(Reading time: 7 - 14 minutes)

எத்தன பசங்க ? ஆத்துக்காரர் என்ன பன்றார் ? உன்ன பாக்கவே இல்ல. +2 லீவுக்கு பிறகு.

ம்...

ஒரு பொண்ணு. அவர் ஒரு கம்பெனில சீனியர் ஆடிட்டரா இருக்கார்.

நான் தான் லீவு முடிஞ்சு காலேஜ் போக இருந்ன்தேன். அதுக்குள்ளே கல்யாணம் பண்ணிண்டு சென்னை வந்துட்டேன். அது சரி சுந்தர். உனக்கு கல்யாணம் ஆய்டுத்தா?

இல்ல வேணி. நானும் அம்மாவும் பெங்களூர் போனோம். மாமா ஆத்துக்கு. அங்கேயே நான் படிக்க சேர்ந்துட்டேன்.  நீ சொன்ன அந்த மூணு வருஷம் அதுக்காக போனேன்.. வேணி..

அவன் எதை சொல்கிறான் என புரிந்து.. யோசித்தாள் அந்த நாளை..

அப்பாவிடம் வயலின் கத்துக்க வந்த சுந்தர் தன்னிடம் காதலை சொன்னது. ரொம்ப பெரிய மனுஷியாய், 

இல்ல சுந்தர் நான் மேலே படிக்கணும். அப்பாவ  பாத்துக்கணும். உண்மையாவே நீ என்னை விரும்பினா 3 வருஷம் காத்திரு சுந்தர் என்றதும்,

அவன் எவ்வளவு சொல்லியும் நான் பிடிவாதமாய் இருந்தேன். ஆனால் நடந்ததே வேறு.

சட்டென அவனே மௌனம் கலைத்தான்.

ஹே.. வேணி அத விடு...

 நான் இப்போ மீடியால இருக்கேன். ஒரு டிவி சீரியல்ல அசிஸ்டெண்ட் டைரைக்டரா இன்னைக்கு முதல் எபிசோட் மறக்காம பாரு...

இந்தா என்னோட நம்பர்..

நான் "வழக்கமான மாமியார் மருமகள் சண்டை தானே?சுந்தர்.

இல்ல வேணி இது கொஞ்சம் வித்தியாசமா.

சரி.. பாக்கறேன்

ரவு... சீரியல் முதல் எபிசோட். 

ஆரம்பமே மாமியாரும் மருமகளும் மோதிக்கொண்டார்கள். மாமியார் அதிகாரம் தூள் பறந்தது சீரியலில்.

பார்த்துக்கொண்டிருந்த என்ன அத்தையும்,”ஆமா அப்படித்தான் இவளுக வாய ஒடைக்கணும். என்ன பேச்சு பேசுறாளுங்க என்று ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தார்கள்.

எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. 

சுந்தருக்கு டயல் செய்தேன்..

ஏய்.. சுந்தர் ! சிரியல்ல என்னடா வித்தியாசம் ? அதே மாமியார் மருமகள் சண்டை தான் புதுசா ஒண்ணுமில்லையே ?

இல்ல வேணி. முதல் இரண்டு நாள் அப்படித்தான். மூணாவது நாள் பாரு.

மூன்றாவது நாள் அதிசயமாய் என் மகளும் என்னோடு சீரியல் பார்க்க வந்தாள்

அத்தையும் சீரியலில் வரும் சண்டையை உற்றுப் பார்த்துக் கொண்டே என்னையும் ஒரு ஏளன பார்வைப் பார்த்தார்கள்.

சீரியலில் மாமியாரின் கொடுமையை பொறுக்காமல் மருமகள் பொங்கி எழுந்து பேசும் வசனம் வந்தது.

“என்ன மாமி இந்த வயசுல இவ்வளோ பேசுறீங்களே, எனக்கு திருப்பி பேச எவ்வளோ நேரம் ஆகும்.  உங்க வயசுக்கு மரியாத கொடுத்து அடங்கிப் போனா.. ரொம்ப பேசுறீங்க. 

வர்ற கோவத்துல "சிரிச்சுட்டே சாப்பாடுல 10பேதி மாத்திர கலந்துப் போட்டுட்டா என்ன பண்ணுவீங்க ?

யோசிச்சு பாருங்க உங்க வயசுக்கு தாங்குமா உடம்பு? எத்தன முறை டாய்லட் போவீங்க ?

சொல்லும் போதே குபீரென சிரித்துவிட்டோம் நானும் மகளும்.

என் மகள் “பாட்டி அம்மா போடுறாளோ இல்லையோ நான் போட்றுவேன். மாத்ரய ! என்று சொல்லி விட்டு ஓடிவிட்டாள்.

என்னை திரும்பி பார்த்த அத்தையின் பார்வை  “போட்றுவாளோ” என்பது  போல் இருந்தது.

நான் சிரித்துக் கொண்டே எழுந்துப் போனேன்.

ரண்டு நாட்களுக்கு பிறகு ஆபீஸ்ல இருந்து வந்ததும் வராததுமாய் என் கணவர்,

“ வேணி நாம நாளைக்கு காலம்பற நாம கும்பகோணம் கெளம்புறோம். உங்க அப்பாவ பாக்க. அங்கே ஒரு வாரம் இருக்கோம். இங்க அப்பாவையும் அம்மாவையும் பாத்துக்க ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

என்னங்க திடீர்ன்னு ? புரியாமல் விழித்தேன்..

எதுவும் சொல்லாத. போலாம்னா போகலாம்.எல்லாம் ரெடிபண்ணிடு.

ஏனோ அத்தை பேசவே இல்லை. கலவரமுகமாகவே இருந்தார்கள்

மறுநாள்  அவரோடு நான் மகிழ்ச்சியாக இரயிலில் பயணித்தேன்.மகள் இன்னும் சந்தோஷமாய் இருந்தாள்.

ஊருக்கு போனதும் அப்பாவுக்கு பெரும் மகிழ்ச்சி.

மாப்பிள்ளையை தட புடலாக கவனித்தார். 

பேத்தியை கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்தார்.

கோயில்,குளம் என்று ஊர் சுற்றி சுற்றி வந்தோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.