(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - பிரிவோம் சந்திப்போம் - க்றிஸ்ட்டி

Heart

லுவலகத்தில் அவள் கேபினில் உட்கார்ந்து இருந்த படியே கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் ஐரீன். பணி மாற்றம் காரணமாக புனேக்கு வந்து இருந்தாள்; சேர்ந்து சில நாட்கள் மட்டுமே ஆனதால் அவளுக்கு இன்னும் கணினி கொடுக்கப்படவில்லை வேலையும் பெரிதாக இல்லை. கடிகாரத்தை பார்த்து கொண்டு இருந்தவள் புறப்பட இன்னும் வெகு நேரம் இருப்பதை உணர்ந்தாள்; மெல்ல பழைய நினைவுகள் வந்து அலை மோதியது…

இன்றோடு அவள் புனே வந்து சரியாக 3 மாதங்கள் முடிந்து விட்டன. இன்னேரம் பெங்களூரில் இருந்து இருந்தால், எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் என பெருமூச்சு விட்டவளை, ஏங்க வைத்தது ஆதித்தியாவின் நியாபகம். அவள் பெங்களூரை விட்டு வர காரணமாக இருந்தவன் அவன் தான்.

ஆதித்தியா நல்ல மிடுக்கான தோற்றமும் கவர்ந்து இழுக்கும் கண்களும் உடையவன். அவன் சிரிப்பும் கன்னத்தில் விழும் குழியும் எந்த பெண்னையும் ஒரு நொடி கிறங்கடித்து விடும். பல பெண்களுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. ஐரீனுக்கும் உண்டு; ஆனால் அவள் பெரிதாக காட்டி கொள்வது இல்லை.

ஐரீனும் அழகில் குறைந்தவள் இல்லை, கலையான முகம் கலகல பான சிரிப்பு யாரையும் சொக்க வைக்கும் கண்கள். நேசிப்பார்வைகளிடம் குழந்தை போலும் மற்றவர்களிடம் கண்டிப்பாகவும் இருக்க கூடியவள். கல்லூரி பருவத்திலேயே ஒருவரை ஒருவருக்கு தெரியும் ஆனால் பேசியது இல்லை. இருவரும் சந்தித்தது பெங்களூரில் தான்.

பெங்களூரில் இருவருக்கும் வேலை கிடைத்து இருந்தது; நல்ல நண்பர்களாக பழக ஆரமித்தனர்; அதிக நேரம் ஒன்றாக செலவு செய்தனர். வெளியே நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருந்தது, பேசி…பேசி… தீராத உரையாடல்கள் அவர்களின் மனதை எதோ செய்தது. ஆதித்தியாவின் மேல் பல பெண்களுக்கு ஈர்ப்பு இருந்தாலும் அவன் மனம் எப்போதும் ஐரீனை தேடும்; அவளுடன் செலவிடும் நேரங்கள் அவனுக்கு கிடைக்ககூடாத வரம் போல் இருந்தது. கல்லூரிக்கு பிறகு தனது நெருங்கிய நண்பர்களை விட்டு வந்தவனுக்கு அவள் பேச்சு புத்துயிர் கொடுத்தது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை உணர அரமித்தான்.

ஐரீனுக்கும் அவன் தன்னை சுற்றி வருவது பிடித்து இருந்தது, பல நேரம் மனதுக்குள் சிரித்து கொல்வாள், மற்ற பெண்களை விட நான் அதிர்ஷ்டசாலி என்று. கொஞ்சம் கர்வமும்தான். என்ன தான் அவள் வாய் திறவாமல் இருந்தாலும் அவள் கண்கள் ஆதித்தியாவின் மேல் உள்ள காதலை கொட்டித்தீத்துவிடும். காதலை யார் சொல்வது முதலில், என ஒரு போட்டி இருந்தாலும், இருவரும் தங்கள் கலாச்சாரம் குடும்பம் என நினைத்து தயக்கம் காட்டினர். ஐரீன் ஒரு தாழ்ந்த ஜாதி கிறிஸ்துவ பெண்; ஆதித்தியாவோ உயர்ந்த ஜாதி ஹிந்து மதத்தை சேர்ந்தவன். இருந்தும் ஒரு வழியாக ஓராண்டு கழித்து தங்கள் காதலை பரிமாறி கொண்டார்கள்.

