(Reading time: 7 - 14 minutes)

உனக்கு ஏதாவது கடைசி விருப்பம் இருக்கா

ம்... இதை நீயே கேட்கலைன்னாலும் நானே சொல்லணுமின்னுதான் இருந்தேன். கொஞ்சநாளா நீ என்னை ஒதுக்கிறீயோன்னு தோணுது. தற்காலிகமான்னாலும் நான் உன்னை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை ரவி, நமக்குள்ளே அன்னியோன்யம் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சிட்டே வருதோன்னு தோணுது. 

டாக்டர் கொஞ்சநாள் தள்ளியிருக்கச் சொன்னார் ரியா, அதனால்தான் நான் உங்கிட்டே நெருங்குவதைக் குறைச்சிட்டேன் வேறு எதுவும் காரணம் இல்லை

அதுக்காக பேச்சைக் கூட குறைக்கணுமா, ரவி ரொம்பவும் தனிமையை உணர்ந்தா மாதிரி இருந்தது கல்பனா எங்கே ? 

வியிடம் சுப்ரியா கேட்ட அதேநேரம் டாக்டரின் அறையில் சுப்ரியாவின் உடல்நிலையைப் பற்றி அறிந்தாள் கல்பனா

ஆஷா எனக்கு குழந்தைதான் முக்கியம் அதை எனக்கு எடுத்துக் கொடுத்துடு, 

கல்பனா நீயா இப்படி ஈவு இரக்கமில்லாம பேசுறே அந்தப் பொண்ணு இறக்கும் அளவுக்கு வாய்ப்பிருக்கு

ஸோ வாட்.. எனக்குத் தேவை குழந்தைதான் கல்யாணமாகி இத்தனை வருஷத்துல ஒரு குழந்தையில்லாம நான் எத்தனை அவமானப்பட்டு இருப்பேன். இது ஒரு வரம் ஆஷா என் புருஷனையே இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்கிறேன்னா அதுக்கு என் மனசை எவ்வளவோ கல்ஆக்கிக்கணும் , யாரைப் பத்தியும் கவலைப்பட நான் தயாரா இல்லை அவ கருவுற்ற நாளில் இருந்து நிமிஷத்துக்கு நிமிஷம் நான் அந்தக் குழந்தையை கற்பனை பண்ணிக்கிறேன். அது கூட எப்படி பேசணும் சிரிக்கணும் விளையாடணுமின்னு எனக்கு அதுதான் முக்கியம் நீ என் உயிர்த்தோழி தானே சப்போஸ் அவ நல்லபடியா பெத்து வந்தாக் கூட ஏதாவது பண்ணி அவளை கொன்னுடு

கல்பனா,,,,,,,,,உன்னோட குழந்தைத்தனமான முகத்திலே இத்தனை வெறியை நான் பார்த்தது இல்லை, நான் ஒரு டாக்டர் என்னதான் நீ என் உயிர்தோழியா இருந்தாலும், என் தொழிலுக்கு நான் துரோகம் பண்ணத் தயாரா இல்லை, இந்தக் குழந்தையும் அதனோட அம்மாவையும் காப்பாத்த வேண்டியது என் கடமை அதனால, இந்தக் கடமையும் முடிஞ்ச பின்னாடி உனக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நீ போலாம். 

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தோட்டத்தில் எதையோ தேடிக்கொண்டு இருந்தது அந்த உருவம் யார் அது ?கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு பார்த்தான். அந்த உருவம் சுற்றும் முற்றிலும் பார்த்தவிட்டு தன்னை யாராவது கவனிக்கிறார்களோ என்று எதிர்பார்த்துக்கொண்டு, எதையோ தேடியதைப் போல அந்த உருவம் டிரைவர் துரை, அவனின் நடவடிக்கைகள் கமலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், எல்லாரையும் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்று நினைத்தான். இருப்பினும், இந்நேரத்தில் அவனுக்கு என்ன வேலை இருக்க முடியும், துரை என்ன தேடிக்கிட்டு இருக்கீங்க இங்கே ?!

தேடலை ஸார் காத்து வாங்கலான்னு வந்தேன் ஏதோ கால் இடறிச்சு அதான் என்னன்னு ? 

மணி பத்தாச்சு நீங்க கிளம்புங்க அப்புறம் பார்க்கலாம். இதோ வண்டியை ஷெட்டில் விட்டுட்டு கிளம்பினேன் ஸார். 

கமல் அவன் தேடிய அந்த இடத்தில் ஓடிப்போய் தேடினான். ஆனால் என்ன தேடுவது எதைத் தேடுவது என்று யோசிக்காமல் தவிப்பாய் யோசனையிடும்போதே புதரின் அடியில் துழாவினான். கையில் ஏதோ கீறியது சரக்கென்று கையை குத்தியை எடுத்தான். அது உடைந்து போன ஊசி மருந்தின் பாட்டிலில் இலேசாய் மண் அப்பியபடிஇருந்தது அதை பேண்ட் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான். அதை வீராவிடம் சேர்ப்பிக்கவேண்டும் என்று !

மாயா வருவாள்

Epsiode # 13

Epsiode # 15

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.