(Reading time: 8 - 15 minutes)

2017 போட்டி சிறுகதை 137 -  கலை எனும் நான்.. கலை சார் - இரசல்

This is entry #137 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி/கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - இரசல்

Lecturer

ன்று தான் நான் முதன் முதலில் ஒரு பொறியியல் ஆசிரியராய் அந்த கல்லூரிக்குள் நுழைகிறேன்.நானும் பொறியியல் படித்து, அதற்கென வேலை தேடி சோர்ந்து போய்! மேலும் படிக்கலாம் என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்து! இன்று பெயருக்கு பின்னால் பி.டெக் எம்.டெக் என்ற படிப்பு முத்திரைகளோடு!! சைபர் செக்யூரிட்டி க்கு பிஎச்டி ஆய்வு செய்துகொண்டிருக்கும் வேலையில், இன்று இந்த கல்லூரியில் வேலை செய்யும் என் முன்னாள் கல்லூரியின் ஆசிரியரின் யோசனை படி இங்கு வந்து சேர்ந்தேன். என் பெயர் கலைநாதன் சுருக்கமாக கலை.

முதல் நாள் வகுப்பிற்குள் நான்.. 

மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ் உள்ளே நுழையும் போது, என்னையே அறியாமல் மாணவர்கள் இருக்கையை நோக்கி நடந்த என்னை! மாணவர்களின் காலை வணக்கம் என்று  கூறிய வார்த்தைகள்.. உண்மையை உணர்த்தியது நான் ஆசிரியர் என்று. 

வணக்கம்! நான் அடுத்த ஆறுமாதங்களுக்கு உங்களுக்கு சைபர் செக்யூரிட்டி பாடத்தினை எடுக்க வந்துள்ளேன். என் பெயர் கலைநாதன். இப்போ ஒவ்வொருத்தராக உங்கள் பெயர் மற்றும் பொழுதுபோக்குகளை கூறுங்கள் என்று அமர்ந்தேன் ஆசிரியர் நாற்காலியில். 

அடுத்த ஒரு பத்து நிமிடங்கள் என்னையும் மீறி என் கல்லூரி நாட்களை கடந்து வர செய்தது அந்த சில மாணவர்களின் கலாட்டா பேச்சுகள். நாற்பது பேர் கொண்ட வகுப்பில் பதினாறு மாணவியரும் இருபத்திநாலு மாணவர்களும் உள்ளனர் இதில் முக்கால்வாசி பேர் கூறியது "புத்தகம் வாசிப்பதையும் இணையதள பொழுதுகழிப்புகளும்" தான் அதிகம், வெகு சிலரே கிரிக்கெட் மற்றும் கால்பந்து என்று கூறினார்கள். அந்த சிலரே மற்றவர்களை கிண்டலும் செய்தனர். அடுத்தவர்கள் பேச தயக்கம் காட்டினாலே சிரித்து விடுகின்றனர்.. இல்லை அவர்கள் பெயர் கூறியவுடன்.. இவர்கள் வைத்திருக்கும் பட்டப்பெயரை கூறி சிரித்து விடுகின்றனர் இந்த விளையாட்டு மாணவர்கள். இப்படியாக பெயர் கேட்க்கும் படலத்தை முடித்து அனைவருக்கும் சைபர் செக்யூரிட்டி என்றால் என்ன என்று சிறு விளக்கத்தோடு அன்று வகைப்பறையை முடித்து ஆசிரியர்கள் அறைக்கு சென்றேன்.

முதல் வகுப்பு எப்படி இருந்தது என்று விசாரணையோடு என்னிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர் சக டிபார்ட்மென்ட் ஆசிரியர்கள். அதில் மொத்தம் ஆறு பேர் என்னையும் சேர்த்து. இரண்டு பெண் ஆசிரியர்கள் மற்றவர்கள் ஆண்கள். அதில் எச் ஓ டி தான் என் முன்னாள் ஆசிரியர் ரகுராமன். அவர் தான் எனக்கு பி எச் டி க்கு வழிகாட்டி. நான் அவ்வளவாக பெண்களிடம் பழகியதில்லை ஆனால் இப்பொழுது ஒரு ஆசிரியராய் தினமும் இரண்டு சக ஆசிரியைகளிடமும் பதினாறு மாணவியருக்கும் பேசும் வழக்கம் அதிகரித்தது. 

