(Reading time: 10 - 20 minutes)

ஜன்னலின் வழி விழி அகற்றாமல், என்னை கடந்து செல்லும் மிண் கம்பகளை பார்த்து கொண்டிருந்தேன். மின் கம்பங்கள் எவ்வாறு நம்மை கடந்து செல்லும், நாம் தானே அவற்றை கடந்து செல்கிறோம். மனிதனின் சிந்தனை அவ்வாறே சூழலும்..

வெளியே இருண்ட இரவின் அழகைப் பார்த்தேன். . இருள்—ஒளிக்கு உயிர் கொடுத்தவன், தீபத்தின் அழகை காண்பித்தவன், நிலவின் அழகை ரசிக்க செய்தவன், எண்ணில்லா நட்சத்திரங்களை கொண்ட வானின் மீது பொறாமை கொள்ள செய்தவன்..

இவ்வளவு அழகிய தருணங்களை தந்த இறைவன் , பயத்தையும் சேர்த்தல்லவா தந்துள்ளான். அழகு என்றாலே ஆபத்து தான் போலும், என்று எண்ணி கொண்டே, பாடலில் லயித்து கண் அயர்ந்தேன்….

டக்...டக்...டக்...டக் என்று குதிரை ஓடும் சத்தம் கேட்க.... சில நொடிகளில் சத்தம் அதிகம் ஆகி ஆகி நிசதப்தம் நிலவி கொள்ள பயத்தின் வேகமோ அதிகமாகியது,வழிந்து கிழே விழும் வியர்வையின் ஒலி கேட்கும் அளவிற்கு ஓர் மயான அமைதி....

திடிரென குதிரை கனைக்கின்ற சத்தம் கேட்டதும் நெஞ்சு படபடக்க , குதிரை இருக்கும் திசையை உற்று பார்த்த போது பயத்தின் உச்சத்திற்கே செல்லும் அளவிற்கு செய்தது அந்த குதிரை மேல் அமர்ந்து இருக்கும் தலை இல்லா உருவம்.

தலையில்லா உருவம் குதிரையில் டக் டக் என்ற சத்தமுடன் நோக்கி வர ....

"ஐயோ என்னை விட்டு விடு " என்று அலறிக்கொண்டு கனவிலிருந்து விழித்தான் அந்த சிறுவன்......

என்னவென்று யோசிப்பதற்குள்.....டங்.....டங்.....டங் 12 மணியை தொட்ட கடிகாரத்தின் ஒலி..... இதயத்தின் பட படப்பு சற்றும் குறையவில்லை ...

"ச்செய் என்ன கனவு இது,heart beat அடங்கவே மாட்டுது போய் தண்ணியாச்சி குடிப்போம் "என்று கதவை நோக்கி சென்றான் அந்த சிறுவன்......

மிகுந்த குழப்பத்துடன் கதவை திறக்கிறான் திறக்கவில்லை,கண்ட கனவு உண்மை தானோ என்றென்னுகிற அளவிற்கு மீண்டும் பயம்......டொக்.....டொக்....டொக் என்று. தட்டுகிறான்,கதவை இழுக்கிறான்,தள்ளுகிறான் எந்த பலனும் இல்லை .....

செய்வதறியாமல் விழித்து நிற்க......கதவின் மீது ஒர் நிழல் பட.........நிழலோ இவனை நோக்கி வர.....கால்கள் நடனமாட தொடங்கியது.....

தைரியத்தை வர வைத்து கொண்டு ,யார் அந்த நிழல் என்று திரும்பி பார்ப்பதற்குள் ,தோள் மீது கை பட"அம்மா.........." என்று அலறினான்.....

"அடேய் எரும நான் தான் டா ,கதவு மேல் தாழ்பாளைத் தொற டா " என்று திட்டிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் தூங்க சென்றாள் அக்கா.....

நிம்மதி பெரு மூச்சுடன் கதவை திறந்த போது

"ஒரு வேலை அந்த குதிரை காரன் இங்க தான் இருக்கானோ " என்கிற குழப்பத்துடன் தலையை மட்டும் நீட்டி சுற்றி முற்றி பார்க்கிறான்..

"அப்பாடா... யாரும் இல்ல .....இருந்த மட்டும் பயந்துடுவேனா என்ன" என்று உலறிக்கொண்டே நடந்தான்....நான்காவது அடியில் "டமால்" என்று கதவை மூடும் சத்தம்......

இவனோ திரு திரு என விழித்து கொண்டு நின்றான்

"அக்கா அப்போவே தூங்க போயிட்டா , நான் நாலடி தள்ளி நிக்கிறேன்...அப்போ கதவு எப்புடி மூடியது"....

"வீட்டில தான் இருக்கோமா இல்ல பேய் பங்களாவுல இருக்கோம ஒரே பீதி யால இருக்கு

முதல்ல தண்ணிய குடிச்சிட்டு படுத்திடனும்

உங்கள காலைல பாத்துகிறேன்"

ஏதேதோ உலறிக்கொண்டே kitchen உள் நுழைந்தான்.

நடந்தவாரே பின்புறம் சட்டென்று திரும்பி "அப்பாடா யாரும் follow பன்னல"என்று நினைத்து கொண்டே kitchen light on பண்ணாண்.இருண்டு இருந்த அறையில் ஒளி வந்ததும் THOMAS ALWA EDISON ஐ விட எண்ணில் அடங்கா சந்தோசம்...

குடத்தில் இருக்கும் தண்ணீரை கவளையில் அல்லி பருகும் பொழுது..குடக்..குடக்..எனும் தொண்டை குழியின் சத்தமே அறையில் நிரம்பி இருந்தது...

அரை கவளம் அருந்தி இருக்கும் வேளையில் இன்னொரு ஆட்கொள்ள தண்ணீரை வேகமாய் பருகினான்.தூரத்தில் நாய் நரிகள் உ.......ஊ...............என ஊலை இட்டும்

குரைத்துக் கொண்டும் இருந்தன.

நாய் நரிகள் பேய் பிசாசுகளை பார்க்கும் போது உ........ஊ...... என்று ஊலை இடும் என பாட்டி சொன்ன பேய் கதை நினைவில் வர......

"ஐயோ கண்டிப்பா குதிரை காரன் தான் வரான்.....நாம செத்தோம்....." என்று அலறிக்கொண்டு அறையை நோக்கி ஓடினான்.........

அறை உள்ளே சென்று உச்சந்தலை முதல் பாதம் வரை.போர்வையால் போர்த்திக் கொண்டு, கண்களை மூடி கொண்டு "அடேய் குதிரைக்காரா இப்போ வாடா பாக்கலாம்"என்று மனதில் நினைத்து கொண்டு தூங்கினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.