(Reading time: 13 - 26 minutes)

அப்பா எவ்ளோ கேள்வி!!  அனாலும் என் மேல் அவனுக்கு எப்போதுமே அக்கறை அதிகம்தான். என சிரித்துக்கொண்டு luggage அனைத்தையும் எடுத்துக்கொண்டு தன் apartment வாசலில் வந்து நின்றாள். அவள் வந்து நிற்பதற்கும் taxi வருவதற்கும் சரியாக இருந்தது.

Taxi driver அவள் luggage’ஐ  எடுத்து வைக்க உதவி செய்தான் இவள் பதிலுக்கு Thank you என்றல் மென்மையாக. Driver இடம் “Pune Airport பையா…” என தான் போகவேண்டிய இடத்தை உறுதி செய்து விட்டு அமர்ந்தாள். ஆதிக்கு call செய்து தான் ஏறிவிட்டதாகவும்; இன்னும் 1 மணி நேரத்தில் Airport போய்விட்டு  திரும்ப call செய்வதாகவும் கூறினாள். வெள்ளி கிழமை மாலை என்பதால் டிராபிக் அதிகம் இருந்தது சாலையில் அனைவரும் வேகமாக சென்று கொண்டு இருந்தனர். Taxi இல் அமர்ந்தவாறு இதை பார்த்த ஐரீன், தன் மனதில் பெங்களூரும் ட்ராபிக்கில் சலித்து இல்லை. ஆதி எங்கு செல்வது என்றாலும் எப்பவும்  தன்னை சீக்ரம் புறப்பட சொல்லி விரட்டி கொன்டே இருப்பான். ஆனால் இன்றோடு 3 மாதம் ஆகிவிட்டது அவனோடு வெளியில் சென்று..! என்று தன்னை நொந்து கொண்டாள். தான் மற்றும் அன்று மனக்குழப்பத்தில் அவசரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்து இங்கு வராமல் இருந்து இருந்தால்…என்று பெருமூச்சு விட்டாள்!!

மெல்ல பழைய ஞாபகங்கள் எட்டிப்பார்த்தன. வெவேறு கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டு இருந்தாலும் யார் எங்கு விட்டு கொடுக்க வேண்டும் என சரியாக பேசி முடிவு எடுத்து; தங்கள் திருமண முடிவை வீட்டில் பேசினார். ஆதித்தியாவின் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள், ஒரே மகன் என்பதால் அவன் ஆசைக்கு மறு பேச்சு இல்லை என வாழ்ந்துவருபவர்கள். ஆனால் ஐரீன் வீட்டில் அப்பா பேச்சிற்கு மாற்று பேச்சே இல்லை; எல்லாம் எப்போதும் அவர் விருப்பப்படி தான்.

இவர்களின் விருப்பத்தை அறிந்தவுடன், ஐரீன்  வீட்டில் எதிர் பார்த்த பதிலே, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வார்த்தைகள் புறப்பட்டன, பதில் பேச முடியாமல் உடைந்து போனாள். ஆதித்தியாவின் வீட்டிலோ முதலில் சரி என்று சொன்னாலும் அவள் கீழ் ஜாதி பெண் என தெரிந்ததும் சொற்கள் வெடித்து சிதற ஆரமித்தன. இருவீட்டிலும் போர் சங்கு முழங்க உற்றார் உறவினர் என படை திரண்டது. வார்த்தை மழையில் போர்களமாய் மாறினது இவர்கள் வாழ்க்கை. ஐரீன் ஆதித்தியா இருவரும் செய்வது அறியாது நின்றனர். ஒருபக்கம் பெற்றவர்கள் மறுபக்கம் காதல் - விட்டு கொடுக்க முடியாமல் போராடினர்.

