Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகா

Aathibanin kaadhali

சில நாட்களுக்கு முன்பு

ஆதிரா மிகவும் நல்ல பெண் அடக்கமான பெண் சூதுவாது அறியாத பெண் என்று யாராவது சொன்னால் அவளை பற்றி தெரிந்தவர்கள் யாரும் நம்பமாட்டார்கள். ஆதிரா ஒரு அழகான பெண் சென்னை பெண் என்பதால் துடுக்குத்தனம் ஜாஸ்தி தேவைக்கேற்ப அவள் அப்பாவிடம் பொய் சொல்லி பணம் பிடுங்குவது போரடித்தால் கண்ணில் பட்டவர்களை ஏமாற்றிவிட்டு வேடிக்கை பார்த்து சிரிப்பது தன் தோழிகளிடம் அரட்டையடிப்பது அவர்கள் போடும் பந்தயத்தில் ஜெயித்துக்காட்டி சந்தோஷம் அடைவது. அதற்காக அவள் சிலரை வேண்டுமென்றே வம்பில் மாட்டிவிடுவது மற்றும் பேஸ்புக்கில்  ஃபேக் ஐடி உருவாக்கி மற்றவரை ஏமாற்றுவது போன்ற பல்வேறு குணங்களை கொண்டவள். அவளை பொருத்தவரை அது ஒரு பொழுது போக்கு மட்டுமே அதன் விளைவுகளை பற்றி அவள் ஒரு நாளும் அறியவில்லை. அவள் அப்பா ராமநாதன் ஒரு கிரிமினல் லாயர் சென்னை ஐ கோர்ட்டில் ப்ராக்டீஸ் செய்கிறார். அவருடைய வக்கீல் தொழிலில் கட்சிக்காரர்கள் சார்பாக வழக்கு போடுவதைவிட தன் பெண்ணின் வழக்குகளை சரிசெய்வதே பெரிய வேலையாகிவிடும்.

ஆனாலும் அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அதற்கு காரணம் ஆதிராவின் அம்மா அவள் பிறந்து சில வருடங்களில் காயச்சலில் இறந்துவிட்டதால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் அவளுக்காகவே வாழ்பவர். தன் பெண்ணிற்கு எந்த ஒரு குறையும் வராமல் கவனித்து கொள்வார். அவளின் தேவைகளை உடனுக்குடனே பூர்த்தி செய்வார். அதனாலேயே அதீத செல்லம் கொடுத்து வளர்த்ததால் ஆதிரா வளர வளர பிடிவாதக்காரியாகவும் சேட்டைக்காரியாகவும் மாறினாள். ராமநாதனை பொருத்தவரை தன் மகள் குழந்தையென்றே பாவித்த அவருக்கு அவளின் சேட்டைகளால் ஏற்பட்ட விளைவுகளை கண்ட பின்புதான் தன் மகளின் வளர்ப்பில் அவர் செய்த தவறை உணர்ந்தார்

ஒரு முறை அவள் செய்த தவறினால் அவரின் மானம் மரியாதை போனது. அதனால் ஆதிரா மீது அளவுக்கடந்து கோபத்துடன் திட்டினார் ஆதிராவிற்கு தந்தை ஏன் திட்டுகிறார் என்பதற்கான காரணம் புரியவில்லை. அப்போது ஆதிராவிற்கு ஒரு போன்கால் வந்தது. அது அவளுடைய தோழி வெண்பா உடையது உடனே மகிழ்ச்சியாக போனை ஆன் செய்தாள் ஆதிரா மறுமுனையில்

”ஹலோ ஆதிரா” என வெண்பா பேசினாள்

”சொல்லுடி எப்படி இருக்க” என நலம் விசாரித்தாள் ஆதிரா அதற்கு வெண்பா

”நான் நல்லாவேயில்லைடி” என சோகமாக சொன்னாள்.

”ஏன் என்னாச்சி” என கேள்வியாக கேட்ட ஆதிராவிடம்

”என்ன ஆச்சா எல்லாம் நாசமா போச்சி” என விரக்தியாக பதிலளித்தாள் வெண்பா

”என்னடி உளர்ற புரியறமாதிரிதான் சொல்லேன்” என்று கோபத்தோட கேட்ட ஆதிராவிடம்

”ஆதிரா இங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்கடி” என கவலையாக சொன்னாள் வெண்பா

