சில சமயங்களில் நாம் செய்யும் சிறு தவறு பல வருடம் கடந்த பிறகும் , நாம் எண்ணி நகைக்கும் அளவிற்கு நம் மனதில் அழியா வடுவாய் பதிந்துவிடும். நாம் இறக்கும் வரை நினைவாய் நிறைந்து இருக்கும் . அவ்வாறு நிறைந்த நினைவுகளில் ஓர் பகுதி.
எப்பொழுதும் போல் முற்பகல் பொழுதில் உறங்கும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன். திட்டப்பணி (project) என்ற பெயரில் கல்லூரிக்கு செல்லாமல் உறங்கி கொண்டிருக்கும் என்னுடன் மற்றும் இருவர்…
ஏதோ ஓசை கேட்க கண் விழிக்க முடியாமல் பிறலும் நான்…. என்னவென்று நான் சிந்தனை செய்து முடிப்பதற்கு முன் மறுமுறை ........“கீஈஈஈ” எனும் ஓசை .. “அட குக்கர் விசில் சத்தம்” என்று புரண்டு படுத்து என் அலைபேசியை தேடினேன்..
“ காலைல எந்திரிச்சு பல்ல துலக்கறமோ இல்லையோ mobile தான் பாக்கறோம், இத முதல்ல விடனும்” என்ற எண்ணத்தோடு நேரத்தை பார்தேன் , நேரம் 11.30 என்றது என் அலைபேசி .
“ மச்சான் 2 ஆ 3 ஆ எத்தனை விசில்ல நிறுத்தனும்” என்ற நண்பணின் கேள்வியில் கவனம் பதியாமல் , Unread messages படிக்கும் ஆர்வத்தில் இருந்த நான் “என்ன மச்சான்” என்று முடிப்பதற்குள் என் விலாவிலே மிதித்தான் என் ஆருயிர் நண்பன்.
அரை தூக்கத்தில் இருந்த நான் ,என் நண்பனின் மிதிக்கு எழுந்து அமர்ந்த என் காலடியில் மற்றுமோர் நண்பன் ஆனந்த சயனத்தில் இருந்தான். என் பார்வை அறையில் சுழன்றது பிரம்மச்சாரிகளின் வாழ்க்கை என இக்காலத்தில் குறிப்பிடப்படும் இலக்கணத்திற்கு இணங்க இருந்தது. பத்து நாட்கள் ஆகியும் துவைக்காமல் சிதறி இருந்த ஆடைகள்.அறைக்குள் இருந்த காலணிகள். துவைக்க படாத கால் உரைகள் (அதாங்க shocks) .
“அதள பாதளத்தில இருக்குனு சொல்ற குகை கூட நம்ம ரும விட சுத்தமா இருக்கும் போல குப்பைக்குள்ள படுத்து இருக்க மாதிரி இருக்கு"
எப்பொழுதும் போல் இன்றும் அந்த எண்ணம் தோன்றாமல் இல்லை, அவ்வாறே சுத்தம் செய்யும் எண்ணமும் இல்லை. என் எண்ணத்தில் உழன்ற எனக்கு நாசியில் உணர்ந்த பருப்பு வாசம் நிம்மதி தந்தது. “இத தான் ரணகளத்தில ஓர் கிளுகிளுப்பு” என்றது என் மனசாட்சி.
பசி வயிற்றைக் கிள்ள என் காலடியில் இருந்த நண்பனை வடிவேல் பாணியில் எட்டி மிதித்தேன்.. அவனை எழுப்பி விட்டு என் காலை கடன்களை.. மதிய கடன்கள் என்று சொல்ல வேண்டுமோ, என் வேலைகளை முடித்து வரும் வேளை , என் நண்பன் குரல் என்றும் இல்லா திருநாளாய் இசையாக என் காதில் ஒலித்தது “சமையல் முடிஞ்சது , சாப்படறது தான் பாக்கி வந்து தொலைங்க டா” என்று அன்பாக அழைத்தான்.
