(Reading time: 13 - 26 minutes)

ஐரீன் : அப்ப என்ன கோவம்… நான் தான் sorry கேக்கிறேன்ல?

ஆதி : நீ கேட்ட நான் ஒத்துக்கணுமா!!!

ஐரீன்: ப்ளீஸ் டா சண்டை போடாத.. நான் எதோ யோசனைல mobile ஆ கவனிக்கல…

ஆதி : எத்தனை தடவை டி சொல்றது Don’t think past! Past is Past!! ஆனா  நீ அதையே யோசிச்சுட்டு present ல வாழறது இல்லை…

ஐரீன்:  Sorry…

ஆதி : It’s ok… Come safe…

ஐரீன்:  நீ எங்க இருக்க? கார்லயா வர?

ஆதி : ஆஹ் கார்… என் மாமனார் வாங்கி கொடுத்தார் பாரு.. பைக் ல தான் வரேன்…

ஐரீன்:  ஹம்ம்கூம்… Going to Board.. Bye..

ஆதி : ஹ்ம்ம் இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கா!! Come Soon di, missing you every second!!

ஐரீன்:  அப்பாடா இப்படி எல்லாம் பேச தெரியுமா உனக்கு… இப்படி பேசுவனு தெரிஞ்சு இருந்தா நான் அமெரிக்காவே போவேன்..

ஆதி : ஆஹ் போவ.. போவ..!

ஐரீன்:  சரி flight call பண்றாங்க நான் போகணும்.. and mobile flight mode’ ல இருக்கும் ok!!

ஆதி : ok ma.. நீ எனக்கு land ஆனதும் call பண்ணு!!

ஐரீன்:  Ok!! நீ correct time க்கு வா! எப்பவும் போல என்ன வெய்ட் பண்ணா வைக்காத!!

ஆதி : இல்லமா… இல்லமா… நான் வந்துடுவேன்

ஐரீன்:  ok bye…

ஆதி : Bye…

பேசி முடித்து, காரை park செய்து விட்டு; மெல்ல சிரித்துக்கொண்டு, airport arrival gate நோக்கி வந்தான். ஆம் அவள் flight ஏறும் முன்னே ஏர்போர்ட் வந்து சேர்ந்தான். அவளுக்காக தான் காத்து இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்துக்கொண்டு இருந்தான். அவளுக்காக தேடி தேடி வாங்கிய பூக்களை சேர்த்து bouquet செய்து வாங்கி கொண்டு நின்று கொண்டு இருந்தான். முன்பு அவர்கள் பெங்களூரில் இருந்த போதெல்லாம் அவள் எப்போதும் பிளார்ஸ் வேணும் டெட்டி வேணும் என நச்சரித்து கொண்டு இருப்பாள்; இவனோ பெருசாக இதெல்லாம் யோசித்தது இல்லை. ஆனால் இந்த 3 மாத பிரிவு ஆளை புரட்டி போட்டது. அவள் இப்பொழுது பார்க்கும் போது அவள் ஆசையாக கேட்ட அனைத்தையும் வாங்கி வைத்து இருந்தான்.

நேரம் போகாமல் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டு இருந்தான் ஆதித்தியா. அவ்வப்பொழுது airport வெளியே இருக்கும் LED போர்டு ஐ arrival gate எண்ணிற்காக பார்த்துக் கொண்டு இருந்தான். ஒருவழியாக arrival gate எண் வந்ததும் அந்த கேட் முன்னால் போய் நின்றுகொண்டு அவளுக்கு “Waiting In front of Gate 11” என்று மெசேஜ் அனுப்பினான். “Ok Darling…” என்று ரிப்ளை வந்தது. .. ஐரீன் தானா இது!! என ஒரு விநாடி யோசித்து விட்டு call செய்தான்.

ஆதி: ஹே… நீ லேன்ட் ஆயிட்டு எனக்கு ஏன் கால் பண்ணல? உனக்கு என்ன காக்கவெக்கறதுல அப்படி என்ன சந்தோஷம்??

ஐரீன் : ஹா..ஹா..ஹா இல்ல darling... luggage கலெக்ட் பண்ணிட்டு நேர்லயே வந்து நிக்கலாம்னு நினைச்சேன!! அனா என் பொறுமைசாலி அதுக்குள்ள call பண்ணிட்ட!!

ஆதி : ஆமா ஆமா.. நீ எங்க இருக்க? ஏன் இன்னும் வெளிய வரல?

ஐரீன் : கொஞ்சம் பொறுங்க சார்.. இன்னும் என் luggage வரல…

ஆதி: oh… அப்படியா..!!

ஐரீன் : ஹே!! I got now!! I am coming… Bye…

அவள் Airport  trolley ஐ தள்ளிக்கொண்டு அவனை தேடிக்கொன்டே வந்தாள். வெளியே நிறைய taxi, கூட்டம் இருந்ததால் அவளுக்கு அவனை சரியாக பார்க்க முடியவில்லை. தேடிக்கொன்டே நடைபாதையின் இறுதிக்கு வந்து, அவனை காணாமல், call செய்ய mobile ஐ தேடினாள்.

திடிரென்று பின்னால் இருந்து அவள் காதில் “என்னய்யா தேடற??” என ஆதியின் குரல்…!  அவளுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று போனது… “நீ என்ன…” என ஆரமித்தவளிடிம் bouquet ஐ நீட்டி “Welcome back darling…Bangalore missed us a lot!!” என கூறி சிரித்துக்கொண்டு நின்றான். ஆச்சர்யத்தில் உறைந்துபோனால் ஐரீன்!!

அவன், ஓய் என்ன பேசவே இல்ல நீ என்னை பாத்ததும் பேசி தள்ள போறேன்னு நினச்சேன் என்றான் கிண்டலாக!!

அவள் ஒரு வினாடி சுதாரித்துக் கொண்டு ஹ்ம்ம் நிறைய நினைச்சேன் ஆனா நீ தான் என உறைஞ்சு போக வச்சுட்டியே!!  இதெல்லாம் கனவா நிஜமா..?

அவனோ இயல்பாக சரி வா என்று ஏர்போர்ட் trolley ஐ தள்ளிக்கொண்டு பார்க்கிங் நோக்கி நடந்தான். இவளோ பூக்களையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு வந்தாள்.

பூக்களை விட அவள் முகத்தில் சிரிப்பு கவரிசையாக இருந்தது.

ஹே ஆதி கார் பார்க்கிங் ல இருக்கோம்?? நீங்க தான மேடம் கார் வேணும்னு கேட்டீங்க என்றான் கிண்டலாக, அவள் பதிலுக்கு எனக்கு தெரியும் நீ செய்வேன்னு என்று செல்லமாக அடிக்க;  அவன் open dicky luggage வைக்கணும் என்று சொன்னான்..

இவள் திறக்க அங்கே ஒரு teddy இருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.