(Reading time: 10 - 20 minutes)

"ஒருவேளை அவங்களுக்கு என் எண்ணத்தில் விருப்பமில்லையா?"-என்ற கிலி அவன் இதயம் முழுதும் பரவியது.

நெடுந்நேரமாய் தட்டிய கதவை மனமின்றி திறந்தாள் சிவன்யா.

"ஏ...எவ்வளவு நேரமா தட்டுறேன்டி?திறக்க ஏன் இவ்வளவு நேரம்?"

"தலைவலிம்மா!கொஞ்ச நேரம் படுத்தேன்,தூங்கிட்டு இருக்கேன்மா!என்ன விஷயம்மா?"

"இந்தப் போட்டோவைப் பாருடி!"

"மா!ப்ளீஸ்!எத்தனைமுறைம்மா?விடுங்களேன்!"

"எத்தனைமுறையா?ஒரே முறை தானே பார்த்தோம்?இந்தப் பையனை பாரு நிச்சயம் உனக்குப் பிடிக்கும்!"

"அதெல்லாம் வேணாம்!எனக்குப் பிடிக்கலை!"-வெறுப்புடன் கூறினாள் அவள்.

"பார்க்காம சொல்ல கூடாது கண்ணா!"-கதவருகே இருந்து ஒலித்தது உதயக்குமாரின் குரல்.நம்பவே முடியாமல் தன் தந்தையை பார்த்தால் சிவன்யா.

"நீ பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொன்னா நான் ஏற்றுக்கொள்கிறேன்!"-என்றவர் மீது தன் அக்னிப் பார்வையை வீசியவள்,தன் தாயிடமிருந்த புகைப்படத்தை பறித்துப் பிரித்தாள்.

"பார்த்துட்டு பிடிக்லைன்னு சொன்னா போதும் தானே!"-என்றப்படி அதைப் பிரித்தவளின் விழிகள் அதிலிருந்து விலக மறுத்தன.வெறுப்புடன் மேய்ந்த விழிகள்,அதிர்ச்சியில் ஸ்தம்பித்தன.

"பையன் பெயர் அசோக் குமார்!நம்ம ஊர் கலெக்டர்!வீட்டுக்கு ஒரே பையன்!தங்கமான குணம்!நேர்மையான ஆபிசர்!பாரப்பட்சம் பார்க்காம கரெக்ட்டா நடந்துப்பான்!"-என்றார் புன்னகைத்தப்படி!!

"ம்...பாரு!அன்னிக்கு நம்ம ஊர் கலெக்டர் பெயர் என்னன்னு கேட்டா,யாருக்கு தெரியும்னு சொன்ன?இன்னிக்கு அவரே உனக்கு வரனா வந்திருக்கார்!"-சிவன்யாவின் நன்றி கலந்தப் பார்வை அவள் தந்தையை அடைந்தது.

"என்ன!அவருக்கு யாரும் இல்லையாம்!உன்னை கூட்டு குடும்பத்துல கல்யாணம் பண்ணி தரணும்னு ஆசைப்பட்டேன்.பரவாயில்லை,உங்க அப்பா சொல்றதை பார்த்தா தேடினாலும் இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான்னு தோணுது!உனக்கு பிடித்திருக்கா?"

".................."

"பொறுமையா யோசித்து சொல்லு கண்ணா!உனக்கு பிடிக்கலைன்னா வேற வரன் பார்க்கலாம்!"

"பா!?அது...வந்து...பிடித்திருக்குப்பா!"-அவள் வாக்கு மீனாட்சியிடம் மலர்ச்சியை ஏற்படுத்தியது.

"முருகனுக்கு தான் நன்றி சொல்லணும்!"-நிம்மதி பெருமூச்சுவிட்டார் அவர்.

"பாப்பா!நீ யாரோ உன் ஃப்ரண்ட்டை பார்க்க போகணும்னு சொன்ன தானே!போய் பார்த்துட்டு அப்படியே இந்தச் சந்தோஷமான விஷயத்தை சொல்லிட்டு வா!"-மறைமுகமாக கூறினார் உதயக்குமார்.

"சீக்கிரம் வந்துடு!ரொம்ப நேரம் பண்ணாதே!நான் போய் இருக்குற வேலையை முடிக்கணும்!"-என்று பரபரப்புடன் வெளியேறினார் மீனாட்சி.தாயின் பிம்பம் மறைந்ததும்,தந்தையை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் சிவன்யா.

"ஏ....என்னம்மா?"

"தேங்க்ஸ்பா!"

"என்னடா நீ?இது உன் வாழ்க்கைடா!உனக்கு வாழ முழு உரிமை இருக்கு!ஆனா ஒரு விஷயம்!"

"என்னப்பா?"

"கல்யாணம் முடியுறவரை உங்க லவ் மேட்டர் அம்மாக்கு போக வேணாம்!அவளுக்கு காதல் மேலே நம்பிக்கை இல்லைன்னு தெரியும்ல!கல்யாணத்துக்கு அப்பறம் நானே சொல்லிடுறேன் சரியா?"

"ம்...சரிப்பா!"

"போ!என் மருமகனை பார்த்து இந்த சந்தோஷத்தை சொல்லிட்டு வா!"

"சரிங்கப்பா!"-தந்தையின் வாக்கு பலிதமானதை கண்டவள்,நிகழ்ந்தவையை கூற,இதயத்தில் ஓவியமாய் வரையப்பட்டவனின் இல்லம் நோக்கி விரைந்தாள் அவள்.

தாயின் விலகலை தீபத்தின் வழி உணர்ந்தவன் ஒன்றும் புரியாமல் ஸ்தம்பித்திருந்தான்.

"அசோக்!"-மனம் முழுதும் பூரிப்புடன் அவனை காண ஓடி வந்தாள் சிவன்யா.

"வாம்மா!"-அவன் முகம் மனதின் வாட்டத்தை அப்பட்டமாய் பறைச்சாற்றியது.

"என்னாச்சு?ஒரு மாதிரி இருக்கீங்க?"

"ஒண்ணுமில்லை..."-அவன் விழிகள் நிலைக்கொள்ளாமல் தவித்தன.

சிவன்யாவின் பார்வை ஔிராமல் இருந்த தீபத்தின் மேல் தஞ்சமடைந்தது.

"என்ன நீங்க?விளக்கு கூட ஏற்றாமல் இருக்கீங்க?"

"சிவா வேணா...."-அவன் கூறி முடிப்பதற்குள் அவ்விளக்கினை உயிர்ப்பித்தாள் சிவன்யா.அதுவோ,என்றுமில்லாத பிரகாசத்துடன் உயிர் பெற்றது.

"வர வர உங்க பையனுக்கு பொறுப்பே இல்லைம்மா!இனி கவலைப்படாதீங்க!உங்க மருமகள் சீக்கிரம் வந்துடுவாள்!அப்பறம் எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்!"-தன் மறு அன்னையிடம் கணவனை குறித்து கடிந்துக் கொண்டாள் அக்கன்னிகை.

அவனோ எதையும் நம்பவே முடியாமல் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.