ப்படியே ஒருமாதம் செல்ல.. 

அன்றைய தினம் செமஸ்டர் முடிவுகள் அறிவிக்கப்பட்ட காலை. மூன்றாமாண்டு கிளாஸ்க்குள் நுழைந்தால் அதிர்ச்சி!! அங்கு மாணவியரை தவிர மாணவர்கள் யாரும் இல்லை.விசாரித்ததில் எல்லாரும் செமஸ்டர் முடிவுகள் தெரிந்த களிப்பில் இல்லை சோகத்தில் வரவில்லையாம். எனக்கு மாணவர்கள் இல்லாமல் பாடம் எடுக்க மனமில்லாமற் ஆசிரியர் அறைக்கு சென்று விட்டேன். 

ஆசிரியர்கள் அறையிலோ என் எச் ஓ டி இருக்கும் ஒவ்வொரு ஆசிரியர் முந்தய செமஸ்டர் பாடங்களின் அரியர்களின் காரணங்களையும் கேட்டுக்கொண்டும் கடிந்துகொன்டே பிரின்சிபலை சந்திக்க சென்றார். அவர் கொஞ்சம் தூரம் தான் கடந்திருப்பார், அதற்குள் அனைத்து ஆசிரியர்களும் இந்த பசங்க ஒழுங்கா படிச்சி எழுதாம நம்மள இப்படி திட்டுவாங்க வச்சிடுச்சிங்க என்று புலம்பி கொன்டே அவர் அவர் இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்களின் மொத்த கோவமும் அந்த விளையாட்டு மாணவர்கள் மீது தான். பாதி செமெஸ்டர்களிள் விளையாட்டு போட்டி என்று சென்று பாடங்களை கவனிக்க இல்லை என்று குறைகூறிக்கொண்டிருந்தனர். 

அடுத்த நாள்

அந்த வகுப்பில் விளையாட்டு மாணவர்களை தவிர்த்து அனைவரும் வந்து விட்டனர் விசாரித்ததில் அவர்களை இரண்டு பேர் ஆல் அவுட் வைட் வாஷ் என்றனர். எனக்கோ  என் நண்பர்களை பார்த்தது போல் தான் இருந்தது அவர்களின் வைட் வாஷ் செய்திகள். இதற்காக கல்லூரிக்கு வராமல் எப்படி என்று யோசித்திட்டு இருந்தேன். அவர்கள் அனைவரும் கல்லூரி மைதானத்தில் சாயங்காலம் கால்பந்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்து, நானும் அவர்களோடு கால்பந்து விளையாடி சோர்வாகி போனேன். பிறகு அவர்களை கூட்டிக்கொண்டு கேன்டீனில் ஸ்னாக்ஸ் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தேன். இப்பொழுது உண்மையில என் கல்லூரி நண்பர்களை பார்த்த சந்தோசம் அவர்களின் கேலி பேச்சுகளில்.

கலை சார் எனும் நான் நல்ல சார் என்ற பெயர் அவர்கள் மூலமாக தான் அந்த வகுப்பில் அனைவருக்கும் பரவியது. நான் பாடமெடுக்கும் போது ஒழுக்கத்தை கடைபிடித்தனர். ஒருநாள்  அவர்களாகவே மாறி விளையாடியதில் இருந்து மட்டுமல்ல அவர்களின் பாடத்தை விளையாட்டில் இருந்து ஆரம்பித்தேன். 

முதல் மாதிரி தேர்வு வைத்து ஒவ்வொருத்தரின் படிப்பு திறனை தெரிந்து கொன்டேன் அதிலும் விளையாட்டு மாணவர்களின் கவனத்திறன் அவர்களை இயற்கையாகவே எழுத வைத்தது. நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியாது எனினும் தேர்ச்சி அடைந்து விடுவார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குள் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.