பிரச்சனை பெரிதாக இருவீட்டாரும் நேரில் ஒருவரை ஒருவர் குறை சொல்லி சண்டை இட ஆரமித்தனர். இவர்கள் திருமணம் ஜாதி கலவரத்தை உண்டாக்கும் எனவும் பெற்றவர்கள் உயிர் விட நேரிடும் எனவும் இருவீட்டாரும் மிரட்டினார். மிகவும் மெல்லிய மனது உடையவள்; எனவே நடப்பது அனைத்தையும் பார்த்து மிகவும் பயந்து போனாள். தன்னால் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கொஞ்சகாலம் ஆதியை விட்டு செல்ல யோசித்தாள். ஒருவேளை காலம் ஒரு முடிவு சொல்லலாம் என்று நினைத்தாள்.

ஆதித்தியாவிற்கு இது சமாளிக்க கூடிய பிரச்சனைதான் என்று தோன்றினாலும் அப்போது ஐரீன்க்கு நம்பிக்கை கொடுக்க முடியவில்லை அவனாள். அவளின் பல கேள்விகளுக்கு அவனிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது. ஒரு நீண்ட அமைதிக்குப்பின் சரி நீ போ என்று ஒற்றை வரியில் கூறினான். ஒரு நொடி அவள் ஆதியை குழப்பத்தோடு பார்த்தால் அவள்.

“என்ன பாக்குற உன் கேள்விக்கு எல்லாம் இப்போ என்கிட்ட பதில் இல்லை ஆனால் பதிலுடன் ஒரு நாள் உன்னை பாக்க வருவேன் அப்போ நீ என்ன நம்பு!!” என்றான் சற்று கோவமாக. அந்த கோபத்தில் இருந்த அன்பும் உரிமையும் ஐரீன்க்கு நன்றாக புரிந்தது. மௌனமாக சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு சென்றாள். அப்போது எடுத்த அவசர முடிவு தான் இந்த புனேவிற்கு வர காரணம்.

ஆனால் வந்த பிறகு தான் புரிந்தது கோழை போல் ஓடி வந்துவிட்டோமே என்று!. அவனை பறக்காமல் இருக்க முடியவில்லை என்பது ஒருபுறம் என்றால் அவனை மட்டும் தனியாக இருவீட்டாரிடமும் போராட வைத்துவிட்டோமே என்ற கவலை ஒருபக்கம்.

தன் அம்மா எபபோதும் சொல்வது போல் திருமணம் என்பது மகிழ்ச்சி துக்கம் இரண்டையும் ஒன்றாக பங்கிட்டு கொள்வதுதானே!. அப்படி என்றல் நான் ஆதிக்கு உறுதுணையாக அவன் உடன் இருக்கவேண்டும்; அது தான் சரி;  என்று தெளிவாக யோசித்து; மீண்டும் பெங்களூர் செல்ல முடிவுஎடுத்து, இப்பொது கிளம்பிவிட்டாள்.

தன் முடிவை நினைத்து சின்ன பெருமையுடன் சிரித்துக்கொள்ள, “Madam Airport…” என சத்தம் கேட்டது. “ஆஹ் பையா…” என சுதாரித்துகொண்டு வெளியே பார்த்தாள். “ஓ! வந்துவிட்டோமோ? ச்ச!! இந்த பழைய கதையை யோசிச்சாலே சுத்தி நடக்கறது ஒன்னும் தெரியறது இல்ல” என்று தன்னை சலித்துக்கொண்டு; பணத்தை கொடுத்து விட்டு Airport இல் Checkin செய்ய உள்ளே சென்றாள். Mobile மீண்டும் ஒலித்தது

“Hello sorry…sorry… நான் நிஜமா mobile’அ பாக்கல… I am really sorry… See I am already  in airport…” இரு நான் check-in பண்ணிட்டு கூப்பிடறேன் என சொல்லி விட்டு mobile இல் பார்த்தால் 10 missed call 15 msg இருந்தது, அப்போது தான் புரிந்தது அவன் கோபத்திற்கு காரணம். ச்சே!! எதோ யோசனைல போன் எடுக்கலையே, பாவம் ரொம்ப பதறி போய் இருப்பான், என தன்னை திட்டிக்கொண்டாள். Check-in முடிந்ததும் Airport lobby இல் உட்கார்ந்து ஆதிக்கு போன் செய்தாள்.

“சொல்லு என்று அறைந்தார் போல் பேசினான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.