Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 02 - கொலையும் செய்வாள் பத்தினி - புவனேஸ்வரி கலைசெல்வி - 5.0 out of 5 based on 1 vote

சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 02 - கொலையும் செய்வாள் பத்தினி - புவனேஸ்வரி கலைசெல்வி

old couple

 

" டாக்டர் என் மனைவிக்கு எப்படி இருக்கு?" முதுமையை தாண்டி ஒருவித பயத்தில் அவரின் குரல் நடுங்கியது. அதை உணர்ந்த கொண்ட இளம் மருத்துவன் மிருதுவாய் புன்னகைத்தான்.

"நீங்க பயப்பட வேண்டாம் சார். மேடம் வயித்துல சின்னதா ஒரு கட்டி இருக்கு. சர்ஜரி பண்ணிட்டா சரி ஆகிடும்." என்றான்.

"ஆபரேசனா? மருந்து கொடுங்க டாக்டர்.. அவ வலி தாங்க மாட்டா" என்றார் அந்த முதியவர்.

"மருந்து மூலமா சரி பண்ண முடிஞ்சா இதுக்கு அவசியமே இல்லயே சார்" என்றவன் அவருக்கு புரிந்து விதத்தில் விளக்கம் கொடுத்து அவரை சம்மதிக்க வைத்தார்.

"சரி டாக்டர். வெள்ளிக்கிழமை வரோம்" என்றவர் அந்த அறையிலிருந்து வெளிவர அத்தனை நேரம் வலியில் முகம் சுளித்த அவரின் மனைவி பெரிதாய் புன்னகைத்து வலியை மறைந்தார்.

"ரொம்ப வலிக்கிதாம்மா?"

"இல்லையே.. ! டாக்டர் என்ன சொன்னாருன்னு சொல்லுங்க"

"ஒன்னுமில்லம்மா..சின்ன பிரச்சனையாம்" என்றவரின் குரலில் இருந்த தயக்கத்தை அவரின் மனைவி புரிந்து கொண்டார்.

"சரி..அதென்ன சின்ன பிரச்சனை? சிரிச்சிட்டே சொல்லுங்க கேப்போம்" என உரைத்தார் அவர். டாக்டர் சொன்ன எதையும் மறைக்காமல் கூறினார் பெரியவர்.

" இவ்வளோ தானே? சர்ஜரி பண்ணிக்கலாம்..இப்போ வீட்டுக்கு போலாம் வாங்க" என கணவரின் கையை பிடித்துக் கொண்டு நடந்தார் அந்த மூதாட்டி.

"டாக்டர் என்னம்மா சொல்றாங்க?" என்று கேட்ட டிரைவரிடம் அவரே,

"எனக்கு சின்ன ஆபரேஷன் பா" என்றார்.

காரில் அமர்ந்த பெரியவருக்கு இன்னமும் நடுக்கம் குறையவில்லை. வலியை தாங்குவாளா என்னவள்? தன்னையே கேட்டு கொண்டார். இந்த நாற்பது வருட மணவாழ்க்கையில் அவர்கள் மருத்துவமனைக்கு சென்ற நாட்களை விரல்கொண்டு எண்ணிவிடலாம். அவர்கள் கடைசியாக மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது.

ன்று..! (முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு..அவர், அவனாகிறார்!)

" என்னடா இது? கல்யாணம் ஆகி மூனு வருஷம் ஆச்சு.. இன்னமும் எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து கொடுக்காம இருக்கீங்க.. வரவங்க, போறவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்வேன்? எனக்கு இதுக்கு கண்டிப்பா முடிவொன்னு தெரியனும். நீயும் உன் பொண்டாட்டியும் என்னோட இப்பவே ஹால்ப்பிட்டலுக்கு வரிங்க" என இருவரையும் அழைத்து போனார் அவனது தாயார்.

என்னதான் அன்னையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு சோதனைக்கு இணங்கி இருந்தாலும் அன்றிரவு அவனால் உறங்க முடியவில்லை. "பிள்ளை செல்வம் இல்லை என்றால் என்ன? எங்களுக்குள் இருக்கும் அன்பும் பிணைப்பும் குறைந்துவிடுமா? வாரிசுக்காக மன நிம்மதியை இழப்பதா?" என மனதினுள் கேட்டவன் உறங்கி கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான்.

"உடலில் பிரச்சனை எனக்குன்னா பரவாயில்லை டா. உனக்குன்னா நீ தாங்குவியா? மருகிட மாட்டியா? வாரிசு தர முடியாதவள்னு உன்னையே அழிச்சுக்க மாட்டியா?" என தனக்குள் கேட்டவன் மறுநாளே அந்த பரிசோதனைக்கான ரிசல்ட் தேவையில்லை என சொல்ல மருத்துவமனைக்கு வந்தான்.

