(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - மோகன ராகம் - பூவேந்தன்

Mohana Ragam

ம்மா நீ +2ல எவ்வளவு மார்க்குமா ?” டிவி பார்த்துக்கொண்டிருந்த மகள் கேட்டதும், 

திடுக்கிட்டு திரும்பினாள் வேணி.

“இப்போ அதெல்லாம் நோக்கு எதுக்குடி செல்லம்?”

“சும்மாதான் , சொல்லேன்”

“1189”

ஹைய்யோ, அப்போ உன்ன விட நான் அதிகமார்க் எடுக்கணுமோ.. என்றவளிடம் 

"நீ இப்பத்தான் 6வது படிக்கிற அதெல்லாம் எதுக்குடி கேட்டுண்டு, பேசாம டிவி பாரு” என்றேன்..

அய்யோ பாட்டி வரா, என்று சட்டென ரிமோட்டை வைத்துவிட்டு அமைதியானாள். 

என் மாமியாரின் வருகை என்று நானும் அமைதியாய்...

“அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அப்படி என்ன தான் வாயோ..? ஓயாம பேசிண்டு”, 

அத்தைக்கு காது கொஞ்சம் மந்தம். ஆனாலும் அதிகாரம் தூள் பறக்கும்.

ஏண்டி மாடில போட்ட துணிய எடுத்தியா?

“இதோ எடுத்துடறேன் அத்தை” (காயப்போட்டவ நான் எனக்கு தெரியாதா?)

அவன் ஆபீஸ்ல இருந்து வருவானே எதாச்சும் பலகாரம் பண்ணேன். !

சரி அத்தை ! ( உனக்கு பசிக்கறதுன்னு சொல்லு)

எல்லாத்தையும் சொல்லித்தான் செய்வா..? டிவி ரிமோட் எங்க? புது சீரியல் பாக்கணும்.

நான் ” அது இன்னைக்கு இல்ல. அடுத்த வாரம்”

சரி நீ போய் வேலைய பாரு. 11 வருஷம் ஆச்சு ஒரே பொண்ண பெத்துட்டு.. இன்னொரு ஆம்பள புள்ளைய பெத்துக்க வக்கில்லை.. உன்ன சொல்லி குத்தமில்லை கல்யாணம் பண்ணிண்டு வந்த எங்கள சொல்லணும்...

தினம் கேட்கும் வார்த்தைகள்.

என் மகள் என்னைப் பார்த்துக்கொண்டே எழுந்து போனாள்.

ன்று இரவு:

கணவருக்கு சாதம் வைத்துக் கொண்டே,

என்னங்க..

என்னடி..

நம்ம பொண்ணு 6வது படிக்குறா.

அதான் தெரியுமே, அதுக்கு என்ன இப்போ ?..

அவ வயசுக்கு வர காலமாச்சு, இன்னும் சொந்தாமா இந்த ஆத்துல ஒரு முடிவு எடுக்க முடியல என்னால.

இப்போ என்னடி ஆச்சு?

ம்... பேரன் வேணுமாம் உங்கம்மாக்கு.

ஹே... இதெல்லாம் புதுசா? இன்னொரு முறை பேசிக்கலாம். சாப்ட விடுடி. இப்போ.

நம்ம பொண்ணு முன்னாடி வெச்சு பேசிட்டாங்க. எனக்கு அவமானமா இருக்கு. இவ்வளோ பேசறாங்களே உங்கம்மா ஏன் உங்கப்பா கூட மாடில இருக்காம நம்ம ரூம்ல படுக்குறா?

ஏன்டி அவர் தான் இந்த வீடு வாங்க கடைசி நேரத்துல உதவினார். 

அப்போவே தனி ரூம் வேணும்னார். சரின்னு  அம்மாவை நம்ம ரூம்ல இருக்க சொன்னேன்.

தெரிஞ்சும் உங்கம்மா ஏன் இப்படி பேசுறா?

என்னை என்னடி பண்ண சொல்ற.. கத்தினார்..

சரி விடுங்கோ, நான்தானே கஷ்டபடுறேன். இன்னொன்னு தெரியுமா? இன்னும் நம்ம கல்யாணத்த பத்தியே பேசுறாங்க.. நான் +2 முடிச்ச நேரம். எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டு வந்தது யாரு ? உங்கப்பா அம்மா தானே.. அவர் வயலின் வாசிக்கிறவர் தான். அத சொல்லிக் கொடுத்து தான் என்னை படிக்க வச்சார்.  கஷ்டம் ஜீவனம்தான். 

அதையே சாக்கா வெச்சு எங்கப்பாவ எப்படியோ சம்மதிக்க வெச்சு என்னை கொத்திண்டு வந்துட்டேள் சென்னைக்கு,படிக்க வெக்கிறேன்னு சொல்லி சொல்லி இப்போ உங்களுக்கு சமைக்கவும் துணி துவைக்கவும் வேலைக்காரியா வெச்சுட்டேள்.

இந்தாத்துல நோக்கு என்னடி குறை ? இப்போ நன்னா தானே இருக்க?

ம்.. இருக்கேன். இந்த சென்னைல மடிசார் கட்டிண்டு, நாலு இடம் போக முடியாம சீரியலே கதின்னு இருக்கற உங்க அம்மா பேச்ச சகிச்சுண்டு விடுங்கோ என் கஷ்டம் என்னோட போகட்டும்.

வர .. வர... ரொம்ப பேசுறடி நீ...

நான் தானே ? ஆமாம். இந்த வீடுவாங்கி எத்தன வருஷம் ஆறது. எங்கப்பா வரலை இன்னும். என்னையும் அவரைப் போய் பார்க்க விடலை, போனா இங்க யார் வேலை செய்வான்னு தானே, என்னை பேச வெக்காதீங்கோ. சாப்டேளோன்னோ.. போய் தூங்குங்கோ.

ப்படியே ஒரு வாரம் போனது..

அன்று போஸ்ட் ஆபீஸ் சென்று திரும்பி வரும்போது,

“வேணி ! வேணி !” யாரோ அழைத்தார்கள். திரும்பினால் எங்கோ பார்த்த முகம்.

வேணி.. நான் தான் ‘சுந்தர்’. கும்பகோணத்துல ஒன்னா படிச்சோமே?

ஆ.. ஆமா.. சுந்தர் எப்படி இருக்க..?

நான் நல்லா இருக்கேன் வேணி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.