(Reading time: 13 - 26 minutes)

இது எனக்கு நீயா வாங்கின என்று கேட்டாள்.. இல்ல டி யாரோ தப்பா வச்சுட்டாங்க போல இரு நான் செக்யூரிட்டி ஆஹ் கேக்கறேன் என்றான்.

போடா எப்பவுமே கிண்டல் தான்… ரொம்ப அழகா இருக்கு என்று கட்டி அணைத்து கொண்டாள். ஆதித்தியாவோ வாங்கிக்கொடுத்தது நான் ஆனா கொஞ்சல்கள் அதுக்கா என்றான் சிறு பொறாமையுடன்.

பேசிக்கொன்டே கார் கதவை திறந்தாள், கார் சீட் முழுதும் அவளுக்கு பிடித்த சாக்லேட்ஸ், கப் கேக்ஸ், பிஸ்கட்ஸ்.. என நிறைந்து இருந்தது. ஐரீன் மீண்டும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றாள். அவளுக்கு இப்பொழுது கனவு உலகத்தில் இருப்பது போல் இருந்தது.

ஆதி நிஜமா இதெல்லாம் நீ தான் பண்றியா?? என்னால நம்பவே முடியல!!

ஆமா இப்படி எதாவது பண்ணுனதானே என்ன திரும்ப விட்டுட்டு போக மாட்ட!!!! பேசிக்கொன்டே இருவரும் airport’ஐ விட்டு வெளியே வந்தனர்; ஆதித்தியா பேச்சை தொடர்ந்தான்….

ஆதி: ஒரு வழியா பெங்களூரு வந்தாச்சு…. அமாம் நான் இந்த சிட்டியையும் உன்னையும் ரொம்ப மிஸ் பண்ணுனேன்..

ஐரீன்: Sorry da..! அப்போ நடந்த பிரச்சனைல என்ன பண்றதுன்னு தெரியாம இப்படி முடிவு எடுத்துட்டேன்...

ஆதி: எவ்வளவு முறை டி  சொல்றது முடிஞ்சத பத்தி பேசாதன்னு.. [சிறு கோபத்துடன்].

ஐரீன்:  சரி சரி பேசவில்லை…[சிறு புன்னகையுடன்].

ஆதி: நீ இவ்ளோ சீக்ரம் என்னையும் என் நிலமையைம் புரிஞ்சுகிட்டு திரும்பி வந்ததே பெருசு!!

ஐரீன்:  Sometimes பிரிவு தனிமை நெறைய கத்துக்கொடுத்துடுது!!!

ஆதி: Philosophy ஆ?? ஆனா உனக்கு தைரியம் எப்படி வந்துச்சு?? [கிண்டலாக]

ஐரீன்:  [செல்லமாக முறைக்க]

சிறிது தூரம் சென்று ஒரு இடத்தில கார் ஐ நிறுத்தினான் ஆதி. மணி 3 இருக்கும், அங்கே இருந்து நகரத்தை பார்க்க ரொம்ப அழகாக இருந்தது.. இருவரும் வெளியே நின்று அந்த குளிர்ந்த காற்றையும், நகரத்தின் அழகையும் ரசித்து கொண்டு இருந்தனர்.. அப்போது ஆதி ஐரீன்க்கு பிடித்த பாடல்களை கார் இல் போட்டான்… அந்த நேரம் மிகவும் ரம்மியமாக இருந்தது.

அவன் அவலருகவே சென்று… அவள் கண்களை பார்த்து, எவ்ளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து நிஜமாவே நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஏதோ முதல் முறை உன்னை பார்க்கிற மாதிரி உன்னை impress பண்ணனும்னு 1 வீக்கா யோசிச்சு இதெல்லாம் பண்ணுனேன் என்று கூறினான். அவன் கேள்வியை புரிந்து கொண்ட ஐரீன் “I am Impressed” என ஒற்றை வரியில் பதில் கூறினாள்.

இந்த நாள் இந்த நிமிஷம் இதுக்குமேல அழகா இருக்குமான்னு தெரியலை.. இனி உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று சொன்ன மாத்திரத்தில் அவள் கண்கள் பேச தொடங்கியது, கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது; அவளை தன் மார்பில் அணைத்து கொண்டான் ஆதி.

வாழ்க்கைல பிரச்சனை வரும்பொழுது எதிர்த்து போராடனும் ஓடி போகக்கூடாது என்றான் நம்பிக்கையாக… சரி என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டினாள். போனது போகட்டும் விடு, இனி எல்லாமே நல்லதாக நடக்கும் என்று கூறினான். Car பெங்களூரை நோக்கி நெடுஞ்சசாலையில் விரைந்தது...!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.