(Reading time: 8 - 16 minutes)

ஒருவேளை கமல் சொல்றா போல அங்கே தன்னிலை மறந்து இருக்கிறது பெண்தான் மாயாவா அப்படின்னா ? இவங்க எப்படி மாயாவா இங்கே வந்தாங்க ஒரே குழப்பமா இருக்கு ?! மயக்கத்தில் இருக்கும் பெண் எழுந்தா மட்டும்தான் சில தெளிவுகள் கிடைக்கும் அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும், இப்போதான் கமலைப் போல எனக்கும் மாயா இறக்கவில்லையோன்னு சின்னதா தோணுது.

எனக்கு ஒரு யோசனை வீரா ஸார் நாம ஏன் பர்வதம்மாவை கொஞ்சம் பயமுறுத்திப் பார்க்கக் கூடாது.

எப்படி ?

தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான் அசோக். வினிதா விழிகள் விரிய கேட்டுக் கொண்டு இருந்தாள்.

டாக்டர் ஆஷாவின் மேல் கோபத்துடன் அறைக்குள் நுழைந்த கல்பனா அங்கே சுப்ரியாவும் ரவியும் பேசியதை சற்று கடுமையாகப் பார்த்தாள்.

கல்பனாவைக் கண்டதும் சற்றே விலகிய ரவி, ரியாவுக்கு ஆபரேஷன் பண்ணணுமாம் இரண்டு உயிரில் ஒண்ணைத்தான் காப்பாற்ற முடியுமின்னு டாக்டர் சொல்றாங்க ?!

நானும் பேசினேன் நீ பயப்படறீயா சுப்ரியா

இல்லை கல்பனா, இந்தக் குழந்தை உனக்காக இதை நல்லபடியா பெத்துக் கொடுத்துட்டுத்தான் என் உயிர் போகும். கல்பனா ஏதும் பேசாமல் சாப்பாட்டை எடுத்துப் பரிமாறினாள். கல்பனாவின் அன்றைய மெளனத்தை நான் என்மேல் கொண்ட அக்கறை என்று தவறாக எண்ணிக்கொண்டேன். ஆனால் அவளின் மன ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தபோது அவளுக்கு பரிதாப்படத்தான் முடிந்தது?

டாக்டர்கள் பயந்ததைப் போல எனக்கு எந்தப் பிரச்சையும் ஏற்படவில்லை, ஏனோ இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கடவுள் என்மேல் பரிவு கொண்டு விட்டிருக்கிறார் போலும். குழந்தையும் நானும் ஆரோக்கியமாகவே இருந்தோம். எத்தனை பரவசம் சின்ன சின்னதா கை கால்கள் பட்டின் மென்மையோடு, அந்த பிஞ்சு கையோட என் விரலைக் கோர்க்கும் போது கிடைக்கிற சந்தோஷம் இருக்கிறதே, தன் பிள்ளைக்கு முலைப்பால் தரும் சந்தோஷம் அதற்கு ஈடு இணையே இல்லை, நான் குழந்தையை என் மடியை விட்டு இறக்கவே இல்லை, இப்படியே பிள்ளையை மடியிலேயே போட்டு வைச்சிருந்தா மடிச்சுகம் பார்த்துட்டு அழும் கொஞ்சநேரம் கீழே போடும்மா என்று டாக்டர் சொன்னாலும், எனக்கு மட்டும் மனம் கேட்கவே இல்லை, குழந்தை பிறந்து முழுசா ஒருநாள் ஆகலை பத்துமாத பந்தம் பத்து வருஷமாய் தொடர்ந்தது.

ஆனால் தொடருமா ? இது இன்னொருத்தியின் சொத்து அல்லவா, இந்தக் குழந்தை இன்னமும் இரண்டு மூன்று நாட்களுக்கு என் மடியில் இருக்குமா ? மனதில் சொல்லவொண்ா துயரம் எழுந்தது? கல்பனாவும் ரவியும் உள்ளே நுழைந்தனர்.

