“அது..ஈவ்னிங் சீக்கிரமா வர ட்ரை பண்ணறேன்..வெளிய போலாம் னாங்க..சாப்பிடச் சொன்னாங்க” தலையைக் குனிந்து கொண்டே சொன்னால் மேகா
“இப்பப் புரியுதா அவரோட அன்பு,,இல்ல இன்னும் எனக்குப் பொருத்தம் இல்லை..என் டேஸ்ட் இல்ல..அப்படி இப்படின்னு தான் சொல்லுவியா”
“...”
“இங்க பாரு மேகா...உனக்கு அட்வைஸ் பிடிக்காதுன்னு இவ்வளவு நாள் நான் சொல்லல..ஆனா இன்னிக்கு என்னோட நிலைமை தெரியுமா உனக்கு..கூடிய சீக்கிரமே டிவோர்ஸ் வாங்கப் போறேன் நான்..இரு இரு நான் சொல்லி முடிச்சிடறேன்..எனக்கும் சுரேஷ் கும் பத்துப் பொருத்தம் பாத்து தான் கல்யாணம் பண்ணாங்க..அவ்ளோ ஏன்..ரெண்டு பேரும் லவ் வேறே பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நீ சொல்ற மாதிரி எங்க ரெண்டு பேரோட ரசனையுமே, சாப்பாட்டுல இருந்து சினிமா வரைக்கும் ஒன்னு தான்..வயசு கூட ஒண்ணு தான்...ஆனா மனசு...” என்ற சுகா கண்கள் லேசா கலங்கிட நிறுத்தினாள்
“சுகா..என்னடி இது..உங்களுக்குள்ள சின்ன பிரச்சினைன்னு தானே நினைச்சேன்..இப்படி சொல்ற..இந்தா தண்ணி குடி”
“சின்னப் பிரச்சினை தான்..ஆனா தீர்க்கவே முடியாது..ஜாலியா சுத்த, கை நிறைய செலவழிக்க மட்டும் தான் நான் வேணும்.. உடல் ரீதியாவோ மன ரீதியாவோ எனக்கு ஒரு பிரச்சனைன்னா அவரோ, அவரைச் சார்ந்தவங்களோ என்னன்னு கூட கேக்காத வாழ்க்கை டி என்னோடது..இப்போ குழந்தை இல்லன்றத காரணம் காட்டி எங்க அப்பாக்கிட்ட நஷ்ட ஈடு கேட்கறார் தெரியுமா?
“என்ன சொல்ற நீ..ஏதோ ட்ரீட்மென்ட் லாம் எடுக்கறதா சொன்னியே..”
“ம்ம் அதெல்லாம் போய்கிட்டு தான் இருக்கு..எனக்காக செலவளிச்ச ஒவ்வொரு காசும் எங்க அப்பவோடது..ஆனா தினமும் என்னைக் குத்திக் காயப் படுத்தி...ச்ச..நரகம் அது”
“என்ன இப்படி சொல்ற...சுரேஷ் உன்னை வார்த்தைக்கு வார்த்த டார்லிங் பேபி அப்படின்னு பேசுவாரே டி இப்ப என்ன ஆச்சு..”
“எல்லாம் வெறும் வேஷம்..வாழவே முடியாதுங்கற நிலைல தான் நான் டிவோர்ஸ் கு சம்மதம் சொல்லிருக்கேன். பாப்போம்.கடவுள் என்ன வச்சிருக்காருன்னு..”
மேகா அதிர்ந்து போய் அமர்ந்திருக்க, சுகா அவள் கைகளைப் பற்றிக்கொண்டு. “ இங்க பாரு ரசனை சரி இல்ல, வயசு ஜாஸ்தி, அன்பு இல்லன்னு பொய்யான உலகத்துல வாழாம, உனக்கு கிடைச்சிருக்கற அருமையான வாழ்க்கையை அழகா வாழ முயற்சி செய்..எப்பவுமே அடுத்தவங்கள ஒப்பிட்டுப் பாக்கக் கூடாது தான்..ஆனா என் வாழ்க்கையை வச்சு சொல்றேன்.. மின்னுற தெல்லாம் பொன்னல்ல ன்னு சொல்ற மாதிரி , நம்ம கற்பனையில் காணுற வாழ்க்கை நிஜத்துல இருக்காது. குறைவில்லாம இருக்கான்னு மட்டும் தான் பார்க்கணும் மேகா..உன் கணவனோட ஒரு பக்கத்த மட்டுமே பாக்கற நீ அவரோட மறுபக்கத்த பாரு..எவ்ளோ அழகா இருக்குன்னு தெரியும்” என்று முடித்தாள்
“ம்ம் சரி சுகா..நீ சொல்லும்போது தான் அவர் என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காருன்னு புரியுது..எவ்ளோ சோர்வா இருந்தாலும் என்னையும் பாப்பாவையும் கிடைக்கற நேரத்தில வெளில கூட்டிப் போறதாகட்டும்..எனக்கு உடம்பு முடியலன்னா பாத்துக்கறதாகட்டும்..இப்படி எத்தனையோ பிளஸ் இருந்தும், முட்டாள்தனமா கவலைப் பட்டுருக்கேன்னு நினைக்கும்போது கொஞ்சம் வெக்கமா இருக்குடி”
“தட்ஸ் குட் மேகா...நான் கூட நல்ல நாள் அதுவுமா என் கதையை உனக்கு உதாரணமா சொல்றேனேன்னு நினைச்சேன். பரவால்ல நீ சரியான பாயின்ட் மட்டும் எடுத்துக்கிட்ட..எனக்கு சந்தோஷம்”
“கவலைப் படாதே டி ...உன்னோட வாழ்க்கையும் நல்ல படியா மாறும்னு நம்புவோம்.”
“ம்ம் நம்புவோம்..எங்க அப்பா அம்மாவும் அப்படிதான் நம்பறாங்க..ஓகே வந்து நேரமாச்சு..கிளம்பறேன்.” என்று கிளம்ப,
“ரொம்ப தாங்க்ஸ் டி..சரியான சமயத்துல வந்து என் கண்ணைத் தொறந்த..தாங்க் யூ வெறி மச் என்று வழியனுப்பியவள், தன் கணவனின் அருமை பெருமையான் மறுபக்கம் பற்றி அறிந்து கொண்ட சந்தோஷத்தோடு அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.