(Reading time: 6 - 11 minutes)

18. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

ஸ்வின் கவியிடம் கண்களால் விடைப்பெற்றதை பார்த்த ஜனார்த்தனன் தாத்தாவிற்கு மனது மகிழ்ச்சியால் நிறைந்தது.அன்று முழுவதும் கவி மகிழ்ச்சியாகவே இருந்தாள்.தாத்தாவிற்கு  தேவையானவற்றை  செய்வது நித்தியுடன் கதை அடிப்பது,ஜானகி அம்மாவிற்கு உதவி செய்வது என்று தன்னை எப்பொழுதும் சுறுசுறுப்பாக  வைத்துக் கொண்டு இருந்தாலும் அஸ்வினைப் பற்றி எண்ணம் அவளது மனதில் ஓடிக் கொண்டே தான் இருந்தது.அவளால் அவனைப் பற்றி யோசிக்காமல் இருக்கவே முடியவில்லை.காதல் என்ற உணர்வு என்ன என்பதை அவள் உணர ஆரம்பித்தாள்.

.ஜானகி அம்மா தனது கை மணத்தில் மாலை சிற்றுண்டியை செய்து வைத்திருக்க  அவனது வரவை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்தாள் கவி.சதீஷ்,அவனது தந்தை,அவளது மாமனார் என அனைவரும் வந்த பின்பும் அஸ்வின் மட்டும் இன்னும் வரவில்லை.

தன்னுடன் பேசிக் கொண்டிருந்தாலும் கவியின் கண்கள் வாசலில் இருப்பதைப் பார்த்த நித்திக்கு அவள் அஸ்வினை எதிர்பார்ப்பது புரிந்தது.

தனது அருகில் இருந்த சதீஷை  இடித்தாள் நித்தி.அவன் கண்டுக்காமல் இருக்க  அவனை கிள்ளினாள் நித்தி.

“ஆ..”என்று அவன் கத்த அனைவரும் அவர்களையே திரும்பி பார்த்தனர்.”எதுக்குடா..இப்படி  கத்துற..”என்று ஜானகி  கேட்க,

“அம்மா இவ கிள்ளிட்டா அம்மா..”என்று சின்ன குழந்தைப் போல அவன் பிராது சொல்ல,நான் கிள்ளவே இல்லை என்று நித்தி சாதிக்க அங்கே ஒரு குட்டி பிரளயமே நடந்தது அதை பார்த்த கவிக்கு சிரிப்புடன் ஏக்கமும் வந்தது.

தனக்கு இது போல ஒரு குடும்பம் இல்லை என்று..

“நித்தி வயசுக்கு வந்த பொண்ணு...,இப்படியா இருப்ப அடக்கமா இருக்கறது இல்லையா..” என்று பர்வதம்மாள் கூற அமைதியானால் நித்தி.

அவர்களது சண்டை ஆரமிக்கும் பொழுதே வந்து விட்ட அஸ்வின் பார்த்தது கவியின் ஏக்கப் பார்வையை தான்.எதுக்கு இவ பாக்காத தா பார்த்த மாதிரி பாத்துக் கிட்டு இருக்கா என்று யோசிக்க ஆரம்பித்தான் அஸ்வின்.

அவன் வந்ததைப் பார்த்த ஆனந்தி,”வா அஸ்வின் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா..”என்றுக் கூற அப்பொழுதுதான் அவன் வந்ததை  கவனித்தால் கவி ,அவனை பார்த்ததுமே அவளது கண்கள் தானாகவே சிரிக்க ஆரம்பித்தது.

அவளை  பார்த்து ஒரு கண்ணசைவு செய்துவிட்டு தனது அறைக்கு சென்றான் அஸ்வின்.

“டேய் அண்ணா..”என்று மெதுவாக அவனை அழைத்தாள் நித்தி.

“என்னடி என்ன இப்ப..”என்றுக் கேட்டான் சதீஷ்.

