(Reading time: 13 - 26 minutes)

ன்ன சொல்ற சுகா, நான் என்ன அப்படியா நடக்கறேன்..அப்படி நான் என்ன பண்ணிட்டேன்”

“இதோடா..உனக்கே தெரியாதா உன்னைப் பத்தி..காலேஜ் படிக்கும்போது இருந்து நீ இப்படிதான் இருக்க..சரி நான் உன்னைப்பத்தி சொல்றேன்..சரியா தப்பான்னு சொல்லு”

“......”

“என்ன சொல்லவா..வேண்டாமா?

“ப்ச்..சொல்லித்தொலை”

“ம்ம்..முதல்ல நீ உன் புருஷன் உன்னைப் பாத்துக்காத மாதிரி, உனக்குப் பிடிச்ச மாதிரி நடக்கலன்னு சொல்றியே..அதுவே தப்பு..ஏண்டி.உனக்குப் பிடிக்கலன்னு தானே தனிக்குடித்தனம் வந்தாரு..நீ சந்தோஷமா இருக்கணும்னு தானே அவர் வீட்டு ஆட்கள் கிட்ட உன்னை விட்டுக் கொடுக்காம, அவ்வளவு ஏன், எங்க கிட்டவே உன்னை விட்டுக் கொடுக்காம நடந்துக்கிட்டார்”

“ அதெல்லாம் செஞ்சா, நல்லவர்னு ஆச்சா..இன்னிக்கு ஒருநாள் லீவ் போட்டாரா”

“ ஏன் மேகா,நிஜமாவே உனக்குப் புரியலையா..அவர் வேலையில எவ்வளவு டெண்ஷன்னு உனக்குத் தெரியுமே..எல்லாத்தையும் உன்கிட்ட சொல்றாரு தானே ”

“ஆமா..வீட்டுக்கு வந்தா அந்தப் புலம்பலத் தவிர வேறே ஏதும் சொல்றதே இல்ல..இதுல அவர் சொல்றது தான் குறைச்சல்”

“மேகா, நீ இப்படி இருக்கறது தப்பு..ஒவ்வொரு வீட்டுல எதையுமே ஷேர் பண்ணிக்காம ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தா உம்முன்னு டிவி பாக்கறவங்க மத்தில உன் ஆகாஷ் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்றது உனக்கு சலிப்பா இருக்கா”

“,,,,”

“நீ ரெண்டாவது குழந்தை வேணும்னு வேண்டிக்கிட்டப்போ அவரும் எவ்வளவு ஆசையாய் வேண்டிக்கிட்டாருன்னு உனக்குத்தெரியாதா..அதை நீ சுமந்தப்போ, உன்னை தரைல விடாம தாங்கினதெல்லாம் அன்புல சேர்த்தி இல்லையா மேகா..அதுக்கப்புறம் அது இல்லாமப் போனதும், அவர் துக்கத்த அடக்கிக்கிட்டு உன்னை எப்படி தேத்தப் போறேன்னு வருத்தப்பட்டது எனக்குக் கண்ணுக்குள்ளே இருக்கு தெரியுமா?”

“அன்பு இல்லைன்னு நான் சொன்னேனா..அதை விட அவருக்குக் கோபம் தான் ஜாஸ்தியா இருக்கு வெளியில் உள்ள கோபத்தை வீட்டுல கொண்டுவந்து காட்டறார் சுகா..அது மட்டும் இல்லை எனக்கும் அவருக்கும் நிறைய டேஸ்ட் வித்தியாசம் தெரியுமா”

“ம்ஹ்ம்..இப்ப நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லு..அவர் தண்ணி அடிப்பாரா?

“ஏய்..பிச்சுருவேன்..யாரப்பத்தி என்ன கேட்கற?

“சரி..சிகரெட்..

“நோ”

“அப்ப தனியா ஊர் சுத்தறது..பிரெண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணறது..இப்படி”

“நோ வே..எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் கூட தான் போவாங்க”

“சரி..உங்க அம்மா வீட்டு சைட் போகக் கூடாது..அவங்களுக்கு எதுவும் செய்யக் கூடாதுன்னு எதாச்சும் கண்டிஷன்”

“அப்படி எல்லாம் இல்லையே..நாந்தான் கஞ்சத்தனம் பண்ணுவேன்..அவங்க தாராளமா செய்யதான் சொல்லுவாங்க..தெரியுமா”

“சரி..அவர் அப்பா அம்மா அக்காங்க கிட்ட உன்னை விட்டுக் குடுத்திருக்காரா”

“இல்லடி..என்கிட்டே சொல்லுவாங்களே தவிர, அவங்க வீட்டு ஆளுங்க கிட்டயோ, எங்க வீட்டுலயோ என்னைப் பத்தி சொல்ல மாட்டங்க”

“உனக்கு வாங்கிக் கொடுக்கறதுல ஏதாவது குறை வச்சிருக்கிறாரா”

“...”

“ஏனம்மா மேகா..பதில் வரல...நான் சொல்றேன்..எதுவுமே குறை இல்லை தானே..அவர்கிட்ட குறைன்னு சொல் முடியும்னா கோபம் மட்டும் தானே டி...அதை எப்படி கண்ட்ரோல் பண்ணறதுன்னு பாரு..எது அவருக்குப் பிடிக்கலையோ அதை செய்யாத..இதுக்கு முன்னாடி நீயே என்கிட்டே சொல்லிருக்க..கண்ட இடத்துல கண்டதும் கிடந்தா பிடிக்காது.எல்லாம் அது அது அந்தந்த இடத்துல இருக்கணும் னு..அதை நீ பாலோ பண்றியான்னு தெரில..இந்த மாதிரி சின்ன சின்ன அட்ஜெஸ்மென்ட் இருந்தாலே போதுமேடி..வாழ்க்கை நல்லாருக்காதா”

“...”

“இங்க பாரு மேகா, எல்லோருக்குமே கிடைச்ச வாழ்க்கை நினைச்ச மாதிரி இல்லாட்டாலும்,நிம்மதியா இருந்தா அதை அனுபவிக்கப் பழகிப்பாங்க..நீ இல்லாத ஒரு பிரச்னையை எடுத்துக்கிட்டு கவலைப்படற..உன் மேல பாசம் இல்லாமலா கேக் வெட்டி, கிபிட் குடுத்து உன்னை சந்தோசப் படுத்திருப்பார்”

சுகா பேசும்போதே மேகாவின் போன் ஒலிக்க, ஆகாஷ் தான் பேசினான்

“ஆங்..சொல்லுங்க..இல்ல சுகா வந்திருக்கா..ம்ம் ஓகே..அதெல்லாம் ஒண்ணுமில்லை..சரி” என்று போனை வைத்தவளிடம் லேசாகத் தெளிவு.

“என்ன மேடம்,,என்ன சொல்றார் உங்க ஆத்துக்காரர்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.