என்னகல்பனா கோவிலுக்குப் போயிருந்தீங்களா ? குட்டிப்பாப்பா உங்களைத் தேடினாளே ?

கல்பனாவின் பார்வையில் ஏதோ மாற்றம் இருந்ததைப் போல இருந்தது. ஏதும் பேசாமல் என் மடியில் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டாள். பையிலில் இருந்து பால் பவுடரைக் கரைத்தாள்

எதுக்கு பால் பவுடர்

குழந்தைக்கு பால் தரவேண்டாமா ?

நான் இருக்கேன் கல்பனா பிறந்து ஒருநாள் ஆகாத குழந்தைக்கு புட்டிபால் ஆரோக்கியமானது இல்லை, உயிரைக் கூட மதிக்காமல் பிள்ளையைப் பெற்றேனே அதற்கு நான் பால் தர மாட்டேனா ?

நீ தரலாம் ஆனா இந்த பூமியில் ஜனித்தவுடன் அது பாவக்கரங்களில் தவழவேண்டாமே ? அதிலும் இன்னும் எத்தனை நாளைக்கு சுப்ரியா நீ என் கூட இருக்க முடியும். எல்லா மாற்றத்திற்கும் பழகிக்கணும் இல்லையா ? இதோ நாளைக்கே எங்க வீட்டு ஆளுங்க வந்திடுவாங்க அவங்க முன்னாடி நான் உன்னை யாருன்னு சொல்லி அறிமுகப்படுத்துவது ? எல்லா ஆம்பிளையும் தான் யோக்கியம் இல்லையே ஒருவேளை யாராவது உன்னை அடையாளம் கண்டுகொண்டால் அதிலும் சிக்கல், குழந்தைகிட்டே உங்களோட ஒட்டுதல் நல்லதுன்னு எனக்குப் படலை, எல்லாத்தையும் உடைச்சு சொல்ல நான் தயார். ஆனா நீ தாங்குவியா

கல்பனா

நீங்க சும்மாயிருங்க ரவி உடம்பிலே கட்டி வந்தா வலியைப் பொறுத்துகிட்டு அறுவை சிகிச்சை செய்றது இல்லையா ? உண்மை கசந்தாலும் சொல்லிடலாம் அவளோட மனசிலும் எதிர்பார்ப்புகள் குறையும் இல்லையா

கல்பனா நீங்க சொல்றது

புரியணும் சுப்ரியா ?! இந்தக் குழந்தையை பெற்றதோட உன் கடமை முடிஞ்சிது. நான் நாளைக்கு வேற மருத்துவமனைக்குப் போகப்போறேன், இன்னும் இரண்டு லட்சம் அதிகமா கூட தர்றேன்.தயவு செய்து எங்களைவிட்டுப் போயிடு

குழந்தையோட ஒரு தாதியா நான் இருக்க நீ சம்மதிச்சியே இப்போ மாத்திப் பேசறீயே கல்பனா என்னால உனக்கு எந்த தொல்லையும் இருக்காது. எந்தக்காலத்திலும் நான்

இப்பவும் நான்தான் சொல்றேன் என் பிள்ளை மேல உன் நிழல் கூட படக்கூடாது சுப்ரியா, இதுக்குமேல ஏதாவது தகராறு பண்ணினா நான் மனுஷியாவே இருக்கமாட்டேன் அவள் குழந்தையோட அடுத்த அறைக்குச் சென்றுவிட்டாள். என் பார்வை ரவியிடம் சென்றது அவனாவது நான் பேசிக்கிறேன் நீ கவலைப்படாதே என்று சொல்வானா என்று ஏங்கியது. அவன் மெளனம் என் பயத்தை மேலும் அதிகரிக்கது.

மாயா வருவாள்

Epsiode # 14

Epsiode # 16

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.