(Reading time: 7 - 13 minutes)

சிறுகதை - விழுதாக நானிருப்பேன் - K.சௌந்தர்

dadSon

ப்போ நீங்க முடிவா என்னதான் சொல்றீங்க?” ஆத்திரத்துடன் கேட்டான் அகிலேஷ்.

பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்த ராகவன் நிதானமாகத் திரும்பி    " நா என் முடிவை சொல்லிட்டேன், இனி நீ  தான் முடிவெடுக்கணும் " என்றார்.

"என் முடிவில் மாற்றமில்லை..என்னால் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, பெண்களை  மன்னிக்கவும் முடியாது " என்றான் அகிலேஷ்

"எல்லாப் பெண்களும் உன் அம்மா மாதிரிதான் இருப்பாங்களா...உன் முடிவு தவறு அகிலேஷ்”. 

"அவளை என் அம்மா ன்னு சொல்லாதீங்க..".குறுக்கிட்டு கத்‌தினான் அகிலேஷ் .

“இருப்பா.. நா பேசி முடிச்சுடரேன். நீ கல்யாணத்துக்கு சம்மதிக்காத வரைக்கும் நானும் இந்த வீட்டுல இருக்கப் போறதில்லை. என் முடிவிலும் மாற்றமில்லை” உறுதியாகச் சொன்ன ராகவன் பெட்டியை எடுத்துக்கொண்டு வாசலில் இறங்கினார்.

“அப்பா ப்ளீஸ்..இந்த விஷயத்துல மட்டும் என்னைக்  கம்பெல் பண்ணாதிங்க. நீங்க வேற என்ன செய்யச் சொன்னாலும் செய்யறேன்” கெஞ்சினான் அகிலேஷ் .

“நீ வேற ஒன்னும் செய்ய வேணாம். உன் இஷ்டப்படி இருந்துக்கோ. நான் கிளம்பறேன்” அவன் பதிலுக்குக் காத்திராமல்  விருட்டென வெளியேறி நடந்தார் ராகவன்.  

றுநாள் காலை.

ஜன்னல் வழியே வீசிய சில்லென்ற காற்று அப்போதுதான் பெய்த மழையை உணர்த்தியது. மெல்ல கண்விழித்த அகிலேஷ் ஜன்னல் வழியே வெளியே விழுந்த மழையை ரசித்தான். மழைத்துளி ஜன்னலின் அருகே இருந்த ரோஜா மலரை நனைத்து அதிலிருந்து கீழே விழுந்துகொண்டிருந்தது.  ஏதோ இயற்கை அன்னையே அவன் துன்பத்தைப் பார்த்த்து கண்ணீர் சிந்துவது போலிருந்தது. கைகால்கள் அசைக்கமுடியாமல் மனத்தின்  பாரம்  அழுத்தியது.

ஹீம்...நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான் அகிலேஷ்.

கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தான்.

வீட்டின் வெறுமை அவனை என்னவோ செய்தது. அப்பா இருக்கும்போது வீடு இப்படி அமைதியாக இருக்காது . விடியலிலேயே சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கிவிடும். இந்நேரம் பெட் காப்பி அவனைத் தேடி வந்திருக்கும்.   

திரும்பினான் அகிலேஷ். சுவரில் பதித்த நிலைக் கண்ணாடியில் அவன் முழு உருவமும் தெரிந்தது. நிலைக்கண்ணாடியில் பிரதிபலித்த  அவனது பேரழகுத்  தோற்றமே அவனுக்கு அவன் தாயை நினைவு படுத்துவதால் அவன் பெரும்பாலும் கண்ணாடி பக்கமே போவதில்லை.

‘எல்லாப் பெண்களுமே உன் அம்மா போல் இருக்க மாட்டார்கள்’ அப்பா சொன்னது அவன் காதுகளில் ஒலித்தது

 ‘அம்மா’ என்ற ஒற்றைச் சொல்லில் அவன் மனம் வாடியது. அந்த கிராதாகி அவனை ஆறு வயதில் அனாதையாக விட்டுவிட்டு ஓடியிருக்காவிட்டால் இன்று அவனுக்கு ஏன் இந்த நிலமை வரப்போகிறது?

அப்படியா பிள்ளையை  விட ஒரு பெண்ணுக்கு சினிமா மோகம் முக்கியமாகத் தெரியும்? எழுந்து சென்று  பீரோவின் உள்ளறையில்  இருந்த குடும்ப போட்டோவை  எடுத்துப் பார்த்தான். அவன் அம்மா ஒரு பேரழகி என்பது அவனுக்கு அந்த வயதிலேயே தெரியும். பொன்னிற மேனியும் அடர்ந்த கார் கூந்தலுடன் ஒரு சிற்பம்போல் அவள் முகம் இன்னும் அவன் மனத்தில் பதிந்திருந்தது. இவ்வளோ அழகான ஒரு பெண் சினிமாவில் நடிக்க விரும்பியது தப்பில்லை. ஆனால் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தபின் குடும்பத்தை தவிக்க விட்டு நடிக்கப் புறப்பட்டதுதான் தவறு.

சினிமா மோகத்தில் ஆறு வயது மகனையும் கணவனையும் விட்டு விட்டு மும்பைக்கு  ரயிலேறிய அவளை அதன் பிறகு அவர்கள் பார்க்கவே இல்லை.  வேலையை விட்டு ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி வந்து விட்ட தந்தை புது இடத்தில் காலூன்ற பட்ட பாடும் ,அந்த வயதில் அவனை வளர்க்க தனியாக பட்ட கஷ்டங்களும் அவனுக்கு மறக்கக் கூடியவை அல்ல . அதனால்தான் திருமணத்தை மறுத்து பெண்ணினத்தையே வெறுத்து இன்றுவரை தனிமரமாகவே வாழ்ந்து வருகிறான்.   சுபிக்ஷா வர்மா’ என்ற பெயருடன் இந்தி சினிமாவின் பிரபலமான நடிகையாய் அவன் தாய் சுபத்திராதேவி இருப்பதை பின்னாளில் செய்தித் தாள்கள் மூலம் தெரிந்து கொண்டனர்

நினைவுச் சங்கிலி காலிங் பெல் ஓசையில் அறுந்தது.

கதவைத் திறந்தான் அகிலேஷ். வெளியில் அலுவலக நண்பன் சுபாஷ் நின்றிருந்தான்.  

"ஹாய் அகிலேஷ் , என்ன இன்னுமா  கிளம்பலை?... போச்சு அந்த மானேஜர் கிழம் கிட்டே இன்னிக்கு நமக்கு டோஸ் நிச்சயம்..." என்றபடி உள்ளே நுழைந்தான் சுபாஷ்.

"இல்லடா... இன்னிக்கு எனக்கு மனசே சரியில்லை லீவு போட்டுடலாம்னு பாக்கறேன்”  என்றான்   சோர்வாக.

" ஓகே டா... நா ஆபீஸ்ல இன்பார்ம்  பண்ணிடறேன். ஆமா.. அங்கிள் எங்கே” என்றபடி டீப்பாயின்  மேலிருந்த ஆப்பிள் துண்டை எடுத்தான் சுபாஷ்.

"அவருக்கு என்னைக் கண்டாலே பிடிக்கலையாம். நா எப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேனோ அப்போ தான் வீட்டுக்கு வருவாராம். மும்பைக்கு   அவுங்க தங்கை வீட்டுக்கு போயிட்டாரு. அவரில்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு." என்றான்  அலுப்புடன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.