(Reading time: 11 - 21 minutes)

"ந்த exams நல்லா பண்ணனும் டா. நம்ம எதிர்காலமே இதுல தான் இருக்கு. நாம யாரும் பணக்காரங்க வீட்டு பசங்க கிடையாது. Collegeku டொனேஷன் குடுத்து சேர....சோ நம்மால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணி மெரிட் ல வர பாக்கணும் சரியா? " எனகூறிய பிரியாவிடம்

"சரிங்க மேடம்" என்றனர் கோரஸாக.....

" ரியா, எனக்கு ஒரு doubt ? எல்லாரும் வீட்டுக்கு போயிருவிங்க... ஹாஸ்டல்லயும் யாரும் இருக்க மாட்டாங்க தானே...அப்புறம் எக்ஸாம்க்கு எப்படி நாம ஒண்ணா சேர்ந்து படிக்குறது?.." என்றாள்அம்மு

" எக்ஸாம்க்கு முதல் நாள் நாங்க வந்திருவோம் டா. நீ, கவின், கிருஷ் மூணு பேரும் இங்க வந்திருங்க சரியா ? என்ன கிருஷ் ஓகே வா " எனக்கேட்டாள் ரியா

அவன் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்கவும் "ஹே , என்னாச்சு டா உனக்கு " என உலுக்கினான் ரகு.

"ம் ம் ம், ஒன்னுமில்ல டா. சரி தான் ரியா. நாங்க இங்கயே வந்துடுறோம். எல்லாரும் சேர்ந்து படிக்கலாம்" என சமாளித்தான் கிருஷ்.....

எல்லாரும் அவனை ஒருமாதிரி பார்த்திருக்க, அப்பொழுது அங்கு வந்த அவர்களது வகுப்புத்தோழன்

"என்னடா , எல்லாரும் இங்க இருக்கீங்க...அங்க class ல evening functionuku தேவையான மெழுகுவர்த்தி, அப்படியே கொறிக்க ஸ்னாக்ஸ்சும் கொடுக்குறாங்க டா. போய் வாங்கிக்கோங்க " என அறிவுறுத்தி விட்டு சென்றான்...

" டேய், சீக்கிரம் வாங்க டா... அங்க எல்லாம் காலியாக போகுது , அப்புறம் நீங்க தான் எனக்கு சமோசா வாங்கி தரணும்" என அம்மு கத்தினாள்

"லூசு லூசு , காதுக்குள்ள வந்து கத்தாத பக்கி, காது செவிடு ஆயிட போகுது "என்றான் கவின் காதை தேய்த்து விட்டபடி.....

இல்லாட்டி மட்டும் தொரைக்கு நல்லா காது கேட்டுட்டாலும் என முனகி கொண்டே அவனை பார்த்து இளித்து வைத்தாள் அம்மு...

"ரியா, நான் இவங்க எல்லாரையும் கூட்டிட்டு போறேன். நீ கிருஷ் கூட பேசு. எனக்கென்னவோ அவன் நார்மலா இல்லாத மாதிரி தெரியுது.. எதுனாலும் அவன் உங்கிட்ட தான் சொல்லுவான் " என சாந்தி அவளிடம் கிசுகிசுத்து விட்டு மற்ற அனைவரையும் அழைத்து சென்றாள்.....

" ப்போ சொல்லு என்ன பிரச்சனை கிருஷ் ? ஏன் ரெண்டு நாளா நீ ஏதோ மாதிரி இருக்க ? "என்றாள் ரியா. அவன் அமைதியாகவே அமர்ந்திருக்கவும் "என்னனு சொல்லு டா. சொன்னா தான தெரியும் " என அவள் கடிய

"சொன்னா என்னை தப்பா நினைச்சுக்க மாட்டியே" என்றான் தயங்கியபடி...

"நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன், என்னனு சொல்லி தொலை"

" எனக்கென்னமோ நான் உன்னை விரும்புறேன்னு தோணுது "

ரியா சட்டென்று அமைதியாகி விடவும், "என்ன ரியா என்மேல கோவமா,என்ன தப்பா நினைச்சிட்டியா" எனக்கேட்டான் கிருஷ்.....

"என்ன திடீர்னு இப்படி சொல்ற"

"இவ்ளோ நாள் ஒண்ணா இருக்கும் போது ஒண்ணும் தெரியல. ஆனால் எக்ஸாம் முடிஞ்சவுடன் உன்னை பார்க்க முடியாதுனு நினைக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு"

" So, இதுனால என்ன விரும்புறேன்னு முடிவு பண்ணிட்டியா ?"

" நீ என்னை நம்பலையா ரியா? "

"லூசு மாதிரி பேசாத கிருஷ், இதுல நம்புறேன் நம்பல அப்படின்றது வேற... நீயே குழப்பத்துல இருக்கியோனு தோணுது" என்றாள்

"ரியா, உனக்கும் என்ன பிடிக்கும் தான ...அப்புறம் ஏன் இப்படி பேசுற? "

" டேய், உன்ன என்ன பண்றதுனே எனக்கு தெரியல... பிடிக்கும் ன்றது வேற,விரும்புறேன் அப்படின்றது வேற டா " என்றாள்

"எனக்கு புரியல ரியா "

" என்ன கிருஷ் , இப்படி பேசுற ...... எப்பவும் தெளிவா யோசிச்சு பேசுறவன் நீ.... நீயே இப்படி குழம்பி போயிருக்க...."

" கிருஷ், நமக்கு நிறைய பேரை பிடிக்கும். ஆனால் ஒரே ஒருத்தரை மட்டும் தான் மனசார விரும்புவோம். அப்படியே இருந்தாலும் அதுக்கான வயசு இது இல்ல டா.....ஏன் ணா இப்போ இருக்குற நமக்கான விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே ரொம்ப சின்னது....சின்ன சின்ன விஷயங்கள்லயே நாம ரொம்ப சந்தோஷ பட்டுக்குவோம்.......ஆனா இன்னும் நாலு, அஞ்சு வருஷம் போச்சுன்னா நம்மோட விருப்பங்களும், ஆசைகளும், முக்கியத்துவங்களும் கண்டிப்பா மாறும்....அப்போ இதெல்லாம் பெருசா தெரியாது டா.......

இதுவும் உனக்கு புரியலனா நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு. உனக்கே புரியும்....

"நீ எதுனால என்ன விரும்புறேன்னு சொல்ற ?"

" நீ தான் என்மேல எப்பவும் அக்கறை காட்டுவ. என்னால உங்கிட்ட மட்டும் தான் எல்லா விஷயத்தையும் பகிர்ந்துக்க முடியும்...உங்கிட்ட மட்டும் தான் என் இயல்புடன் இருக்கேன்"

" அத நானும் ஒத்துக்குறேன்....ஆனா நாம நண்பர்களா இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும், கடைசி வரைக்கும் உன்மேல இதே அக்கரையோடதான டா இருப்பேன்......."

" அது எனக்கும் தெரியும்.... ஆனா நீ வேற யாரையாவது விரும்புனாலோ, இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாலோ நம்ம friendship தொடர முடியதுல......"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.