(Reading time: 7 - 13 minutes)

சிறுகதை - பாத்திரமறிந்து… - K.சௌந்தர்

hands

வாகன நெரிசல் காலையிலேயே தொடங்கிவிட்டது.

"எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் இதுல மாட்டிக்காம போக முடியாது போலருக்கு". சலித்துக்கொண்டாள் நீலிமா.

"அதுக்கு நீ இன்னும் கொஞ்சம் சீக்கிரமா உன் மேக்கப்பை முடிச்சிருக்கணும்" வேண்டுமென்றே அவளை சீண்டியபடி எதிரில் வந்த லாரிக்காக காரை ஒதுக்கி ஓட்டினான் அனில்.

"என்ன சொன்னீங்க " சீரியபடி தன் பெரிய கண்களால் அவனை முறைத்தாள் நீலிமா.

"ஓ சாரிடா நீலு. உனக்குத்தான் மேக்கப்பே  தேவையில்லைன்னு இந்த ஊருக்கே தெரியுமே"

அவனது ஐஸில் உச்சி குளிர்ந்தபடி " சும்மா லொட லொடக்காம சீக்கிரம் போங்க, ஏற்கனவே ஆபீஸ் பத்து நிமிடம் லேட்"

"இந்த ட்ராபிக்கில இப்படித்தான் போகமுடியும்". என்றபடி எதேச்சையாக திரும்பிய அனில் சாலையோரக் கடையில் அவளை பார்த்தான். கிழிசல் இல்லையென்றாலும் மிகமிக பழைய சேலை. உடையும் உருவமும் வறுமையை எடுத்துக் காட்டியது.

"நீலு, அந்தக் கடையில நிக்கறது உன்னோட ஒன்னுவிட்ட சித்தப்பா பொண்ணு சாந்திதானே?" என்றபடி நீலிமாவை உசுப்பினான் அனில்.

"ஷ் ..பேசாம சீக்கிரம் போங்க , அவளை நா ஏற்கனவே பாத்துட்டேன். அவுங்க குடும்பம் இந்த ஊருக்கு வந்து ஒரு வாரமாச்சு" என்றாள் நீலிமா.

"என்னது உனக்கு ஏற்கனவே தெரியுமா? அப்புறம் ஏன் நீ அவுங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிடலை? நம்ம சொந்தக்காரங்க இந்த ஊர்லயே இருப்பது நமக்கு எவ்வளோ உதவி தெரியுமா?"

"அது அப்படியில்லை. நமக்கு சமமா இருக்கிறவங்க கிட்ட தான் நாம உறவு வச்சுக்கணும். இவுங்கல்லாம் ரொம்பவே வசதி கம்மியானவங்க. நம்ம வீட்டுக்கு கூப்பிட்டா எதாவது பண உதவி கேப்பாங்க. ஏற்கனவே அவுங்க பையனுக்கு நம்ம சுமா படிக்கற ஸ்கூல்ல அட்மிஷன் வாங்க அலையறதா கேள்விப்பட்டேன்" என்றாள் நீலிமா.

எவ்வளோ நல்ல குணங்கள் இருந்தும் நீலிமாவிடம் இந்த ஒதுக்கம் ஒரு பெரிய குறைதான். 'தன்னை மணக்காவிட்டால் இவளும் ஓர் ஏழை தானே ' எண்ணியதை சொல்லாமல் மௌனமானான் அனில்.

அந்தக் கடையில் எதையோ பேரம் பேசியபடி திரும்பிய அவள் அவர்கள் காரை பார்த்துவிட்டாள், வாயெல்லாம் பல்லாக இவர்கள் காரை நோக்கி வரவும் தொடங்கிவிட்டாள்.

"ஐயோ சொல்ல சொல்ல கேக்காம இவ்வளோ மெதுவா போனீங்க,  அவ நம்ம காரை பாத்துட்டா. காரை பக்கத்து சந்துல திருப்புங்க சீக்கிரம் " என்று பதறினாள் நீலிமா.

"அந்த வழியா போனா நீ நாளைக்குத்தான் ஆபீஸ் போக முடியும்." என்றவனை அந்த வழியே ஓட்டவிட்டு கிட்டத்தட்ட அன்று மதியம் தான் ஆபீசுக்கு போனாள் நீலிமா.

‘எல்லாம் அந்த சனியனால் வந்தது. அவளும் இந்த ஊரிலே தான் வந்து உக்கார வேணுமா. ஏற்கனவே பேங்க்கில் பணம் எடுக்க ஏக கெடுபிடி. இந்த லட்சணத்தில் யாருக்காவது கடன் கொடுப்பது எப்படி சாத்தியம்?’ கரித்துக் கொட்டியபடி வீடு வந்த நீலிமாவுக்கு யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வந்தது.

சாந்தி சின்ன வயதிலிருந்தே நீலிமாவிடம் மிகவும் உரிமை எடுத்து பழகுவாள். 'நீலிமா  எங்க அக்கா' என்று சொல்லுவதிலேயே  அவளுக்கு ஒரு பெருமை. இப்போ வீடு இருக்கும் இடம் தெரிந்தால் இந்த வீட்டிலேயே வந்து உக்காந்தாலும் ஆச்சர்யப்  படுவதற்கில்லை.

அவளை எப்படி தவிர்ப்பது  என்ற யோசனையிலேயே உழன்றவளை செல்போன் மெசேஜ் உசுப்பியது. 

அய்யய்யோ இதை வேற மறந்தே போனேனே, சுமாவுக்கு நாளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசிநாள். இப்போ கையிலே அந்த அளவுக்கு பணம் இல்லையே, நாளைக்கு பேங்குக்கு போயிதான் எடுக்கணும்.

அனில் வேறு அவசர வேலையாக வெளியூர் போயிருந்தான். இப்போ என்ன செய்வது, நாளை காலை பத்து மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குது. ஆபீஸ்ல பர்மிசன் கேட்கவும் முடியாது. சரி எதுக்கும் பேங்குக்கு போய் பார்ப்போம்,

‘பேங்க் போகணும்னாலே தலையை சுத்துது. எவ்வளோ நேரம் க்யூவில் நிக்கறது’, என்று புலம்பியபடி கிளம்பியவள் பேங்கில் நின்ற கூட்டத்தைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான்.

‘ இன்னைக்கும்  ஆபீசுக்கு அரை நாள்தான் போகமுடியும் போலருக்கு’ என்று நினைத்தபடி வரிசையில் நின்றவளுக்கு பத்து நிமிடம் நிற்பதற்குள் வேர்த்து கொட்டியது.சே  , க்யூ நகர்ற மாதிரியே தெரியலையே எப்படியும் பத்து மணிக்குள்ள பணம் எடுக்க முடியும் போல தெரியலையே? மீட்டிங் முடிஞ்சு வந்தா பேங்க் மூடிடுவாங்க, இப்போ என்ன செய்யறது, என்று தவித்தபடி  திரும்பிய போது, மிக அருகிலேயே அவள் , அந்த சாந்தி நின்றிருந்தாள்.

"நீலிமாக்கா ,நீதானா , உங்கள மாதிரியே தெரியுதுன்னு அவரு சொன்னாரு, அதான் பாக்கலாம்னு வந்தேன்”.

'பேசாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தாள் நீலிமா. இப்போது இவளை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்வதா அல்லது ....யார் நீ என்று கேட்டு விடலாமா '

‘சட்டென நீலிமாவுக்கு ஒரு யோசனை உதயமானது, இப்போது இதுதான் வழி, மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’  என்று தீர்மானித்தவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.