(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 13 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

வருகிறேன் என்று நீ உறுதியளிக்கும் வரையில் படபடத்த இதயம் தலையசைப்பில் பட்டுச் சிறகை விரித்துக்கொண்டது. வரப்போகும் அந்தச் சில மணித்துளிகளுக்காகவே காத்திருக்கிறேன், கடக்கிறேன் நிமிடங்களை! 

வினிதாவின் வீல் என்ற அலறல் கமலின் யோசனையைக் கலைக்க அவளறைக்கு ஓடினான், வினிதா உடல் மழையில் நனைந்த பறவையைப் போல வெடவெடவென்று ஆடிக்கொண்டு இருந்தது. என்னாச்சு வினிதா ?! 

தெரியலை ஸார் யாரோ ஒருத்தன் என் அறைக்குள்ளே வந்து என்னை........

ஒகே...பி...கூல்...வினிதா விடுங்க அவன் எப்படியிருந்தான். உங்களுக்கு ஏதாவது அடிபட்டுச்சா ?!

இல்லை, ஸார் உங்க கையிலே என்ன காயம்

ம்.. இங்கே வந்த அதே ஆள் அங்கே என் அறைப்பக்கமும் வந்தான் இப்பதான் அவனை விரட்டினேன் ஆள் இங்கே பூந்துட்டான் போலயிருக்கு, சரி உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே ?!

ம்கூம்... 

நான் என் அறைக்குப் போகட்டுமா ? என்று அவன் திரும்ப , வினிதாவும் தலையசைத்தாள். இருவரும் ஒன்றாக அறைக்குள் இருந்து வெளியே வர அதற்கு காத்திருந்தாற் போல, 

பர்வதம்மாள் கத்த துவங்கினாள். இது என்னடியம்மா கொடுமை, இதைகேக்க ஆளில்லையா ? 

இப்ப என்ன நடந்ததுன்னு நடுராத்திரியில் கத்துறீங்க ? வயசான காலத்திலே இப்படி மாடிப்படி ஏறி கத்துனா பிபி ஏறி சீக்கிரம் மேல போக வேண்டியதுதான். பேசாம போய் படுங்க இந்தநேரத்தில உங்களுக்கு என்ன வேலை இங்கே ?

அதை நான் கேட்கணும் எங்க மாயா இந்த வீட்டை கோவிலா வைச்சிருந்தா ஏதேதோ பொய்யைச் சொல்லி இப்போ உள்ளே வந்து இரண்டு பேரும் நைட்டு நேரத்திலே ...

ச்சீ...உங்களுக்கு நல்லதே நினைக்கத் தெரியாதா ?

சும்மா கத்தாதேப்பா நான்தான் கண்ணுக்கு நேராவே பார்த்தேனே மரியாதையா இந்த வீட்டை விட்டு போயிடுங்க, இல்லைன்னா நாளைக்கு காலையிலேயே உங்க இரண்டுபேரையும் எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திடுவேன்.

ம்..அதுக்கு முன்னாடியே நான் போலீஸ்க்கு போன் பண்ணி எங்க இரண்டு பேரையும் கொலை செய்ய ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கீங்கன்னு உங்க இரண்டுபேர் மேலயும் புகார் பண்ணப்போறேன் கமல் மிரட்ட, போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும், திகைப்பாய் நிமிர்ந்த பர்வதம்மாள் சற்றுநேரம் வாயடைச்சிப் போக, 

நீங்க போய் தூங்குங்க வினிதா வயசாயாயிடுச்சி இல்லை புத்தி குறுக்குத்தனமானத்தான் வேலை பார்க்கும். கமல் சொல்லிவிட்டு திரும்பும் போது, சந்துரு வீட்டுக்குள் நுழைந்தான். பர்வதம்மாள் தன்னுடைய கனத்த உடலைத் தூக்கிக்கொண்டு மேலே நடந்தவற்றைக் கூறினாள். 

சந்துருவின் தலையில் இருந்த கட்டு கமலை யோசிக்க வைத்தது?!

என்ன ஸார் யோசிக்கிறீங்க ?

புதுப்புது அனுபவங்கள் வரும்போது யோசிக்கத் தானே வேணும் வினிதா ? சந்துருவின் தலையில் கட்டு போட்டு இருக்கான் 

ஆமாம்....

நான் இப்போ என் அறைக்கு வந்தவனை அடித்தேன். இப்போ சந்துரு தலையில் கட்டுப் போட்டு இருக்கான் அப்போ ?

அப்போ சந்துருவின் தலையில் உள்ள காயத்தை வைத்துதான் அவரை நீங்கள் அடித்ததாக சொல்லுகிறீர்களா? 

ஆமாம்.... ஏன் ?

அப்படியென்றால்,, வந்தவன் நிச்சயமாய் சந்துரு அல்ல? வேற யாரோ,,, நீங்கள் இன்னமும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் கமல், சந்துருவின் தலையில் ஏற்பட்ட வடு என்னால் உருவானது, காரணம் பழைய காதலை நான் இன்னமும் எண்ணிக் கொண்டு இருப்பேன் என்று மனக்கோட்டைக் கட்டிக்கொண்டு ஒரு மணிநேரத்திற்கு முன்னால் என் அறைக்கு வந்து அத்துமீறிட முயன்றான், நான் மாயாவிற்கும் அவனுக்கும் சேர்த்து துரோகம் செய்கிறேனாம். வசதியானவன் என்றதும் அவனிடம் இருந்த காதலை மறந்து உங்களை வளைத்துப் போட்டு விட்டேனாம். அதே பணம் என்னிடமும் இருக்கிறது. 

அவனை நீதான் கூட்டி வந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன் பேசாமல் கையில் கிடைத்த பிளவர்வாஷை எடுத்து மண்டையில் ஒரே போடு போட்டேன், அதன் விளைவுதான் அந்த காயம். 

அப்படியா ? அப்போது என் அறைக்கு வந்தவன் யார், சந்துருவைத் தாண்டியும் நமக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்ன? இதைப்பற்றி நான் வீராவிடம் பேசிட வேண்டும். என்று வனிதாவிடம் பேசியபடி கிளம்பிடத் துவங்கினான். வனிதா, அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு இருந்தாள். சந்துரு இரவு வந்திருந்தபோது சந்துரு அவளிடம் பேசியது நினைவிற்கு வந்தது. 

உனக்கு என்ன திமிர் இருந்தால் மீண்டும் இந்த வீட்டுக்கு வருவே ?

ஏன் ? உன்னைப் போன்ற துரோகிகள் கூட இருக்கும் இடத்தில் நான் இருக்கக் கூடாதா? 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.