(Reading time: 8 - 15 minutes)

வர்களை மாற்று என்று சொல்வதைவிட,எம் பெண் இனத்தில் உள்ள களைகளை நீக்குங்கள் ஐயா! அவர்கள் மனதை தூய்மையாக மாற்றுங்கள்.தப்பு செய்பவனுக்கு அக்கணமே தண்டனை வழங்கும் உறுதியை தாருங்கள்.பிறரை சாரும் நிலையை மாற்றுங்கள்.நன்னெறியை தாருங்கள்.வலிகளைப் பொறுத்துக்கொள்ளும் தன்மையைவிட,வலி கொடுப்பவர்களை வேரறுக்கும் வல்லமையை தாருங்கள்.அடுத்தவர்களிடம் நீதி கேட்டு இழந்துவிட்டோம் ஐயா! அனைத்தையும்.எதுவும் செய்ய முடியாது அமைதியானவர்கள் என்றுதானே,எங்களின் அகத்திலும் புறத்திலும் துன்பத்தைக் கொடுத்து இன்புறுகின்றனர்,நாங்கள் சிறிதாக அனைவரும் சேர்ந்து எதிர்த்தால் முடியுமா?முடிந்தால் எங்களின் சமுகத்தை மாற்றுங்கள்,இல்லையேல் எங்களுக்கு வலிமையைக் கொடும்.இதற்கு மேல் நான் கூறினால்,அது நீண்டுக் கொண்டேப் போகும்,நீர்தான் இனி சொல்ல வேண்டும்.

நான் நல்ல நோக்கத்தாடுதான் படைத்தேன்!ஆனால் அழிவை நோக்கித்தான் செல்வேன்! என்று கூறும் உம் மானிட இனத்தவரை என்ன செய்வது!படைப்பை மாற்ற முடியாது,அதனால்.உனக்கு வரம் வேண்டுமானால் தருகின்றேன்,கேள்.

வரம்.ம் ..என்னை இம்முடிவுக்கு கொண்டு வந்தவனுக்கும்,அதற்கு துணை போனவளுக்கும் தண்டனை தர வேண்டும்.

உன் கணவன் செய்த குற்றத்திற்கு தண்டனை தருவது என்றால்,உலகில் பல நபர்களுக்குத் தர வேண்டும்.சரி,ஏன் அந்த பெண்ணுக்குத் தண்டனை தர வேண்டும் என்கிறாய்.

என் கணவன் அவளை ஏமாற்றி வஞ்சித்து இருந்தால்,அவனை ஒதுக்கிவிட்டு அப்பெண்ணுக்கு என்னால் முடிந்த ஆதரவை தந்து இருப்பேன்.ஆனால்,அவள் அடுத்தவளுடைய கணவன் என்று அறிந்தே தப்பு செய்துள்ளாள்.இப்போன்ற பெண்களால் எங்கள் இனத்திற்கே கேடு.அதனால்தான் பெண்கள் அனைவருக்கும் நன்னெறியை தாருங்கள் என்று சற்றுமுன் கேட்டேன்.எம்மக்கள் நல்லவற்றை உதாரணமாக எடுத்துக்கொண்டு வாழுகிறார்களோ?இல்லையோ,ஆனால் தீயவற்றை உதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டனர்.

சரி!தருகின்றேன்,உன் அடுத்தப் பிறப்பில்,நீயே நிறைவேற்றுவாய்.

டுத்தப் பிறப்பில் நான்

நெப்பன்தஸ்(Nepenthes) ஆக பிறவி எடுத்துள்ளேன்,அருகில் வரும் வஞ்சகர்களை(பூச்சிகள்) ஆழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.அழிப்பதில் இவ்வளவு மகிழ்ச்சியா! என்று கோபப்படுகிறீர்களா?தீயவர்களை அழிப்பதில் ஏன் வருந்த வேண்டும்?அவனும் வந்தான் இம்முறை வண்டாக,அழகிய ரீங்காரத்தோடு!மனதில் தோன்றிய சலனத்தை அழித்து,அவனையும் அழித்து விட்டேன்.வருத்தம்தான்.ஆனால் இளகிய மனதை பயன்படுத்திக் கொண்டு எம்மை ஏற்கெனவே முன் பிறப்பில் ஏமாற்றியதால்,இம்முறை வைரத்தின் உறுதியோடு இருக்கிறேன்(என்னைத் தவிர யாராலும் இளக வைக்க முடியாது).உங்களிடமிருந்து விடைப்பெறுகிறேன்.

“(நெப்பன்தஸ்என்பது ஒருவகை தாவரம்.பூச்சிகளை உண்டு வாழும் தன்மை கொண்டது.சில மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அழகுக்காக,பூச்சிகளைப் பிடிப்பதற்காகவும் பயன்படுகிறது.இந்தியாவில் கிழக்குப் பகுதியில் உள்ளது(especially Megalaya))

ஆண்கள் அனைவரையும் குற்றம் சொல்வதற்காக,இதை எழுதவில்லை.தந்தையையும் தமையனையும் தாய்க்கு இணையாக நேசிப்பவள் நான்.ஆனால் சமுகத்தில் என்று எடுத்துக்கொண்டாலும் சரி,வீட்டில் என்றாலும் சரி,பல வகையில் அது சிறியதோ! பெரியதோ!பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது மறுக்க் முடியாத உண்மை.அதே போல் பல துன்பங்களுக்கு பெண்களே! காரணமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. அப்பெண்களுக்குத்தான் முக்கியமாகக் இக்கதை...இக்கதை நான் எழுவதற்குக் காரணம், நான் பார்த்த ஒரு சகோதரியின் கணவன் அவர் நன்நிலையில் ஒரு குழந்தையுடன் இருக்கும்பொழுதே ,வேறு ஒரு பெண்ணை மணந்துக்கொண்டு வாழ்கிறான். இன்னும் விவாகரத்துகூட ஆகவில்லை...இவனையும் , இவனைப் பற்றி தெரிந்தும் அடுத்தப் பெண்ணுக்குத் துன்பம் தருகிறோம் என்று சிந்திக்காமல் இரண்டாவதாய் மணந்து வாழ்பவளையும் என்னவென்று சொல்வது?இதைப் பார்த்த கோபத்தின் வெளிப்பாடே இக்கதை என்றும் கூறலாம்.யாருடைய உணர்வுகளையாவது அறியாமல் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். பெண்களாகிய நாமே நம்மை மதிக்கவில்லை என்றால்,பெண்களின் நிலை? நீங்கள்தான் சொல்ல வேண்டும்...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.