அதே காரணத்திற்காக தான் அவளும் வந்திருந்தாள். "ஒருவேளை பிரச்சனை உனக்கு இருந்தால் நீ அதை எப்படி எடு்த்துப்பபா! ஒரு பெண்ணுக்கு அம்மா என்ற ஸ்தானத்தை தர முடியலன்னு உடைஞ்சிருவியே!" என்று அவள் கூறவும் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் அவன்.

" குழந்தை பொறக்கனும்னு இருந்தா பொறக்கும். அப்படி நடக்கலன்னாலும் ஒரு குறையும் இல்ல.. நீ போதும் டா எனக்கு" என்றவன் தன் மனையாளுடன் தனி குடித்தனத்தை தொடங்கினான்.

ன்றைய நிகழ்வில் தொலைந்து போனவரின் தோளில் சாய்ந்து கொண்டார் அந்த மூதாட்டி.

"ப்ளாஷ் பேக் ஓட்டி முடிச்சாச்சா?"

"ஹா..ஹா..உனக்கு எப்படி தெரியும்?"

"நீங்க ஓட்டின படத்தை உங்க கண்ணு வழியா பார்த்தேன்.."

"ஹ்ம்ம்.."

"எதுக்கு பயப்படுறீங்க.. எனக்கு சரி ஆகிடும்.."

"ம்ம்" .. கணவரின் கையை பற்றி கொண்டார் அவர். சுருங்கி அந்த சருமத்திற்கு மேல் அழுத்தமான முத்தமொன்றை பதித்தார்.

 நான்கு நாட்களுக்கு பிறகு,

" பாட்டி.. நீங்க இப்போ குணமாகிட்டீங்க.. கொஞ்சம் எழுந்து நடங்க.. ஒருவாட்டி எல்லாம் டெஸ்ட் பண்ணதும் வீட்டுக்கு போகலாம்." அந்த மருத்துவன் சொன்னதும் தான் பெரியவரின் முகத்தில் நிம்மதியே வந்தது.

"ஹப்பாடி இப்போதாங்க உங்க முகத்துல சிரிப்பே வருது" என்று தன் மனைவி சொல்லவும் அவர் இன்னும் பெரிதாக சிரித்தார்.

"சரிம்மா..டாக்டர் தம்பி நடக்கனும்னு சொன்னார்ல...வா" என்றவர் மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டார்.

நடந்து கொண்டே இருவரும் அந்த ரம்யமான சூழ்நிலையை அனுபவித்தனர்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Buvaneswari

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # #ReDharani 2017-09-11 15:49
Unarvugal pesum kathiyil per vename ga .. yaar yaar ku yaara pidukutho avangalahave nenachukatum
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 02 - கொலையும் செய்வாள் பத்தினி - புவனேஸ்வரி கலைசெல்விmadhumathi9 2017-09-02 06:01
:clap: Super story. Mudhumaiyin kadhal romba azhagu. (y)
Reply | Reply with quote | Quote
-1 # RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 02 - கொலையும் செய்வாள் பத்தினி - புவனேஸ்வரி கலைசெல்விTamilthendral 2017-09-01 20:35
Very cute story Bhuvi (y)
Ivangalukku Arjun-Subhadra peruthaan poruthama irukkum :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 02 - கொலையும் செய்வாள் பத்தினி - புவனேஸ்வரி கலைசெல்விAnubharathy 2017-09-01 13:39
Super story mam.
:hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # sirukadhai-ennavanum ennavalumsuveni 2017-08-31 23:25
hi
very nice and different love story (y) :GL: :hatsoff:
wait for next epi
god bless you
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 02 - கொலையும் செய்வாள் பத்தினி - புவனேஸ்வரி கலைசெல்விAboorva 2017-08-31 21:34
S. P. Choudhry & Lakshmi

Another different story
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதைத் தொடர் - என்னவளும், என்னவனும் - 02 - கொலையும் செய்வாள் பத்தினி - புவனேஸ்வரி கலைசெல்விVasumathi Karunanidhi 2017-08-31 21:25
super one poona kutty..
sokkanathan meenatchi rendu perum kalakkalz...
Reply | Reply with quote | Quote
+1 # Kolaoyum seivaal pathini by BhuvaneswariSahithya 2017-08-31 20:49
Hi,
So many r leading the same life. Only negative parts are revealed everywhere. But this positive life should be exposed. Very nice and super story and a lesson for youngsters. :clap:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From the past

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
05
TPN

MuMu

YAYA
06
UNES

OTEN

YVEA
07
SPK

MMU

END
08
SV

VKV

AK
09
KMO

Ame

-
10
VPIEM

MVS

EKK
11
Tha

-

-


Mor

AN

Eve
12
TPN

MOVPIP

YAYA
13
IVV

OTEN

YVEA
14
PEPPV

EANI

END
15
EEU01

VKV

AK
16
TAEP

KKKK

-
17
VPIEM

MVS

EKK
18
-

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top