(Reading time: 7 - 14 minutes)

அப்போது பிரதிப்க்கு ஒரு போன் வந்தது.

"இதோ வந்திடறேன் ஸ்வேதா"

பிரதிப் எழும்பி,  "ஹலோ சொல்லுங்க" என்று பேசிக்கொண்டே அவ்விடத்தை விட்டு சற்று தொலைவில் சென்றான். ஸ்வேதா தன் தலையைச் சற்று தாழ்த்தி கைக்குட்டையால் கண்களை மூடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இருந்தபோது, ராம் எழுந்து ஸ்வேதா அருகில் சென்று அவளுக்குத் தெரியாமல் தன் கையிலிருந்த கிப்ட் பாக்ஸ்சை அவள் மேசையில் வைத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தைவிட்டு சென்றான்.

ஸ்வேதா கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தபோது தன் முன்னே இருந்த கிப்ட் பாக்ஸ்சைப் பார்த்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தாள். தூரத்தில் போனில் பேசிக்கொண்டிருந்த பிரதிப்பைப் பார்த்துக்கொண்டே கிப்ட் பாக்ஸ்சை திறந்தாள். அதில் இருந்த பொருளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். அதில், இதய வடிவில் வைரக்கல் பதித்த ஒரு தங்கச் சங்கிலி இருந்தது. ஸ்வேதாவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

ராம், ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஸ்வேதா வந்துகொண்டிருந்தாள்.

ராம் : எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?

ஸ்வேதா : வீட்டில ஸ்பெஷல் கிளாஸ்னு பொய் சொல்லிட்டு வர வேணாமா. அது மட்டுமிலாம டிராபிக் வேற.

"லவ் பண்ண ஆரம்பிச்சப்போ நைட் பன்னிரண்டு மணி வர போன்ல பேசுவ. இப்போ போன் பண்ணா கூட எடுக்க மாட்டிக்கிற."

"என்னையே குறை சொல்லிட்டு இருக்காத. போன் ரிங் அடிச்சாலே..இல்ல போன் எடுத்திட்டு தனியா போனாலே எங்க வீட்டில கொள்ளக்காரங்கள பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க. உன் பிரச்சனையையே பார்க்காத...என்னோட நிலைமையையும் புரிஞ்சிக்கோ."

ராம் சோகமாய் தலையை ஆட்டினான்.

"உன் பக்கத்தில இருக்கே. என்னது அது?"

ராம் (ஒரு புத்தகம் எடுத்து) "இதுவா?"

"எதுக்கு இது?"

"நீ வர வரைக்கும் போர் அடிக்குமே. அதான் சும்மா வாங்கி படிச்சிட்டு இருந்தேன்."

"அப்படியா?

அந்த புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு பக்கமாக திருப்பினாள். ஒரு பக்கத்தில் இருந்த விளம்பரத்தைப் பார்த்து தன் மகிழ்ச்சிக்குரலை வெளிப்படுத்தினாள் ஸ்வேதா

"வாவ்!" (அந்த புத்தகத்தில இருந்த செயின் காட்டி) "இத போல தான் எனக்கு செயின் போடணும்னு ஆசை. ஆனா வீட்டில வாங்கிக் குடுக்க மாட்டாங்க"

(அந்த செயின் படத்த பார்த்திட்டே) "உன் பர்த்டே செப்டம்பர் 13 தானே?"

"ஆமா, எதுக்கு?"

"இல்ல, ஒரு சின்ன சர்ப்ரைஸ்க்காக தான்"

ஸ்வேதா (சிரிச்சிட்டே) "என்ன, இந்த செயின் வாங்கிக் குடுக்கப் போறியா?"

"தெரியல"

இரண்டுபேரும் சிரித்தார்கள்.

ராம் : நான் என்ன கேக்குறேன்? டெய்லி ஒரு 5 நிமிஷம் வந்து பாருன்னு தானே சொல்றேன்

"கண்டிப்பாடா, இனிமே அப்படி செய்றேன்

அடுத்த நாள். ராம் ஸ்வேதாவுக்காகக் காத்திருந்தான். ஆனால், அவள் வரவில்லை. அவளுக்கு போன் பண்ணினான். ஆனால், அவள் போன் எடுக்கவில்லை. அடுத்த சில நாட்களும் அவள் வருகைக்காகவும், தொலைபேசி அழைப்புக்காகவும் காத்திருந்து ஏமாந்தான்.

ஐந்தாவது நாள்...

மீண்டும் ராம் போன் செய்தபோது நெடுநேரம் கழித்து ஸ்வேதா போனை எடுத்து பேசினாள்.

ராம் : "என்ன ஆச்சு?"

ஸ்வேதா : "எங்க வீட்டில எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இனிமே நாம மீட் பண்றது நல்லது இல்ல. என்ன விட்டுரு. ஐ ஆம் ஸாரி."

ஸ்வேதா போன் வைக்கவும், ராம் தன் கைகள் இரண்டையும் நெற்றியில் வைத்து கண்களை மூடி  கவலையில் ஆழ்ந்தான்.

ன் கையிலிருந்த சங்கிலியை நோக்கிவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ ஓர் உணர்வு தோன்ற எழுந்து சென்று சுவர் ஓரமாய் நின்று கீழே பார்த்தாள். ராம் நிறுத்தி வைத்திருந்த தன் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஸ்வேதா, அவன் செல்வதையே கண்ணீர் ததும்ப கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.