“டேய் நம்ப  வீட்டுக்குள்ள ஒரு ரோமான்ஸ் ஸ்டோரி போய்க் கிட்டு இருக்கு நீ அத கவனிக்க இல்லை..”என்று அவள் கூற

“இதுக்கு தான் என்ன அப்ப கிள்ளுனிய எனக்கு எல்லாம் தெரியும் நான் கவனிச்சிட்டு தான் இருந்தேன்..,வயிறு முக்கியமா இல்ல வம்பு முக்கியமானு யோசிச்சேன் வயிறு தான் முக்கியமுன்னு அம்மா செஞ்சத சாப்பிட்ட ஆரம்பிச்சா..நீ சும்மா இல்லமா என்ன கிள்ளிட்டா.., கொஞ்ச நேரம் பொறுமையா இரு ஹீரோ வந்துடட்டும்,அவரையும் சேர்த்து வச்சி செய்யலாம்...”என்றுக் கூறிவிட்டு டிவிப் பார்க்க ஆரம்பித்தான் சதீஷ்.

தனது அறைக்கு சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தான் ஆகாஷ்.வந்தவனிடம் டீ கோப்பையை நீட்டினார் ஆனந்தி.அதை வாங்கிக் கொண்டு வந்தவன் சதீஷின் அருகே அமர்ந்தான்.

அருகே அமர்ந்தவனை எதிரில் நித்தியுடன் அமர்ந்திருந்த கவிப்பார்க்க அவளிடம் கோப்பையை காட்டி குடித்துவிட்டாயா என்று சைகையால் கேட்க,அவளும் கண்களை அசைத்து தான் குடித்துவிட்டதாக அவள் சைகை செய்தாள்.

அதைப் பார்த்த சதிஷும்,நித்தியும் கண்களால் பார்வை பரிமாறிக் கொண்டனர்.

“நித்தி நீ சாயந்தரம் ஆறு மணிலேருந்து ப்ரீ தானா..”என்று சதீஷ் கேட்க

“ஆமா சதீஷ் எதுக்கு கேக்குற..”என்று நித்திக் கேட்க

“உனக்கு ஒரு வேலை நான் தரேன்..”என்றுக் சதீஷ் கூற

“என்ன வொர்க்னா..,நித்திக்கு மட்டும்  தரிங்க..,நான் வேணா ஹெல்ப் அவளுக்கு பண்ணட்டுமா..”என்று கவிக் கேட்க

“நீ பண்ண வேண்டாம் கவி,நித்தி பண்ணாதான் சரியா இருக்கும்...”என்று சதீஷ் கூற அப்படி என்ன வேலை என்று அஸ்வினும் அவனை கேட்க

“நித்தி உனக்கு என்ன வேலைன ஆறு மணி ஆன உடனே இருக்குற எல்லா சாங் சேனலிலும் நீ நான் சொல்லுற பாட்டு கேக்குற..”என்று சதீஷ் கூற

“யாரு மச்சான் உனக்கு மாட்டி இருக்க கானா குயில்..”என்று அஸ்வின் கேட்க

“எனக்கு ஒன்னும் மாட்டல மச்சான்,நம்ப வீட்டுல தான் ரெண்டு சின்ன குழந்தை நாங்க இருக்கோம்னு பாக்காமா ரெண்டு அன்றில் பறவைங்க அலையுது அதுக்கு  தான் ஒரு பாட்டு டேடிக்கேட் பண்ணலாம்னு...”என்று சதீஷ் கூறியதும் அவன் தங்களைத்தான் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்ட அஸ்வின் அவனை  முறைக்க

“அண்ணா பார்த்து பார்த்து கண்கள் பூத்திருக்கும் நீ வரவாய் என..,இந்த பாட்டு ஓகே வா”என்று நித்திக் கூற அப்பொழுதுதான் கவிக்கு புரிந்து அவர்கள் தங்களை தான் கிண்டல் செய்கிறார்கள் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.