,ஆனால் எனக்கோ!பூப்படுக்கை.

பார்த்தேன்!அவன் முகத்தில் துயரம்.எனக்கு அதுவே நிறைவாக இருந்தது.ஆனால் நிறைவேறாத ஒரு எண்ணத்தோடுதான் இப்பிறவி முடியப்போகிறது.இறக்கும் தருவாயிலும் இறுகிப்போயிருந்த உணர்வுகளோடு கண் மூடினேன்,மறுப்பிறப்பில் தொடரும் ....

டவுளின் முன் கொண்டு நிறுத்தினர்.ஏன் மகளே!இப்படி செய்தாய்?என்று கேட்க, கட்டுக்கடுங்காமல் வந்தது சினத்தால் மொழிந்தேன்! என் உள்ளக்குமுறல்களை.

கேளுங்கள் ஐயா!நீங்கள் எதை எண்ணிக்கொண்டு,எங்கள் இனத்தவரைப் படைத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது.ஆனால் எங்களை கசக்கிப் பிழியும் இன்னல்களிலிருந்து விடுதலை வேண்டும்.காலங்காலமாய் அடிமை எண்ணத்தை ஊற்றிப் பயிராக்கிவிட்டார்கள்.நன்நிலத்தில் உள்ள களைகளைப் போல் எம் இனத்திலும் தீயவர்கள் உள்ளனர்.இவற்றிற்கு அடிப்படை என்ன?என்றுதான் இப்பொழுது வரை சிந்தித்துக்கொண்டு இருக்கின்றேன்.

பெருமைக்குத்தான் குறைவில்லை,சக்தி,தெய்வம் என்று என்னஎன்னவோ சொல்கிறார்கள்.நாங்கள் கேட்டோமா?எங்களை தெய்வமாக,பொக்கிஷமாய் பாருங்கள் என்று!நாங்கள் என்ன பொருளா?அப்படிதான் ஐயா நடத்துகிறார்கள்.பொருளாக எங்களை பாவித்து விலைப்பேசி விற்கின்றனர்,வாங்குகின்றனர்,சிலர் திருடுகின்றனர்,பலர் பங்கு போட்டு கொள்கின்றனர்.எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பல கட்டுபாடுகள் போட்டு பாதுகாக்கின்றனர்.குற்றம் செய்தவனை கழுவில் ஏற்றாமல்,எங்களை ஏற்றுகிறார்கள் ஐயா பலமுறை! அவர்கள் செயல்களால்.அவர்களுக்காக படைக்கப்பட்டோமென்ற ஒரெ காரணத்திற்காக நாங்கள் அனுபவிக்கும் துண்பங்கள் பலபல.உங்களிடம் கேட்கின்றேன்,ஏன் எங்களுக்காக அவர்கள் படைக்கப்படவில்லையா? அவர்கள் எங்களுக்கு தருவதில்,பாதி நாங்கள் தந்தால் அவர்கள் தாங்குவார்களா?

உம்மிடம் கேட்கிறேனே!பெற்ற தாய் பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டுவதைப் போல்தானே நீயும் செய்கிறாய்!

ஆண்களில் நல்லவர் யாரும் இல்லையென்று சொல்லமாட்டேன்.ஆனால் அவர்களுக்கு எங்கள் துன்பம் தெரிந்தும் அமைதியாகத்தானே இருக்கின்றனர்.எங்கள் இனத்தில் ஒருத்தி கேடு  செய்தாலும் அதை பூதாரமாக்கி அவளைச் சேர்ந்தவர்களையும் கடைசிவரை இம்சிக்கின்றனர்.ஆனால் இவர்கள் ஒழுக்கம் தவறினால் பெருமையாகப் பேசுகின்றனர்.என்ன நியாயம் இது!விலைமாதுவிடம் சென்றவனைப் போற்றி,அவனுக்காக வாழ்வதுதான் கற்பென்றால்,தேவையில்லை இக்கற்பு.கட்டிய மனைவி அருகில் இருக்க அடுத்தப்பெண்ணை திருமணம் செய்பவனுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான், குடும்பப்பெண் என்று பட்டம் கிடைக்குமென்றால் தேவையில்லை இப்பட்டம்.அவர்கள் சொல்வதற்கு பணிந்துப்போனால்தான் நல்ல குணமான பெண் என்று பெயர் கிடைக்குமென்றால்,தேவையில்லை இப்பெயர்.

எங்களை விமர்ச்சிப்பதற்கு யார் கொடுத்தார் அதிகாரம்.குற்றத்திற்கு தண்டனை என்றால் அவர்களுக்கு பல வகையில் தண்டனை கொடுக்கின்றர்.ஆனால் எங்களுக்கு,எல்லாவற்றிலும் முதலில் கொடுக்கும் தண்டனை வன்புணர்ச்சித்தான்.குழந்தை என்றுகூடப் பார்க்க மாட்டேன் என்கிறார்களே!எந்த ஒரு படைப்பாவது தன் இனத்தில் உள்ள குழந்ததையை புணருமா? நீரும் பார்த்துக்கொண்டுதான்  இருக்கிறீரே!பாலியல் ரீதியாகவே சித்தரிக்கின்றனர்,நாங்கள் உயிரும் உணவுர்வும் கொண்ட மனுஷி இல்லையா?விலைமாது என்று இழிவாகப் பார்க்கப்படும் பெண்களிடம் செல்பவனை, என்னவென்று விளிப்பது?முடியவில்லை.குழந்தையை வளர்க்கும் பொறுப்பு பெண்களுக்கென்று சொல்லியே, கடமையிலிருந்து எளிதாக பல பேர் நழுவிக் கொள்கின்றனர்.சொல்லினாலும் தீராது ஐயா !பல விஷயங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றோம்.அவர்களுக்கு “இணை” வேண்டும் என்றுதானே படைத்தீர், நாங்கள் அவர்களுக்கு “இணையாகவா” நடத்தப்படுகிறோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.