(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - எதிர்பார்ப்புகள் - சிவாஜிதாசன்

brokenHeart

ரு திறந்தவெளி உணவகம். விளக்குகள் எரியாமல் ஒவ்வொரு மேசையிலேயும் மெழுகுவர்த்தி மட்டும் ஒளிவீசிக்கொண்டிருந்தது. ஸ்வேதா கொஞ்சம் படபடப்போடும், கோபத்தோடும், கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். பல்லால் தன கீழுதட்டைக் கடித்துக்கொண்டே, தன் செல்பேசியை எடுத்து சில எண்களை அழுத்தினாள். பின், செல்பேசியைக் காதோரம் வைத்தாள். சில நொடிகளில் எதிர்முனையில் ஓர் ஆண் குரல்.

பிரதிப் : (போன் எடுத்த உடனே) ஸாரி...ஸாரி...

"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?"

"ஸாரி மா, வழியில ஒரு விபத்து. அது சரி ஆகுறதுக்கு டைம் ஆயிடுச்சு."

"ஐய்யய்யோ, உங்களுக்கு ஏதும் ஆகலியே?"

(இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு மேசைகள் தள்ளி அமர்ந்திருந்த ராம், காபி குடித்துக்கொண்டே, இதழில் சிறு புன்னகை தவழ ஸ்வேதா பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்)

"நீ எங்க இருக்கிற?"

"நான் உங்கள எங்க வர சொன்னேனோ அங்க தான் இருக்கேன்."

"சரி, இன்னும் 5 நிமிஷத்தில நான் அங்க இருப்பேன்"

ஸ்வேதா போன் பேசி முடித்ததும் மேசையில் தன் செல்பேசியை வைத்தாள். பின், நேரத்தைக் கடத்த சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே தன் விரலில் போட்டிருந்த மோதிரத்தை மெல்ல சுழற்றிக்கொண்டிருந்தாள்.

ஸ்வேதாவின் பின்னால் அமர்ந்திருந்த ராம், ஒரு கிஃப்ட் பாக்ஸ் எடுத்து, மேசை மேல் வைத்து அதை மெல்ல தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது, படி ஏறி மேலே வந்த பிரதிப் ஸ்வேதா எங்கே என்று தேடினான். ஸ்வேதா அவன் பின்புறமாய் வந்து அவன் தோளைத் தொடுகிறாள். பிரதிப் திரும்பிப் பார்த்தான். ஸ்வேதா அவனைப் பார்த்த சந்தோசத்தில் சிரித்தாள். அவன் தன் மகிழ்ச்சியை வெளிக்காட்ட அவளை மெதுவாக அணைக்க முற்பட்டபோது, அவள் 'என்ன இது? எல்லாரும் பார்க்கிறாங்க' என்று கூறி அவனைத் தடுத்தாள். 

"மாசத்தில ஒரு தடவை தான் என்னுடைய மனைவியை பார்க்கிறேன். ஒரு ஹக் கூட பண்ண விட மாட்டிக்கிறியே."

"அதுக்கு நீங்க ஒரு ஊர்ல வேலை பார்க்கணும். ஒவ்வொரு மாசமும் மும்பை, பெங்களூர், கொல்கத்தா னு சுத்திட்டு இருந்தா, இப்படி தான் ஆகும்."

"நான் என்ன பண்றது. என் கம்பெனி வேலை அப்படி".

இரண்டு பேரும் ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அங்கே சென்று அமர்ந்தார்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, வெயிட்டர் வர, தாங்கள் தேர்ந்தெடுத்த உணவு வகைகளை அவனிடம் கூற அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

"பிரதிப், நமக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?"

"ஆறு அல்லது ஏழு மாசம்?" என சற்று சந்தேகத்தோடு பிரதிப் கூற "எட்டு மாசம்" என அழுத்திச் சொல்கிறாள் ஸ்வேதா

"ஸாரி, ரொம்ப தூரம் டிராவல் பண்ணின டென்ஷன்"

ஸ்வேதா ஒரு சோகத்தோடு அவனைப் பார்த்தாள். வெயிட்டர் அவர்கள் ஆர்டர் பண்ணிய ஐஸ்கிரீம் கொண்டுவந்து வைத்தான்.இரண்டு பேரும் ஐஸ்கிரீமை மெதுவாக சுவைத்தார்கள். 

"கல்யாணம் ஆகி முதல் மாசம், அஞ்சு நாள் முன்னாடியே லீவ் போட்டு வந்தீங்க. இப்போ ஒரு மாசத்துக்கு ரெண்டு நாள் தான் இருக்கீங்க. அதுவும் இன்னைக்கு அஞ்சு மணி நேரம் லேட். என்னோட உணர்ச்சிகள புரிஞ்சிக்க மாட்டீங்களா?".

பிரதிப் (கொஞ்சம் டென்ஷன் ஆகி) "நான் என்ன வேணும்னேவா பண்ணிட்டு இருக்கேன். நம்ம எதிர்காலத்துக்காகவும் நமக்கு வரப்போற குழந்தைங்களோட எதிர்காலத்துக்காகவும் தான் இவ்வளவு கஷ்டபடுறேன். உன்னையே பார்த்திட்டு இருந்தா லைப்ல எப்போ மேல வரது."

ஸ்வேதா (கொஞ்சம் கண் கலங்கி) "இன்னைக்கு என்ன தேதி தெரியுமா?"

"செப்டம்பர் பதிமூணு"

"நான் எதுக்கு உங்கள இங்க வர சொன்னேன் தெரியுமா?"

"நானே கேக்கணும்னு நினச்சேன். எதுக்கு?"

"இன்னைக்கு என் பர்த்டே"

பிரதிப் (நெத்தில கை வச்சிட்டே) "ஓ மை காட்!மறந்தே போயிட்டேன்." எப்படி மறந்தேன் (உள்ளுக்குள்ளே முணு முணுக்கிறான்)

ஸ்வேதா கண்கலங்கி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"இத முடிச்சிட்டு ஷாப்பிங் போறோம் .உனக்கு என்ன வேணுமோ அத வாங்கிக்கோ."

(ராம், நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து வானத்தில் இருந்த நட்ச்சத்திரங்களையே பார்த்துக்கொண்டிருந்தான்).

ஸ்வேதா (கண்ணீர துடச்சிட்டே) "உங்க கிட்ட இதுவா நான் எதிர்பார்த்தேன். உங்க கிட்ட இருந்து ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் தான் எதிர் பார்த்தேன். நீங்க ஒரு விஷ் கூட பண்ணல..."

"ஸாரி, நான் என்ன பண்றது. வொர்க் டென்ஷன்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.