(Reading time: 10 - 20 minutes)

சற்று நேரத்தில் யாரோ காலை பிடித்து இழுப்பதை போல் உணர்வு வர"டேய் விடுடா என்ன "என்று கூறி கொண்டே இருக்கையில்..... அவனது தோள்களை உலுக்குவது தெரிந்து கண் விழிகளை திறக்கையில்.....

"தம்பி குடியாத்தம் வந்துடுச்சி இறங்கு பா"என்று conductor சொன்னதும்.....

பட..பட..வென முழித்து கைகள் Mobileஐ தேடி எடுத்து பார்த்தேன்....முதல் அதிர்ச்சி charge இல்லை switch off.....

நான்:அண்ணா Time என்ன????

நடத்துனர்: 1.15 A.M. சீக்கிரம் இறங்கு பா, time ஆகுது....

"பிரி........ பிரிரிரிரிரி...... போலாம் ரைட்......"

என்ன நடந்தது.... என்ன நடக்கிறது .......என்று யோசிப்பதற்குள்

Bus கடந்து சென்று மறைந்தது......

"என்ன ஆச்சி beer குடிச்சோம்,bus ல ticket வாங்கிட்டு இளையராஜா song கேட்டுடு இருந்தேன்........சின்ன வயசுல நடந்த விஷயம் ஏன் இப்போ கனவுல வந்துச்சி"பல குழப்பங்களுடன் சுற்றி பாரத்த போது இரண்டாம் அதிர்ச்சி... வீட்டை தாண்டி 2KM தள்ளி அடுத்த நிறுத்ததில் இறங்கி உள்ளோம் என்பதை உணர்ந்து தலையில் அடித்து கொண்டு

"ச்செய் இதுக்கு மேல சரக்க தொடவே கூடாது......இன்னைக்கினு பாத்தா ஒருத்தனையும் காணோமே......

"நடராஜா service தானா" என்று கூறியவாரே நடந்து கொண்டு கனவை நினைத்து ...

"நாம அப்போ சின்ன பையன் so பயந்திருப்பேன்,இப்போ அப்படியா

நாம தான் தைரியமான ஆள் ஆச்சே....சூனா...பானா...கெத்த Maintain பண்ணு...போ

..போ...சீக்கிரம்... போ"

நடையில் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது....

இயற்கைக்கு அழகை தந்த இருள்,மனிதனுக்கு சந்தோஷத்தை மட்டும் தராமல் ஏன் தான் பயத்தையும் சேர்த்து தந்ததோ....ஏதோ நான் கொஞ்சம் தைரியசாலி...வாசகர்கள் என்னை போல் இருப்பாங்க என்று சொல்ல முடியுமா......

சருக்....சருக்....என்று தார் சாலையில் உராயும் செருப்பின் சத்தமும்,சற்றே வேகமாக. நடப்பதால் வாங்கும் மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே காதில் ஒலித்து கொண்டிருக்க, கண் எட்டும் வரை மின் விளக்குகளை ஒளிர்ந்து கொண்டிருக்க,EDISONக்கு நன்றி கூறிய வாரே நடக்களானேன்.

மின் விளக்குகளின் எண்ணிக்கை குறைய குறைய இருளோ ஆதிக்கம் செலுத்த ஆயத்தம் ஆனது....

டீரிக்.....டீரிக்.....டீரிக்....பூச்சிகளின் ஒலி

குரக்.....குரக்.....குரக்...தவளையின் குரல்

உ......ஊ......ஊலையிடும் நரி

ஆந்தையின் பிளிர்

அசையும் மரத்தின் இசை

இவை அனைத்தும் இருளின் அழகை மெருகேற்ற,எனக்கோ பயத்தை மெருகேற்றிக் கொண்டிருந்தது இந்த இருள்....

"அடடா.....வெளிச்சம் வேற கம்மி ஆயிடுச்சி,சுடுகாடு வேற cross பண்ணணும், "

மயானத்தில் மயான அமைதி நிலவிய நிலையில்......

ஜல்....ஜல்....என கொலுசின் என்னை நோக்கி வருவது போல் ஓர் உணர்வு வர

"ஒரு வேளை பேய்யா இருக்குமோ suppose இப்ப பேய் முன்னாடி.வந்ததுனா நான் என்ன செய்யுறது"

"சின்ன வயசுல எரியுற பிணம் எந்திரச்சா அப்போ எடுத்தனே ஒரு ஓட்டம் அப்படி பண்ணலாமா,இல்ல பிணம் எந்திரிச்ச அப்போ வெட்டியான் கட்டையால.போட்டு close பண்ணிடானே அதுபோல பேய்ய போட்டரலாமா"

பல சிந்தனைகளுக்கு நடுவில் ஓநாயின் ஊளை சத்தம் கேட்க ஆழ்மனதோ தலை இல்லா உருவத்தை நினைவு படுத்த ,

காக்க...காக்க...கனகவேல்...காக்க

கசடு அற கற்றவை கற்க

"ஐய்ஐய்யோ......பயத்துல இருக்கும் போது தான் திருமுருகனும் திருவள்ளுவனும் ஜோடியா வராங்களே"கூறியவாறே கண்களை மூடிக் கொண்டு நடக்கலானேன்

சற்று தொலைவில் வீடுகளும் மின் விளக்குகளும் கண்ணில் பட

நூறு புலிகளை வேட்டை ஆடியது போல் ஓர் பெருமை.

தெருவிற்குள் நுழைந்த போது....லொல்....லொல் ..என குரைத்து கொண்டே இரண்டு நாய்கள் என்னை நோக்கி வர.....

"ரஞ்சித் நாயே ,என் நிலைமையை பாருடா"

ஓடி வந்த நாய்களிடம்" கண்ணா எனக்கு பேய் நா தான் பயம்....ஜூ....ஜூ....ஜூ ...வரட்டா"

என்று கூறிக் கொண்டே வீட்டிற்குள் சென்றேன்.

வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் அப்பொழுது சிறிய பயம் கலந்த வருத்தத்தை தந்தாலும்,பின் நினைவாய் பதிந்து விடும்....

மனிதன் நடிக்கும் வாழ்க்கை நாடகத்தில்,பல வேடம் அணிகிறான் , எந்த வேடம் அணிந்தாலும் தனிமையில் தன் உண்மை வீரம் தெரியப் படுத்தும் சில திகில் தருணங்களும் சேர்ந்தே தானே வாழ்க்கை செல்கிறது.

இருளும் ஒலியும் மையம் கொண்ட இடத்தில் பேய் இருக்கோ இல்லையோ பயம் குடி கொண்டு கும்மி அடித்து கொண்டே தான் இருக்கும்.

"பில்டிங் ஸ்டராங்கு பேஸ்மண்ட்டு வீக்கு"

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.