சாம்பார் பல நாட்களில் ரசம் போலவும் , சில நாட்களில் ரசம் சாம்பார் போல இருக்கும் அற்புதங்களும் நிகழும். ஆனால் அனைத்தும் சுட சுட இருக்கும்.
“ பல்லு கூட துலக்காம கொட்டிக்க வந்துட்டான் பக்கி” என்று அப்பொழுது தான் எழுந்த நண்பனை கிண்டல் செய்து கொண்டே உண்டு முடித்தோம்.. அப்பொழுது....கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ரஞ்சித்......
பூவோட சேர்ந்த நார் மணக்கும்,பன்றி குட்டியோட சேர்ந்த கன்றுகுட்டி சேற்றில் புரலும்,
நட்பென்பதும் சில நேரம் பூவாகவும்,சில நேரம் பன்றியாகவும் இருக்கும்....
இதற்கு மேல் இவனுக்கு முன்னுரை தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
பக்கத்து தெரு மற்றொரு சேவல் பண்ணையில் தான் இருக்கிறான்,பாதி நேர பொழுதை இங்கு தான் கழிப்பான்.
ரஞ்சித்:"என்ன மச்சீஸ் project காக YouTube ல வீடியோ எதுனா பார்க்கிறீங்களா ?????"
நாங்களோ அவனைக் கண்டு கொள்ளாமல் படத்தில் மூழ்கி இருக்க...
ரஞ்சித்:"Don't you people have any seriousness about our project, ஒரு sincerity ஒரு seriousness இருக்கா உங்களுக்கு, எப்ப பாரு சாப்பிடறது தூங்குறது படம் பாக்குறது....ச்செய்......என்ன போல dedicated அ இருங்க டா"
என்று கூறிக்கொண்டே கையில் இருந்த இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நீட்டியவாரே .....ஈ............என்று இளித்து கொண்டருந்தான்.
ரஞ்சித்:" Advance for our project"
நாங்கள் மூவரும் தலையை நிமிர்ந்து பார்க்க
நான்: " Project ஓட செலவே அவ்ளோ தாண்டா"
ரஞ்சித்:" ஆமா மச்சான் வீட்டில பொய் சொல்லி வாங்கிட்டேன்,மனசே சரியில்லயில்ல..... ஏதோ ஒரு மாதிரி இருக்கு Beer அடிப்போமா.......
நான்:"டேய் நான் ஊருக்கு போகனும் டா....
ரஞ்சித்: நீ போ....நாங்க அடிக்கிறோம்.....
நான்: "சரி நீங்க இவ்ளோ compel பண்றதால....night ஊருக்கு போறேன்...."
மூவரும் ஒன்றாக சேர்ந்து காரி துப்பிநானுங்க, நானும் துடைத்துக் கொண்டு....
ஏழு கடல், ஏழு மலை தாண்டி யார் கண்ணிலும் படா வண்ணம் Beer வாங்கி கொண்டு வீட்டை அடைந்தோம்....
எல்லாம் முடிந்த பின் ஊருக்கு புறப்பட Bus ன் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து, earphone மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல் கேட்க, “இதற்கு இணை இருக்கா ?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டு ,முகத்தில் வந்து வருடிய தென்றலை ரசித்த வண்ணம் பாடலை ஒலிக்க செய்ய சூழ்நிலைக்கு ஏற்றார் போல் "தென்றல் வந்து என்னை தொடும்" என்ற பாடல் ஒலித்தது…
Thanks a lot madhumathi
Narration pramatham ..
comparison kuda supera irukku ... Keep writing
//இருளும் ஒலியும் மையம் கொண்ட இடத்தில் பேய் இருக்கோ இல்லையோ பயம் குடி கொண்டு கும்மி அடித்து கொண்டே தான் இருக்கும்.//
athenavo nijam than :)