”வாழ்த்துக்கள்” என மகிழ்ச்சியாக சொன்னாள் ஆதிரா

”நான் ஒருத்தனை காதலிக்கிறேன்டி” என கோபப்பட்ட வெண்பாவிடம் மிகவும் யதார்த்தமாக

”ஓ டபுள் வாழ்த்துக்கள்” என சொல்ல வெண்பாவிற்கு கோபம் வந்தது

”அடி வாங்கப்போற ப்ளீஸ் ஆதிரா எனக்கு உதவி பண்ணு என் காதலனுடன் என்னை எப்படியாவது சேர்த்துவை” என கெஞ்சினாள் வெண்பா

”அப்படின்னா” என ஒன்றுமே புரியாத மாதிரி கேட்டவளை

”வெறுப்பேத்தாதடி ப்ளீஸ்டி உங்கப்பா வக்கீல்தானே எனக்கு ஏதாவது உதவி பண்ணுவார்ல” என ஏக்கத்துடன் கேட்டாள் வெண்பா

”அப்பாவா இப்பதான் அவர்கிட்ட நான் திட்டு வாங்கினேன்” என சோகமாக சொன்னாள் ஆதிரா

”எதுக்கு திட்டு வாங்கின” என வியப்பாக கேட்ட வெண்பாவிடம்

”நான் எதுவுமே பண்ணலைடி என்னை போய் திட்டறாரு” என அவள் சொல்வதை நம்பாத வெண்பா அவளிடம் எரிச்சலாக

”சரி இப்ப எனக்கு உதவ முடியுமா முடியாதா சொல்லு” என கேட்க ஆதிராவும் சிறு நொடி அமைதிக்குப்பின்

”ம் சரி நான் ஊருக்கு வந்து அங்க நிலைமைன்னு பார்க்கறேன் அதுக்கப்புறம் அப்பா கிட்ட சொல்லி உனக்கும் அந்த பையனுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாம் சரியா” என அவள் கூறவும் வெண்பாவிற்கு மகிழ்ச்சி வந்தது. உடனே அவள் பரபரப்புடன்

”சரி எப்போ வர்றடி” என கேட்கவும்

”பொறுடி அப்பாகிட்ட முதல்ல பேசி அனுமதி வாங்கிடறேன். அப்புறம் ஊருக்கு வரும் போது உனக்கு போன் பண்றேன் போதுமா” என்றாள் ஆதிரா அதற்கு வெண்பா

”சரி மறக்காம எனக்கு போன் பண்ணு நான் உனக்காக காத்திட்டு இருக்கேன் சரியா ஓகே பை”

”ஓகே ஓகே பை”

என போனை கட் செய்துவிட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த ஆதிரா தன்னுடைய அப்பாவின் அறைக்கு சென்றாள் அங்கு அவர் கேஸ்கட்டுகளுடன் ஏதோ வேலையாக இருப்பதை கண்டதும் மெதுவாக அப்பாவிடம் பேசத்தொடங்கினாள்.

”டாட்” என அவள் அழைத்ததும் மெல்ல அவளை நோக்கியவர் அவளிடம்

”என்னம்மா” என சாதாரணமாக கேட்டார்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# ஆதிபனின் காதலி - சசிsasi 2018-03-01 15:25
நைஸ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகாHaritah @@@ 2017-11-22 09:48
Super starting .. :clap: waiting for further episodes :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகாSaaru 2017-11-17 18:50
Nice update sasi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகாDevi 2017-11-17 18:11
Interesting update Sasireka (y)
Adhira avanga appa thitra alavirku enna pannina :Q:
inge vandhu enna panna pora :Q:
waiting eagerly to know
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகாAarthe 2017-11-17 17:27
Nice update ji (y)
Haha Adhira apdi Enna pananga :Q: :lol:
Venpa Baradhan love la Enna sikkal :Q:
Looking forward :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகாThenmozhi 2017-11-16 22:02
interesting update Sasirekha (y)

Aathira innocent and bubbly type-a?
Avanga appa romba chellam koduthutara?

Venba-ku help seiren poi intha kalyanathula matikitangala?
appadi enna seithanga?

Waiting to know about it ji.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகாTamilthendral 2017-11-16 19:35
Ooroda perumai nalla irunthathu (y)
Aathira enna thappu seithathala avanga appa manathai kappalethina :Q:
Intha oorla enna seyya pora :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 02 - சசிரேகாmadhumathi9 2017-11-16 18:29
:Q: aadhira chennaiyil seitha thavaru enna :Q: .but adharkku aval varuthapaduvathu pol theriavillaiye? Venba yosippathu pol aadhiraavaal pirachinai varuma? endru therinthu kolla varum epiyai miga aavalaaga ethir paarkkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top