“காதலை யார் முதலில் சொன்னது? யார் சொன்னால் என்ன..!!” என்று நினைத்து சிறிதாக புன்னைகைத்துக் கொண்டாள்.  “நேரம் ஆச்சே இன்னும் கிளம்பலை??” என நண்பன் ஒருவனின் குரல் கேட்க,  தான் அலுவலகத்தில் இருப்பதய் சுதாரித்துக் கொண்டு, “ஹ்ம்ம் கிளம்பிட்டேன்... I will miss you and all... Bye...” என்று சொல்லி முடிக்குமுன்; அவள் mobile ஒலித்தது; அழைத்தது ஆதித்தியா  தான்

“ஆஹ் சொல்லு... ஆமா கிளம்பிட்டேன்… இல்ல நான் ரூம் போயிட்டு கால் பண்றேன்… நான் எல்லாம் already பேக் பண்ணிட்டேன், so u don’t worry I will be on time.”

என பேசி முடித்துவிட்டு; office இல் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு வேகமாக கிளம்பினாள். அவள் மீண்டும் பெங்களூருக்கு பணி மற்றம் வாங்கி கொண்டு செல்கிறாள். 

ஆதித்தியாவோ பெங்களூரில் அவன் அலுவலகத்தில் உட்கார்ந்தபடி நேரத்தை தள்ளி கொண்டு இருந்தான். தான் செய்திருந்த ஏற்ப்பாடு எல்லாம் சரியாக இருக்குமா என ஒரு சிறு பதட்டத்துடன் இருந்தான். மாலை மணி 5 ஆனதும் முன்னமே யோசித்த படி கார் வாடகைக்கு எடுக்க விரைந்தான்; அப்போது தான் நள்ளிரவு ஒரு மணிக்கு Airport வரும் ஐரீனை சரியாக காரில் pick up பண்ண முடியும்.

ஆம் அவள் புனே போய் 3 மாதம் இருக்கும், இருவரும் அவ்வளவு நாள் பார்க்காமல் இருந்தது இல்லை; என்னதான் Call, Video Call, Chatting என்றாலும் நேரில் கண்களைப் பார்த்து பேசுவது போல் வருமா! அவள் கண்களில் தொலைந்த நாட்கள் அத்தனையுமே ஆதித்தியாவுக்கு மறக்க முடியாத நாட்கள்.

புனேவில் ஐரீனுக்கு இரவு 10.15 க்கு flight தன் ரூமில் இருந்து 7 மணிக்கு கிளமபினால் தான் சரியாக இருக்கும் எனவே வேகமாக அலுவலகத்தில் இருந்து விரைந்தாள். முன்கூட்டியே  கிளம்ப அனைத்தையும் எடுத்து வைத்து விட்டதால்; அவள் கிளம்புவதற்கு போதுமான நேரம் இருந்தது. Airport செல்ல taxi புக் செய்து இருந்தாள். கொஞ்ச நேரத்தில் மீண்டும் mobile ஒலித்தது; ஆதித்தியா  தான்!

“ஆஹ் நான் கிளம்பிட்டேன்… Ticket எடுத்துட்டேன்… Id Proof எடுத்துட்டேன்… luggage சரியா பேக் பண்ணிட்டேன்… இப்போதான் Taxi புக் பண்ணுனேன்… ஒரு 5 நிமிஷத்துல வந்துடும்… பத்திரமா வரேன்… ஐயோ Don’t worry darling I will be on time to Airport!! Bye…” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.