(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 08 - சகி

Uyiril kalantha urave

தூரலில் சிலிர்க்க செய்யும் மழைத்துளிகளில் கவனம் சிதறாமல் கவனம் பதிக்காமலிருந்தாள் சிவன்யா.சில காலங்களாய் அனைத்திலும் வெறுமை மட்டும் தான் அவளுக்கு!!காதலில் சில நிகழ்வுகள் கட்டாயமாகி விடுகின்றன போலும்!!

நினைவுகள் எல்லாம் எங்கெங்கோ பறந்திருக்க,பாவையின் சரீரம் மட்டும் பூவுலகினில்!!எங்கெங்கோ சிதறி இருந்த அவள் சிந்தனையை ஒன்றிணைத்தது அக்கைப்பேசி அழைப்பு!!திரையில் ஔிர்ந்த பெயர் கண்டதும்,முகம் மலர்ந்து மனம் குளிர்ந்தது அவளுக்கு!!

"ஹலோ!"

"டிஸ்டர்ப் பண்ணிட்டேனாமா?"

"இல்லை...நான் சும்மா தான் இருக்கேன்!சொல்லுங்க!"

"இல்லை...உன் ஞாபகமா இருந்தது.அதான் போன் பண்ணிட்டேன்!"-அவள் மனதை படித்தவன் போல் அவள் எண்ணத்தினை கூறினான் அசோக்.

"ம்....கலெக்டர் சார் முதல்ல டியூட்டியை பாருங்க!"

"டியூட்டியை பார்த்துட்டே உன்னையும் கொஞ்சம் கவனிக்கலாம் தான்!"

"அப்படியா?சரி சொல்லுங்க!நீங்க என்னை விரும்ப ஆரம்பித்து இது எத்தனையாவது மாதம்??"

"நாலாவது மாதம்!"

"நான் என் விருப்பத்தை சொல்லி எத்தனை மாதம் ஆகுது?"

"மூன்று மாதம்!"

"சாருக்கு இன்னும் எத்தனை நாள் லவ் பண்ணிட்டு இருக்க ஆசை?"

"வாழ்க்கை முழுசும்!"

"ஐயோ!நான் அதை கேட்கலை!"

"வேற என்ன கேட்கிற?"புரிந்தும் புரியாதவனாய் கேட்டான் அவன்.

"ம்...நீங்க எல்லாம் என்ன தான் படித்து கலெக்டர் ஆனீங்களோ!"சிணுங்கினாள் சிவன்யா.

"என்ன பண்றது?எங்கம்மா அப்பாவியா வளர்த்துட்டாங்க!"

"யாரு நீங்க அப்பாவியா?"

"இல்லைங்கிறீயா நீ?"

"சத்தியமா இல்லை!"-அவனிடமிருந்து புன்னகை பதிலாக வந்தது.

"வீட்டுல சொல்லிட்டியா?"

"இல்லை..."

"இன்னும் சொல்லலையா?"

"ம்...பயமா இருக்கு!"

"நான் வந்து பேசட்டுமா?"

"பேசலாம்!ஆனா,அம்மாவை நினைத்தால் தான் பயமா இருக்கு!"

"ஒருவேளை அவங்க சம்மதிக்கலைன்னா என்ன பண்ணுவ சிவா?"

"அப்படி நடக்க வாய்ப்பில்லை!"

"நடந்தா??"-சில நொடிகள் கனத்த மௌனம்!அவனோ,அவனது பதில் யாதென எதிர்நோக்கினான்.

"நான் வாக்கு கொடுத்திருக்கேங்க!அம்மாக்கிட்ட வாக்கு கொடுத்திருக்கேன்!என்னிக்கும் உங்களைவிட்டு கொடுக்க மாட்டேன்!"

"............"

"ஹலோ?"

"ம்...சொல்லும்மா!"

"ஏன் பேச மாட்றீங்க?"

"ஒண்ணுமில்லைம்மா!அம்மா உயிரோட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுது!அவங்க வந்து இந்நேரம் பொண்ணு கேட்டிருப்பாங்க!"

"ம்...இப்போதும் எதுவும் கெட்டுப் போகலை!எதாவது பண்ணுவாங்க!"-உறுதியாய் வெளியானது அவள் குரல்.

"சிவா!"-கைப்பேசியில் உரையாடுகையில் தந்தையின் குரலை கேட்டவள் திடுக்கிட்டு,பட்டென இணைப்பைத் துண்டித்தாள்.

"அப்பா?"-அந்த முகத்தில் ஒரு கலக்கம்!!

"யார் கூட பேசிட்டு இருக்கம்மா?"

"அது...வந்து...?"

"என்கிட்ட எதாவது மறைக்கிறீயா?"

".................."

"என்ன விஷயம் சொல்லு கண்ணா!"

"அப்பா!அது....நான் ஒருத்தரை விரும்புறேன்!"-உறுதியானது!உதயக்குமாரின் மனதிலிருந்த சந்தேகம் உறுதியானது!!

"யாரு?"

"அன்னிக்கு நான் டிராப் பண்ணேன்னு சொன்னேன்ல!அவர் தான்..."

"................."

"அவர் பெயர் அசோக்!ரொம்ப நல்லவர்பா!"

"நம்ம டிஸ்ட்ரிக் கலெக்டர்!"-அவள் கூறியதும் தூக்கிவாரிப் போட்டது அவருக்கு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.