(Reading time: 11 - 21 minutes)

" மா டா... இங்க இன்னும் +2 எக்ஸாமே எழுதலயாம்.....இதுல கல்யாணம், குழந்தை வரைக்கும் போயிருச்சு பக்கி " என முணுமுணுத்து விட்டு ... " இந்த மாதிரிலாம் பேச சொல்லி உனக்கு யார் டா சொல்லி கொடுத்தா " என்று கேட்டாள் சற்று கோபமாகவே......

" என்ன நீ , கோபமா பேசுற "

" அடேய் உன்னால , முடியல டா அழுதுருவேன்( வேற யாரு ? ரியாவோட mind வாய்ஸ் தான்.... இத direct ah சொன்ன பையன் feel பண்ணுவான்)

" சரி, நான் கோவப்படல .....பொறுமையா பேசுறேன்....சரியா ?.......நீ சொல்ற மாதிரியே இருந்தாலும், இரண்டு நாளா நீ சரியாவே இல்லையே டா.. யாருக்கிட்டயும் சரியா பேசவே இல்லையே டா. நீ எப்பவும் ரொம்ப கலகலப்பான ஆள். இப்போ உன்னால எல்லார்க்கூடவும் சரியா பேசக்கூட முடியல. நான் நினைக்குறது சரினா நீ இப்போ படிக்குறத்திலயும் கவனமில்லாம இருக்கியோன்னு தோணுது.......

நீ பண்றது சரியா, தப்பா னு உனக்கே தெரியாதனால தான் எந்த விஷயத்துலயும் கவனமில்லாம இருக்க......

" உண்மைய சொல்லு....இந்த ரெண்டுநாளா எக்ஸாம்க்கு உன்னால படிக்க முடிஞ்சுதா கிருஷ்? "

அவன் அமைதியாய் வேறெங்கோ பார்த்தபடி இருக்கவும்

"உன்னால பதில் சொல்ல முடியலல.... உனக்கு நல்லா தெரியும் நம்ம எதிர்காலமே இந்த எக்ஸாம்ல தான் இருக்குனு......இந்த எக்ஸாம் நல்லா பண்ணா தான் நம்ம லட்சியத்துக்காக முதல் படிய நாம வைக்க முடியும்.....இந்த இடத்துல சரியான முடிவு எடுக்கலனா அப்புறம் நாம தான் கஷ்டப்படுவோம் சரியா....."

வாழ்க்கையை அதோட போக்குலயே வாழ பழகு டா....இப்போ இந்த நிமிஷம் ரசிச்சு, சந்தோசமா வாழலாம்.... நாம எக்ஸாம்ஸ் ஆஹ் நல்லா எழுதி, நம்மோட நட்பையும் மதிச்சு,அம்மா அப்பாவோட கனவுகளையும் பூர்த்தி செஞ்ச அப்புறம் ஒரு புள்ளில தோணும்.....இவனோ இவளோ இல்லாம வாழ்க்கையில ஒண்ணுமே இல்லனு....அவங்களுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அப்போ dicide பண்ணலாம் ....நம்ம வாழ்க்கை யார்கூட னு.....என்னடா புரிஞ்சுதா " என கேட்டாள் ரியா.

நமது கிருஷ் ஆகப்பட்டவன் மெதுவாக எழுந்து அவளை பார்த்து மென்னகையுடன் " நல்லா புரிஞ்சுதுமா...இனிமேலும் நான் ஏதாச்சும் உளருணா..... இதுவரை வேப்பிலையால மட்டும் தான் மந்திரிச்ச....அப்புறம் ஸ்கூல் ல இருக்குற வேப்ப மரத்தையே புடிங்கிட்டு வந்து எனக்கு பேயோட்டுவ " என்றான்.

"அது , அந்த பயம் இருக்கணும் டா " என்றாள் கண்களை பெரிதாக உருட்டியபடி.......

"கிருஷ், பசங்களுக்கு இங்க நடந்தது எதுவும் தெரிய வேண்டாம் சரியா "

அவனும் புரிந்தது என தலையாட்டியபடி , ரொம்ப தேங்க்ஸ் ரியா என்றான்.....

"லூசு நமக்குள்ள என்னடா நன்றி, இதுவே நான் உங்கிட்ட வந்து உன்ன விரும்புறேன்னு சொல்லிருந்தாலும் நீயும் இதையே தான் சொல்லிருப்ப "

" என்ன இருந்தாலும் உங்கிட்ட பேசுன அப்புறம் தான் நான் லேசா உணருறேன்......இல்லாட்டி ரொம்ப குழம்பி போயிருப்பேன்..அதுக்கு தான் இந்த நன்றி"

" போடா, ரொம்ப ஓவரா பொங்காத, உன் பொங்களையெலாம் நம்ம வானரங்க கிட்ட வச்சிக்கோ ..... இப்போ class கு போகலாமா " எனக்கேட்டாள் ரியா....

"ம்ம்ம்ம்,போகலாமே " என தெளிந்த மனதுடன் இருவரும் இணைந்து நடந்தனர் தங்களது விடியலை நோக்கி..........

ஹாய் friends, ரொம்ப நாளுக்கு அப்புறமா சந்திக்கிறோம்.....இது என்னோட மூணாவது கதை.....உங்களுக்கு பிடிக்கும்னு நம்பி தான் எழுதுனேன்.....திடீர்னு எனக்கு ஒரு விபரீத ஆசை வந்துருக்கு.....குட்டி குட்டி கதை எழுதுறோமே ஒரு தொடர்கதை எழுதலாமானு ( உனக்கு ஏன் இந்த கொலைவெறி னு பீல் பண்றிங்களா ? ) அது தான் உங்ககிட்ட கேக்குறேன்.....நீங்க எழுத சொன்னா எழுதுறேன்...... இல்ல இதுவே எங்களால முடியல..... இதுல தொடர்கதை வேறயா னு சொன்னாலும் ஓகே தான்....முடிவு உங்க கையில...... சொல்லிட்டு போங்க ப்ரிண்ட்ஜ்.......மீ waiting..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.