(Reading time: 4 - 7 minutes)

சிறுகதை - காதல் கதை தோற்பதில்லை - ஈஸ்வரி

Love

னது தம்பியின் மகனை தோளில் தட்டி தூங்க வைத்து கொண்டிருந்தான் அவன். அவன், அகிலன்! முகத்தில் தீவிரம், கண்களில் காதலுக்காக யாசகம் என ஆளே பாதியாய் இருந்தவனே பார்க்க பார்க்க அவளுக்கு மனம் வலித்தது. ஒரு வருடமா இரு வருடமா? அகிலன் மீது அபிநயாவுக்கு ஒன்பது வருடங்களாக ஒருதலை காதல்!

அவள் தன் பக்கம் வரும்போதெல்லாம் ஓட ஓட விரட்டினான் அகிலன். சூடான வார்த்தைகள், சலிப்பான பாவனைகள் என அவளையும் உதறிடத்தான் அவனுக்கு பல்லாயிர வழிகள். அதனால் அவளுக்கும் எண்ணிலடங்கா வலிகள். மறுத்து போயும் மறக்க முடியாமல் போன நாட்களவை.

இதில் கொடுமை யாதெனில், அகிலனுக்கும் அபிநயாமீது காதல் உள்ளதென்பதை அவள் நன்கறிவாள். எங்கோ தவறு நடந்து விட்டது. காலமும் கடமையும் அவர்களை தள்ளி நிறுத்தியது. இன்று தன் கடமைகளை முடித்து விட்டானாம் அகிலன். தம்பிக்கு பொறுப்பான அண்ணனாக திருமணம் செய்து வைத்து விட்டானாம். சொந்த வீடாம், அடக்கமான காராம். அவன் படிப்புக்காக பெற்றோர் வாங்கிய கடனையும் கட்டி விட்டானாம். இனி அவன் வாழ்க்கை அவன் (ள்) கையிலாம்!

ஏற்கவில்லை அபிநயாவின் மனம். ஏதோ சொல்ல முடியாத ஏக்கம் நிறைந்திருந்தது. ஒரே ஒரு முறையேனும் அவன் காதலை வெளிப்படுத்திவிட்டு தனது கடமைகளை சிறப்பாக ஆற்றிட போயிருக்கலாம் என்பதே அவள் வாதம்.

" என்னை புரிஞ்சிக்க மாட்டியா அபி?

" புரிஞ்சதுனால தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன், அகிலன்!" பற்களை கடித்தபடியே உரைத்தாள் அவள்.

மென்னகை புரிந்தான் அகிலன். அவளின் கோபமும் தான்  எவ்வளவு அழகு ! இன்று மட்டுமல்ல. அவன் அலட்சியமாக நடித்து அதனால் அவள் முகம் சிவக்கும் விதத்தை அவன் ரசிக்காமல் இருந்ததில்லை. அதே சமயம், அவளின் கோபம் அவனுக்கு பயத்தையும் தரும்.

பலநாள் இரவுகளில் உறங்காமல் புலம்பியிருக்கிறான் அகிலன்! " என்ன செய்து கொண்டிருப்பாள் என்னவள் ? ரொம்பவும் கோபமோ? இனி பேச மாட்டாளா? ஒரு மெசெஜ் அனுப்புவிட மாட்டாளா? சின்ன குட் நைட் வாழ்த்து கூட வரவில்லையே! வெறுத்து விட்டாளா ? இனி வரவே மாட்டாளா? என்னை நேசிக்க மாட்டாளா ? கடவுளா கடமைகளை நிறைவேற்ற என் மனதை கல்லாக்கி விட்டாயடா! இதற்கு நீ எனக்கு இதயமே தராமல் இருந்திருக்கலாமே!." . இப்படி எல்லாம் புலம்பியிருக்கிறான்! அவனுக்கு மட்டுமே சுடும் இரவுகள் அவை.

அகிலனின் முகத்தை கூர்ந்து நோக்கினாள் அபிநயா. லேசாய் புன்னகைத்தான். எதையோ யோசிக்கிறான். மனம் வாடுகிறான். "ஏனடா இத்தனை வேதனை படுகிறாய் ? என்னை மணந்து கொள்ளடீ என நீ கட்டளையிட்டால் ஏற்காமலா போய் விடுவேன் ?" . அவள் உள்மனதின் கேள்வி அவளையே ஸ்தம்பிக்க வைக்கிறது.

" அகிலன்... "

"ம்ம்ம்"

"என்னால வலி தாங்க முடியாது.."

"..."

"நீதான் பேசுறன்னு நம்ப முடியல.. இந்த காதல் உன்கிட்ட அப்போ இல்லையே?" தவிப்பாய் அவள் வினவவும் அவன் கண்களில் கோபம்.

"ஐ மீன் அப்போதெல்லாம் நீ வெளிப்படுத்தல.. இப்போ மட்டும்!" என்று அவள் சமாதான புறா பறக்க விட அவன் இறுக்கமான முகபாவத்தை கைவிட்டு சிரித்தான்.

"இது , இந்த நிதானம் தான் என்னை பயமுறுத்தி வைக்கிறது. நிஜமாகவே நீதான் பேசுறியா? இது நீயில்லையோ? நாளைக்கே நீ மனசு மாறி எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம். நான் கல்யாணம் பண்ணிட்டுதான் காதலிப்பேன்னு சொன்னா என்ன பண்ணுவேன்?"

" அதனால் தானே என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுறேன் ? " என்றான் அகிலன்.

"பார்த்தியா பார்த்தியா! இப்போ கூட உனக்கு என்மேல் காதல் இல்லை.."

" உப்ப்... என்ன தான்டீ வேணும் உனக்கு?"

"நீதான்! நீ மட்டும் தான்... ஆனா உன்னை உனக்காக தான் வேணும் எனக்கு.. காலேஜ் முடிஞ்சதுமே வீட்டு சுமையை ஏத்திகிட்டு என்னை விரட்டின அகிலன் கண்ணுலயே நிக்கிறான்..அப்போவே உன்னை பைத்தியம் மாதிரி லவ் பண்ணேன் தெரியுமா?" என்றவளின் கண்களில் கண்ணீர் துளிகள் தெறித்து விழுந்தன.

"எனக்கு நீ எப்பவும் வேணும்..என்ன பெரிய லவ்வு கிவ்வுனு வசனம் பேசுற... நம்ம லவ்வில் நான் தான் சீனியர் தெரிஞ்சுக்கோ...நான்தான் அதிகம் லவ் பண்ணேன்!" என்றாள் கொஞ்சும் குரலில்.

சொல்லவில்லை அவன் தனது ஆழமான காதலை. தோற்று போக ஆசைப்பட்டான். அப்படியாவது அவள் மனம் ஆரட்டுமே!

"சரி உண்மை தான்! நீ தான் ரொம்ப லவ் பண்ணுற! இப்பவாச்சும் வாழ்க்கை தருவியா எனக்கு?"

சிரிப்புடன் அகிலன் கேட்டிட அவன் மார்பில் தஞ்சம் அடைந்து தன் பொய் கோபத்தில் தோற்றாள் அபிநயா. இருவரின் தோல்வியில் காதல் ஜெயித்தது.

வணக்கம் ப்ரண்ட்ஸ்! சும்மா குட்டி காதல் கதை சொல்லனும்னு தோணிச்சு..பிடிச்சதா உங்களுக்கு?

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.