(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 01 - ஆர்த்தி N

maraveno ninnai

ட்டென்று நீர் துளி உச்சந்தலையை தீண்ட “ஐஐஐஐஐ மழை வரப் போகுது” எனத் துள்ளிக் கொண்டு வானத்தைப் பார்க்க, மர இலைகள் காற்றுக்கு இசைந்து தேங்கி இருந்த நீர் துவளைகளை தெளித்துக் கொண்டிருந்தது.

ஏமாற்றத்துடன் அவள் தலையை தொங்க போட்டுக் கொண்டு வர, “ என்ன மேடம் ஃப்யுஸ் போன பல்ப் மாதிரி ஆகிருச்சு மூஞ்சி, இப்ப தான ஷைலு மா மழைல நனைஞ்ச, நீ மழைல ஆட்டம் போட்டது பத்தாதுனு என்னையும் நனைய வெச்சுட்ட “ என நக்கல் + செல்ல கோபமுமாக உறைத்தாள் ரிந்துப்ரியா.

“போ அக்கா இந்த மழை இன்னும் கொஞ்சம் நேரம் வந்து இருக்கலாம்’ல, ஜாலியா இருந்தா MR. வருணபகவானுக்கு கூட அது பொறுக்கலையா?!?!” என தன் மனக்குமுறளை வெளியிடும் ஷைலு என்கிற ஷைலாரன்யா சென்னையிலுள்ள ஓர் தனியார் பள்ளி ஆசிரியை!

“நீ இப்படி மழைல நனையறத உன் ஸ்டூடண்ட்ஸ் பார்த்திருக்கனும் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸராஅஅஅ இது’னு ஆச்சர்யப்பட்டிர்பாங்க”… என ரிந்து கூறவும்

“ஹஹா அது ஸ்கூல்’குள்ள மட்டும் தானு என் பசங்களுக்கும் தெரியும் க்கா. இருந்தாலும் டீச்சரா இருந்தா மழை’ல நனைய கூடாதுனு இருக்கா என்ன?!?!.. சரி என்ன இந்தப் பக்கம் திடிர்னு வந்திருக்க?” என சந்தேகமாக தன் தமக்கையை நோக்கினாள்.

“ஏன் என் தொங்கச்சிய நான் பார்க்க வரகூடாதா?”என நக்கலாக பக்கதவளின் தலையை தட்டினாள்.

“இல்ல அதிசயமா அத்தான் உன்னை இங்க தனியா அனுப்பியிருகாங்க’னா சம்திங்க் ஃபிஷி” என பலமாக யோசித்தாள் ஷைலு.

“ஏய் வாலு அவர சொல்லலனா உனக்கு ஆகாதே.. எல்லாம் உனக்கு ரோடு’லையே விளக்கனுமா.. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என இருவரும் வீடு நோக்கி நடந்தனர்.

ரவணன்-விஜயலக்ஷ்மி தம்பதியரின் செல்வ புதல்விகள் தான் ரிந்துப்ரியா மற்றும் ஷைலாரன்யா. இருவருக்கும் நான்கு வருடங்கள் இடைவெளி இருந்தாலும் மிகவும் நெருக்கமானவர்களே. எவ்வொரு விஷயம் இருவரின் வாழ்க்கையில் நடந்தாலும் மற்றொருவரிடம் பகிரவில்லை எனில் அன்று அவர்களது நாள் செல்லாது. சரவணன் மற்றும் விஜயலக்ஷ்மிக்கு இதில் என்றுமே பெருமை தான். தங்களது செல்ல மகள்களின் ஒற்றுமையைக் கண்டு.

ரிந்துப்ரியாவிற்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லை என்பது தவிர அவள் வாழ்க்கை மிகவும் இனிமையாகவே செல்கிறது. அவள் கணவன் சூர்யா ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவணம் ஒன்று திறம்பட நடத்தி வருகிறான். அவனது அயராத உழைப்பால் இன்று பல மடங்கு உயர்ந்திருக்கிறது அவனது கனவான நிறுவணம். மனைவி பெற்றோரிடம் மிகுந்த அன்புடையவன். மனைவியின் தங்கை தனக்கும் தங்கை தான் என ஷைலுவிடம் ஒரு அண்ணனைப் போல பாசம் காட்டுவான்.

ஷைலு மிகவும் சூட்டிகையான பெண். ஆனால் அவள் அவ்வாறு இருப்பது தனக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் மட்டுமே. தனது அன்பால் எவரையும் கட்டி போட்டுவிடுவாள். மற்றபடி அவளின் தோற்றத்தை வாசகர்களாகிய நீங்களே உங்களுக்கு பிடித்த மாதிரி கற்பனை செய்து கொள்ளலாம் ;-)

காலிங் பெல் அடித்து விட்டு கதவு திறப்பதற்காக இருவரும் காத்திருந்தனர். வாயில் திறக்க சிறிது நேரம் பிடிக்க “என்ன ஷைலு யாரும் இல்லையா?”

“லூசா அக்கா நீ.. யாரும் இல்லாத வீட்ல பெல் அடிப்பனா”

“ப்ப்பாஆஆ கடிக்காத டா” என ரிந்து கூறவும் செல்லமாக ஷைலு சினுங்கவும் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

“ஷைலு நீ என்ன குழந்தையா எல்லாத்துக்கும் சினுங்கிட்டு” என அந்நடுத்தர வயது பெண் அவளின் காதைப் பிடித்து திருக “அத்தை இதெல்லாம் ஓவரா இல்ல.. அக்கா என்னடா நா மழை’ல நனைஞ்சா டீச்சர்’லா நனையக் கூடாது நு டீச்சர்’கெ பாடம் எடுக்கறா நீங்க என்னடானா இப்படி. ஷைலு பாவம் டா நீ” என அவளே அவளிற்கு பாவம் பார்க்க..

“ரிந்து வாடா கண்ணா வரேன்னு என்கிட்ட சொல்லவே இல்லை..”

“ரொம்ப நாள் ஆச்சு’ல அத்தை அதான் ரெண்டு நாள் இங்க இருக்கேன்னு அவர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்”

“நா ஒருத்தி வெளியவே வெச்சுப் பேசிட்டு இருகேன்.. உள்ள வாங்க ரெண்டுப் பேரும்”

உள்ளே வந்த ரிந்து நேராக ஹாலில் மாட்டி வைத்திருந்த சரவணன் விஜயலக்ஷ்மி புகைப்படம் எதிரே கைக்கூப்பி கண்மூடி சில நொடிகள் நின்றாள். அது அவளது வழக்கமே. பார்த்திருந்த ஷைலு மற்றும் அத்தைக்கும் லேசாக கண்கள் கலங்கின.

ஆம் இரு வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் அவர்களிருவரும் தங்களின் அன்பான பெற்றோர்களை இழந்திருந்தனர். ஷைலு மற்றும் ரிந்து தான் மஹாபலிபுறத்தில் ரிசார்ட் புக் செய்து அனுப்பி வைத்தார்கள் ஒரு ப்ரேக் அவர்களுக்கு அவசியம் என்று. ஆனால் இரண்டு மணி நேரத்தில் அவர்களுக்கு கிட்டிய செய்தியோ தங்களின் பெற்றோர் தங்களை விட்டு சாலை விபத்தில் ஒரேடியாக பிரிந்து விட்டனர் என்று. சூர்யா தான் முன்னின்று அனைத்து காரியங்களையும் செய்தான். ஷைலுவை இவர்களோடு வர சொல்லி வற்புறுத்தி அழைத்தும் அவள் வர மறுத்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.